Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU   08 SEP, 2024 | 09:55 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

நியூயோர்க் சிட்டி ப்ளஷிங் மெடோவ்ஸ் ஆர்த்ர் அஷே அரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரினா சபலென்கா சம்பியனானார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு செட் முன்னிலையிலிருந்த சபலென்கா 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் கோக்கோ கோவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தார்.

இந்த வருடம் நடுநிலையாளராக போட்டியிட்ட 2ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா 2 நேர் செட்களில் வெற்றியீட்டி சம்பயினானார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இரண்டு செட்களிலும் பெக்யூலாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட சபலென்கா 7 - 5, 7 - 5 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார்.

தனது முதலாவது மாபெரும் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடிய தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ள பெக்யூலா இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 5 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தார்.

ஆனால் அடுத்த 4 ஆட்டங்களிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சபலென்கா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டார்.

இந்த வருடம்  அவர்   வென்றெடுத்த இரண்டாவது மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். அத்துடன் டென்னிஸ் வாழ்க்கையில் அவர் வென்றெடுத்த 3ஆவது மாபெரும் சம்பியன் பட்டம் இதுவாகும்.

அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் இந்த வருடம் தனது 2ஆவது தொடர்ச்சியான சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/193182



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.