Jump to content

இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது.

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது.

இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்\” இவ்வாறு அவர் பேசினார்.
 

https://akkinikkunchu.com/?p=292308

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.
    • அரகலய போராடடத்தின் போது...  உங்கள் அப்பா, திருகோணமலை கடற்படை தளத்திலும், உங்கள் சித்தப்பா கோத்தா... டுபாய், சிங்கப்பூர், மாலதீவு என்று ஒளித்துத் திரிந்தும்... ஒரு நாடு தங்குவதற்கு விசா கொடுக்காமல் அலைக்கழித்ததும்... பின்... ரணில் வந்தவுடன், நைசாக  நாட்டுக்கு வந்ததையும்... அந்த நேரம் ... உங்கள் மனைவி, பிள்ளைகளுடன்  நாட்டை  விட்டு ஓடியவர்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை.  
    • 21 Sep, 2024 | 06:33 AM   துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (20) சென்ற டொன் பிரியசாத் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.   நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டொன் பிரியசாத் என அழைக்கப்படும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 8.35 மணிக்கு துபாய்க்கு செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்த வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6 ஆவது பிரதிவாதியாக டொன் பிரியசாத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. துபாய் செல்ல விமானநிலையம் சென்ற டொன் பிரியசாத் திருப்பி அனுப்பப்பட்டார் ! | Virakesari.lk
    • வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன்  21 Sep, 2024 | 04:31 PM தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மட்டு. அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவு செய்தார். இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (21) நடைபெற்று வருகிறது.  நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக காலை 7 மணி முதல்  தமது வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன்  | Virakesari.lk    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.