Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN   23 SEP, 2024 | 07:58 AM

image
 

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் அனுரகுமாரதிசநாயக்கவும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள் மக்கள் வழங்கிய ஆணையை இந்த அமைச்சரவை பிரதிபலிக்கும் என  அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளுடன் இணையாமல் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம் மக்கள் வழங்கிய ஆணையை முன்னெடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் யார் என்ற கேள்விக்கு ஹரிணி அமரசூரிய குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, என தெரிவித்துள்ள அவர் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194568

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களின் வறுமையை போக்கி நாட்டை சொந்த உற்பத்தியில்.. வளர்க்காமல்.. மீண்டும் வெளியார் கடன்.. ரோட்டு போடுதல்.. மாடி கட்டுதலில்.. இறங்கினால்.. சொறீலங்கா முன்னேற வாய்ப்பில்லை ராஜா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நாளைய(24) தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின்(npp) மூத்த தலைவர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்(parliament) விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜித ஹேரத் மற்றும் ஹரிணி அமரசூரிய

தற்போது விஜித ஹேரத்(vijitha herath) மற்றும் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) ஆகியோர் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களாக உள்ளனர். அவர்களுடன் விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிடமான ஆசனத்திற்கு லக்ஸ்மன் நிபுணராச்சியும் இணைந்து கொள்ளவுள்ளார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் ஆட்சியமைக்குமா அல்லது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படலாம் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கு, மலையக பிரதிநிதிகள்

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளக்கினார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

சமரசிங்க தனது உரையின் போது, 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அநுர உட்பட நான்கு பேர் அமைச்சரவையில்

“ஆரம்பத்தில், தோழர் அநுர உட்பட நான்கு பேர் எமது அமைச்சரவையில் இருப்பார்கள். மேலும் கலந்துரையாடலுக்கு பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக அமைச்சரவை விரிவுபடுத்தப்படலாம்,” என்றார்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போவது யார்..! | Who Will Be In Npps Interim Cabinet

இதேவேளை, புதிய ஜனாதிபதி அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்ன நேற்று ஆதரவாளர்களுக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் சுங்க அதிகாரியான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/who-will-be-in-npps-interim-cabinet-1727089789#google_vignette



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.