Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது


நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன் 

They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது. 

இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும். 

அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

பா.உதயன் ✍️ 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்! இப்போது  சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.
    • இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.