Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடற்புலிகள் உத்தியோகபூர்வ அமைப்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டதை கண்டித்த மக்கள் விடுதலை முன்னணி

 

செவ்வாய்க்கிழமை, 22 சித்திரை 2003

JVP Press Conference 22.04.03

புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கையரச கடற்படைக்குச் சமனாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இதுகுறித்த விவாதம் ஒன்றிற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறது.

சமாதான ஊக்குவிப்பாளர்கள் என்கிற முகமூடிக்குள் ஒளிந்துநின்று கொண்டு நோர்வே அரசாங்கமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயற்பாடு வருகிறார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். மேலும் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல் மீதும், இலங்கை இராணுவத்திற்கான வழங்கற் கப்பல் மீதும் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அவர் கண்டித்தார். 

புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பிராந்தியத்திற்குள் செயற்பட்டுவரும் கடற்புலிகள் ஒரு நிழல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ படையணி என்று கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதனை ரணில் அரசு இதுவரை ஏன் மறுதலிக்கவில்லை என்றும் அவர் கேள்வி கேட்டார். 

மேலும் புலிகள் ஏழாம் கட்டப் பேச்சுக்களில் பங்குபற்றுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும், யுத்தம் ஒன்றிற்குத் தயாராகி வருகிறார்கள் என்பதை தான் அனுமானிப்பதாகவும் கூறினார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8831

  • Replies 237
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

Kavi arunasalam

ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

ஈழப்பிரியன்

ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூதூரில் புலிகளின் நடவடிக்கைகளால் நாடு பிளவுடபப்போகிறது என்று கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி

வெள்ளி, 25 சித்திரை 2003

Demonstrators

மூதூரில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் நாடுபிளவுபடப்போவதாகவும், ரணில் அரசாங்கமும் நோர்வே நடுநிலையாளர்களும் புலிகளின் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Anjana Umma and supporters

மேலும் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரான அஞ்சான் உம்மா தெரிவித்தார்.

Demonstrators

மக்கள் விடுதலை முன்னணியும், தீவிரவாத சிங்கள பிக்குகள் அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8852Lipton junction march

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடற்புலிகளுக்கான சுதந்திர கடல்வழிப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது கண்காணிப்புக்குழு ‍ கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 6 வைகாசி 2003

கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டிருப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றின் கடற்படை தனது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கோருவது அந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்று கூறியிருப்பதோடு இவ்வாறு செய்வது கடற்புலிகளின் தங்குதடையின்றிய கடல் வழிப் போக்குவரத்திற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு வசதிகள் செய்துகொடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

இதேவேளை அரசால் உயர் பாதுகாப்பு வலய ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் தனது பரிந்துரைகளுடன் கொழும்பை வந்தடைந்திருக்கிறார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8931

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களை முறியடித்து, இந்தியாவின் ஸ்த்திரத்தனமையினைக் காப்பதற்காக யுத்த நிறுத்தம் முறியடிக்கப்பட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 8, வைகாசி 2003

அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைக் காக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவுமென்று உருவாக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது.

நடந்துவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி, புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருகின்றன.

தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதை முற்றாக எதிர்த்துவரும் இக்கட்சி, இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே என்றும் கூறிவருகிறது. மேலும் தமது கட்சியின் கீழ் உருவாக்கப்படும் சோசலிஸ் அரசே இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்றும் அது கூறுகிறது.

சரித்திர ரீதியில் தீவிர இந்திய எதிர்ப்புவாதக் கட்சியாக அறியப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் திடீர் இந்திய விசுவாசம், அது இந்தியாவினால் களமிறக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ரணில் அரசின் முக்கியஸ்த்தர்கள் கூறுகிறார்கள்.

யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி, நாட்டில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்குவதன் மூலம், சந்திரிக்காவினூடாக‌ பேச்சுக்களை நிறுத்தி, உடனடியான போரிற்குள் இலங்கையைத் தள்ள இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியூடாக முயல்வதாகவும் கருதப்படுகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8942

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைக்கால நிர்வாகத்தினை முறியடித்தே தீருவோம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை

திங்கள், 26 வைகாசி 2003

mayday_jvp_4_010501.gif

புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்தை ரணில் அரசு வழங்க முற்படுமானால் அதனை முறியடித்தே தீருவோம் என்று தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்திருக்கிறது.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பிற்கெதிராகச் சென்று புலிகளின் கோரிக்கையினை ரணில் அரசு நிறைவேற்றுமானால், அதனைத் தடுத்து நிறுத்த தனது கட்சி அனைத்து வழிகளிலும் போராடும் என்று கூறினார்.

வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவது, நாட்டைப் பிரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன் சிங்கள மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் நலன்களுக்கும் விரோதமானதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். 

ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா, புலிகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக்கொடுக்கும் ரணில் அரசின் முடிவை முறியடித்து விடுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9072

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைக்கால நிர்வாக சபை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிக்கா கூட்டணி

வெள்ளி, 30 வைகாசி 2003

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு புலிகளின் பிரசன்னத்துடனோ அல்லது இன்றியோ நடைபெறுதல் அவசியம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறியிருக்கிறது. மேலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளூடாக எட்டப்பட்ட அரசியல்த் தீர்வு அமுல்ப்படுத்தப்பட்டால் அன்றி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படல் கூடாதென்றும், அப்படி உருவாக்கப்படும் சபை கூட சில நிபந்தனைகளுடன் தான் உருவாக்கப்பட முடியும் என்றும் அது கூறியிருக்கிறது.


ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருங்கிய சகாவான மங்கள சமரவீர இதுகுறித்துப் பேசும்போது, இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுதலில் தமக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். முதலாவது புலிகள் அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட வேண்டும். மேலும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்குத் தடையாக இருக்கும் புலிகளின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை இரண்டிற்குமான புலிகளின் அரசியல்த்துறையின் எழுத்துமூல உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவது குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறினார்.

 

யுத்த நிறுத்தம், பேச்சுக்கள், இடைக்கால நிர்வாக சபை ஆகியவற்றிற்கெதிரான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சந்திரிக்கா கட்சியினரின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பணித்துபோயுள்ள ரணில் அரசாங்கம்,நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இடைக்கால நிர்வாக சபையின் உருவாக்கத்தினை அனுமதிக்காது என்பதை  புலிகளிடம் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9091

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளுக்கு இடைக்கால நிர்வாக சபையினை வழங்காதே ‍- கொழும்பில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் 10,000 ஆதரவாளர்கள்

வெள்ளி, 06 ஆனி 2003

JVP protest in Colombo
தீவிர சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கொழும்பில் கூடிய 10,000 இற்கும் அதுஇகமான அக்கட்சியின் ஆதரவாளர்கள், தமிழர்களுக்கான இடைக்கால நிர்வாக சபையினை ரணிலின் அரசு வழங்கக் கூடாதென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பதாதைகளையும், ரணில் அரசைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் காவி வந்தனர்.

JVP protest in Colombo

இப்பேரெணியில் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9147

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளின் ஆயுதக் கப்பலை முல்லைத்தீவுக் கடலில் அழிக்க உத்தரவிட்டது நானே, ரணில் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது எப்படித் தவறாகும் ? சந்திரிக்கா

திங்கள், 23, ஆனி, 2003

SLFP Convention

"இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டுவந்த கப்பலை அழிக்க உத்தரவிட்டேன்" என்று சந்திரிக்கா தனது கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். 

"புலிகள் இன்னொரு போருக்குத் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிந்திருந்தேன். எனது தளபதிகளுடனான அண்மைய கலந்தாலோசனைகளின்போது இது உண்மையென்று எனக்கு நிரூபணமானது. சமாதானப் பேச்சுக்கள் எனும் போர்வையினூடாக பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஆயுதங்களைக் கொண்டுவந்து குவிப்பதை ரணில் அரசு ஊக்குவிக்கிறது. இது இப்படியே நடந்துகொண்டுவருவதை என்னால் அனுமதிக்க முடியாது. ஆகவேதான் முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் கப்பல் வரும்போது எனது கடற்படையினை அனுப்பி அழிக்கச் செய்தேன்" என்று அவர் மேலும் கூறினார். 

"ரணிலின் அரசு புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியினருடன் கூட்டுச் சேர்வது எப்படித் தவறாக முடியும்?" என்றும் அவர் வினவினார்.

slfp_2.jpg

முல்லைத்தீவிற்கு அருகே நடுக்கடலில் அழிக்கப்பட்ட புலிகளின் கப்பல் குறித்து ரணில் அரசின் பாதுகாப்புச் செயலாளர் திலக் மாறப்பன கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படை தெரிவிக்கும் தகவல்களுக்கும் புலிகளின் தகவல்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் புலிகளின் கப்பலை முதன்முதலாக காலை 3:15 மணிக்கு கடற்படை கண்டுவிட்டதென்றும், தாக்குதல் 5 மணிக்கு நடத்தப்பட்டபோதும், காலை 7 மணிவரை தனக்கோ அல்லது கடற்படைத் தளபதிக்கோ இத்தாக்குதல் குறித்து,  தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரோ, ஜனாதிபதி சந்திர்க்காவோ தெரிவிக்கவில்லையென்றும் அவர் கூறியிருந்தார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9273

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

சமாதான முயற்சிகளுக்கெதிரான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணியினர்

புதன்கிழமை, 25 ஆனி 2003

Wimal_.jpg

ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பேச்சுக்களுக்கெதிராக தொடர்ச்சியான போராட்டங்களை தீவிர இனவாத மாக்ஸிஸ்ட்டுக்களான மக்கள் விடுதலை முன்னணியினர் நாடெங்கிலும் நடத்தி வருகின்றனர். இதன் இன்னொரு கட்டமாக கொழும்பில் இன்று அக்கட்சி சுமார் 5000 ஆதரவாளர்களை இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ரணில் அரசைச் சாடியும், புலிகளை எதிர்த்தும் சுலோகங்களை பாடியதுடன் பதாதைகளையும் காவி வந்தனர்.

TN.-105.jpg

இன்று தமிழர்களால் "தலைவர்" என்று கொண்டாடப்படும் அதே இனவாதியான மக்கள் முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரச்சார மேடையில்
 

மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் மூன்றாவது பலமான கட்சியென்பதுடன், நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ச‌மாதானப் பேச்சுக்களுக்கெதிரான சிங்கள மக்களின் உணர்வினை கிளப்பி வருகின்றது.

அத்துடன் தமிழர்களுக்கான தனிநாடொன்றினை உருவாக்கவே ரணில் அரசாங்கம் முயல்வதாகவும் அது திட்டமிட்ட பரப்புரை நடவடிக்கையொன்றினையும் நடத்திவருகின்றது.

யுத்தத்தினால் அழிக்கப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கினை புணருத்தானம் செய்வதற்காக புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபைக் கட்டமைப்புக் கோரிக்கை என்பது சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு தனிநாட்டைத் தாரைவார்க்கும் கைங்கரியமே என்று அக்கட்சி கூறுகிறது. ஆகவே இன்றைய பேரணி வடக்குக் கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக சபையினை புலிகளிடம் வழங்காதே எனும் கோஷத்தினை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட்டது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9293

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களை நாட்டிற்குத் திரும்பிப் போ என்று மிரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ஆதவாளர்கள்

செவ்வாய்க்கிழமை, 15 ஆடி, 2003

திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் கூடிய மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அவர்களை நாட்டிற்குத் திரும்ப் போ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்காணிப்பாளர்களின் அலுவலகத்திற்கு பொலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். 

திருகோணமலை துறைமுக வீதி வழியே ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் கண்காணிப்பாளர்களின் அலுவலகத்தை அடைந்தது "புலிகளுக்கு உதவுகிறீர்கள், நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கோஷமிட்டனர். 

அதேவேளை திருகோணமலை நகரில் பேச்சுவார்த்தைகளைக் கண்டித்து பூரண கடையடைப்பைச் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டிருந்தபோதும் பல கடைகள் திறந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9437

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான முழு பிரச்சார யுத்தத்தினை முன்னெடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 29, ஆடி 2003

தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக சபையொன்றினை உருவாக்கும் முயற்சிகளுக்கெதிராக முற்றான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கிறது. இடைக்கால நிர்வாக சபைக்கான அனுமதியென்பது நாட்டைத் துண்டாடுவதற்கான அனுமதியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். 

ஆவணி 6 ஆம் திகதியிலிருந்து நாடுதழுவிய ரீதியில் இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடும் நடவடிக்கைகளில் மக்கள் விடுதலை முன்னணி இறங்கியிருக்கிறது. ஏனைய எதிர்க்கட்சிகள் சிங்கள மக்களை இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக அணிதிரட்டத் தவறியமையினாலேயே தமது கட்சி இதனைச் செய்வதாக அவர் கூறினார்.
வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை இயங்குமிடத்து, அது முழு நாட்டையும் சுக்குநூறாக உடைத்துவிடும் என்று அவர் சிங்கள மக்களை எச்சரித்தார்.  

இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியினரும் இடைக்கால நிர்வாக சபையினை எதிர்த்து சிங்கள மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அக்கட்சி சார்பாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மைத்திரிபால சிறிசேன, மூன்று மாதங்களுக்குள் முழு நாட்டிலும் இக்கருத்தரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று கூறினார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9529

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைக்கால நிர்வாக சபையினை வழங்குவதை எதிர்த்து இன்னுமொரு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி

திங்கட்கிழமை, 11 ஆவணி 2003

புலிகளுக்கு வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவதை எதிர்த்தும், அந்நிய நாட்டுப்படைகளை இலங்கைக்குள் அமைதிகாக்கும் முயற்சிகளுக்காக வரவைக்கும் யோசனைகளை எதிர்த்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை செவ்வாயன்று நடத்த தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமாகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கொழும்பில் கூறினார். சுமார் 50,000 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

……………………………………………………………………………………………………

புலிகளுக்கு வடக்குக் கிழக்கினை தாரை வார்த்து நாட்டைக் காடிக் கொடுப்பதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது

புதன்கிழமை, 20 ஆவணி, 2003

 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ரணிலின் துரோகத்தை எதிர்த்து வடக்குக் கிழக்கு உட்பட, நாடளாவிய ரீதியில் பிரச்சாரப் போர் ஒன்றினை ஆரம்பிக்கவிருப்பதாக அதன் பிரச்சாரச் செயலாளர் விமர் வீரவன்ச கூறியுள்ளார்.

இதன்படி மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரச்சாரப் போர் காலியில் ஆரம்பிக்கும் என்றும், அதன் இறுதிப் பேரணி கொழும்பு லிப்ட்டன் சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

"இலங்கையை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் வடக்குக் கிழக்கைப் புலிகளுக்கும், தெற்கை வெளிநாடுகளுக்கும் ரணில் அரசு கொடுக்கவிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ரணிலின் தவறான ஆலோசனைகளால் இலங்கை இராணுவம் போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்துவது இராணுவத்திற்குக் கடிணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 இதவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பங்காளிகளான வடக்குக் கிழக்கு சிங்களவர்கள் அமைப்பு சந்திரிக்காவுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் இந்தியாவை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குள் அழைக்கவேண்டும் என்றும், இந்திய கடற்படையின் உதவியுடன் புலிகளின் கடற்போக்குவரத்தை தடுத்து, இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.மேலும், வடக்குக் கிழக்கை உடனடியாகப் பிரிப்பதும், பொலீஸ் புலநாய்வாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டு வருவதைத் தடுப்பதும் உடனடித் தேவை என்றும் அவ்வமைப்புக் கூறியிருக்கிறது.

…………………………………………………………………………………………

சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரி காலியில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆவணி 2003

பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரியும், புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் இலங்கையின் இறையாண்மையினையும், ஆட்புல ஒருமைப்பாட்டினையும் காத்திடக் கோரியும் காலியில் இருந்து கொழும்புவரை நான்கு நாட்கள் பாத யாத்திரையினை அதி தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடத்துகிறது.

ஆட்சியில் இருக்கும் ரணிலின் அரசு கவிழ்க்கப்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது.

…………………………………………………………………..

எனது கட்சியான மக்கள் கூட்டணி தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு ஆதரவு தருகிறது, ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக இருப்பதால் அவர்களுடன் பொது இணக்கப்பட்டிற்கு வர முடியவில்லை - சந்திரிக்கா

செவ்வாய்க்கிழமை, 2 புரட்டதி 2003

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி சந்திரிக்க, தனது கட்சி தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயாராக இருந்தபோதும், மக்கள் விடுதலை முன்னணி அதனைக் கடுமையாக எதிர்த்து வருவதால் அவர்களுடன் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவது கடிணமாகியிருக்கிறது என்று கூறினார்.

"ரணிலின் அரசைக் கவிழ்ப்பதில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து செயற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், புலிகளால் சீர்கெட்டுப்போயுள்ள பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்செய்து நாட்டைப் பாதுக்காக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்று அவர் மேலும் கூறினார்.

………………………………………………………………………………….

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து நின்றதனால் அக்கட்சிக்கும், சந்திரிக்காவின் கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன

சனிக்கிழமை, 6 புரட்டாதி 2003

ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்காக சந்திரிக்காவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நடத்திவந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. இதற்கான முக்கிய காரணமாக தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறும் அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியோ அதிகாரப் பகிர்வென்கிற பேச்சிற்கே இடமில்லை, ஒற்றையாட்சியின் கீழ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே தீர்வு அமையவேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதுகுறித்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "சர்வதேச அழுத்தத்திற்குப் பயந்தே சந்திரிக்கா அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறார். ஆனால் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் நாடு பாரிய அழிவை எதிர்நோக்கும்" என்று கூறினார். மேலும், தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு எனும் சுதந்திரக் கட்சியின் தலைமையின் முடிவினை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக எதிர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

…………………………………………………………………………………..

சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி இரண்டாவது பாதயாத்திரைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி

வியாழக்கிழமை, 11 புரட்டாதி 2003

ரணில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் காத்திடக் கோரி சிங்களத் தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இரண்டாவது - ஐந்து நாள் பாத யாத்திரைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

ரணில் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுக்களால் இலங்கையின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிக்கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதால் இப்பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நோர்வே அனுசரணையாளர்கள் உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபெறும் இந்த ஆர்ப்பட்ட பாத யாத்திரையில் சந்திரிக்காவின் கட்சியைச் சேர்ந்த 20 பா. க்களும் பங்கேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அநுர பண்டாரநாயக்க உட்பட பல சந்திரிக்காவின் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

 

தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது, இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்படக் கூடாது, பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவை உதவிக்கு அழைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட கண்டியில் இருந்து கொழும்புவரையான இரண்டாவது ஐந்து நாள் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்

FootMarch_3.jpg

FootMarch_6.jpg

FootMarch_1.jpg

FootMarch_5.jpg

FootMarch_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரித்திரத்தை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி தொடரட்டும்.பாராட்டுக்கள் ரஞ்சித்.

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Arjuna) வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக எமது செய்தியானர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி - ஐபிசி தமிழ்
    • "Person of the Year",  இதன் அர்த்தம் ஆண்டின் சிறந்த நபர் என்பதல்ல.
    • YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மாா்ச் மாத நிலவரப்படி யூ டியூபானது 200 கோடியே 49 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூ டியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது. சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூ டியூப் ஒரு கவா்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரா்கள் மற்றும் பாா்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூ டியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. யூ டியூப் தொடக்கத்தில் புதுப்புது செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நம் தேவைக்கு ஏற்ற வேளையில் குறிப்பிட்ட நேர எல்லையில் நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதுதான் யூ டியூபின் சிறப்பு. நம் தினசரி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் துறை வல்லுநா்களிடம் தகவல்களைப் பெற்று அதை பல்வேறு கோணங்களில் அலசி, அதற்கான விடைகளைச் சுடச்சுட பரிமாறி இருப்பாா்கள். பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு படிநிலைகளில் காலப்போக்கில் தேடப்படும் அத்தனை கேள்விகளுக்கும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு யூ டியூபில் பதிலளித்துக் கொண்டே இருக்கிறாா்கள். காய்கறி நடவாகட்டும், சமையல் செய்முறையாகட்டும் பொருட்களின் பயன்பாட்டு விளக்கங்களாகட்டும், புதுப்புது தொழில்நுட்ப செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு சங்கதிகளாக இருக்கட்டும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள யூ டியூப் பக்கங்கள் உள்ளன. அத்துடன் கல்வி, வணிகம், விளையாட்டு, திரைப்படம், இசை, ஊா் சுற்றுதல், பொழுதுபோக்கு, நகைச்சுவை,கேளிக்கை, மொழி அறிவு, ஆன்மிகம், ராசி பலன், மருத்துவக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், அழகு சாதனங்களை உபயோகிக்கும் முறை, பிரபலங்களுடன் கலந்துரையாடல், தனது அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிப்பது, பொது அறிவு, இலக்கியம், போட்டித் தோ்வுகள், வரி மேலாண்மை, சட்ட ஆலோசனை என எக்கச்சக்கமான யூ டியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்ன ஒரு சௌகரியம் என்றால், நாம் நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடுபொறிகள் மூலம் தேடிப் பிடித்து படித்துப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நாம் இன்னொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஓா் எளிய காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் தனக்கு பிடித்தமான காணொளிகளைக் காண சந்தாதாரா்களாக இணைந்த மக்கள், அதிகப்படியான பாா்வையாளா்களைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டவும் முடியும் என்பதைப் பரவலாக அறிந்து கொண்டு, படைப்பாற்றல் திறனை பக்கபலமாக்கி தினம் ஒரு காணொளியை பதிவிட்டு கலக்குகிறாா்கள். இன்றைய திகதி நிலவரப்படி யூ டியூப் மூலம் உலக அளவில் அதிகம் சம்பாதிப்பது அமெரிக்காவைச் சோ்ந்த ரயான் (Rayyan) என்னும் ஏழு வயதுச் சிறுவன் தான். ஃபோா்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமா்சகரான ரயான் யூ டியூப் மூலம் 22 மில்லியன் டொலா்களைச் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். யூ டியூப் வணிகம் என்றே ஒரு புது வணிக உலகம் புதிய திசையில் பயணிக்கிறது. வாடகைக்குக் கடை தேவை இல்லை, சரக்கு இருப்பு அவசியமில்லை, கையிருப்பை வைத்து ஒவ்வொன்றாக காணொளியில் காண்பித்தால் போதும். அதைப் பாா்த்த பின்பு வரும் எண்ணிக்கைகளை வைத்து , அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இயலும். இப்படி பல யூ டியூப் பக்கங்களை உருவாக்கி வாழ்வில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற பலா், நம் முன் உதாரணங்களாக இருக்கிறாா்கள். மற்றொரு பக்கம், மக்களை மகிழ்விக்க தினம் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ரசிப்புக்குரியதாக படம் எடுத்து அதைப் பதிவிட்டு பிரபலங்களாக வலம் வருகிறாா்கள். திரைப்பட கதாநாயக, கதாநாயகிகளுக்கு இருக்கும் புகழ் இவா்களுக்கும் உருவாகி இருக்கிறது. காணொளிகளாகப் பதிவிட்டு மக்களுக்கு அவா்கள் முகம் பழகி புகழ் வெளிச்சமும் அவா்கள் மீது விழுவதால் யூ டியூப் ஆளுமைகள், இன்றைய தேதியில் அதிகரித்துள்ளாா்கள். நவீன காலத்திற்கு இப்படி வரப்பிரசாதமாக வந்த இந்த யூ டியூப் அதற்கே உண்டான குறைகளையும் கொண்டுள்ளது. ஒருவரைத் தரக்குறைவாக விமா்சித்து அதன் மூலம் இலட்சக்கணக்கான பாா்வையாளா்களைக் கடந்து பெரும் புகழ் பெற வேண்டும் எனும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. யூ டியூபில் தோன்றக் கூடிய நபரைப் பொறுத்து அவா் சொல்லும் செய்திகளின் நம்பகத்தன்மையை அளவிட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதிவிடப்படும் கருத்துகள் பாதிக்கும் மேல் பொய்யும் புரட்டுமாக இருப்பதால், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. யூ டியூப்பில் நேரலை என்ற ஒரு வசதி இருக்கிறது. அதில் மக்கள் ஆா்வமாக ஒன்று கூடி கண்டுகளிக்கிறாா்கள். புடவை விற்பனை, பொருட்கள் விற்பனை என களை கட்டும் அந்தப் பக்கத்தை எட்டிப் பாா்த்தால், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் நேரிடுகிறது. தனிப்பட்ட நபரின் மீது தாக்குதல் நிகழ்த்தும் வகையில் தரம் தாழ்ந்து விமா்சனங்களை முன்வைக்கிறாா்கள். குறிப்பாக நேரலைகளில் இது போன்ற அத்துமீறல்கள் அதிகம். அதே நேரத்தில் பாா்வையாளா்களைக் கலவரப்படுத்தக் கூடிய காணொளிகளை பல யூ டியூபா்கள் தொடா்ந்து பதிவிட்டு வருவதும் கவலையளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் பணத்தை அள்ளி இறைத்து மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைக் காணொளியாக எடுத்துப் பதிவிடுவதும், மனைவியின் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ஆா்வத்தைக் கிளப்புவதும், ரயில் தண்டவாள தடம், மலையுச்சி போன்ற வில்லங்கமான இடங்களுக்கு அருகே நின்று ஆபத்தை விலைக்கு வாங்குவதும், கா்ப்பத்தின் போதே பாலினத்தை அறிவிப்பதும் என சில அரைவேக்காட்டுத்தனங்கள் அதிா்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரமற்ற ஒன்றைப் பற்றி ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்வது, புதிய செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற முனைப்பில் சரிவர ஆராயாது, தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடா்கருமையில் இருக்கிறது. அத்துடன், சமகாலத்தில் திரைப்படங்கள் குறித்தான அவதூறு செய்திகளைப் பரப்புவதாக யூ டியூபா்களை சில திரைப்படத் தயாரிப்பாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதன்படி திரையரங்க வளாகத்தில் யூ டியூபா்கள் விமா்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் வீா்யத்தை நாம் அறியலாம். அவரவரின் தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த யூ டியூபை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக விமா்சனம் அமைந்தால் எல்லாருக்கும் நல்லது. அதே வேளையில் விமா்சனம் இல்லை என்றால் சிறிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய சில நல்ல திரைப்படங்கள் கூட கவனம் பெறாமல் போய்விடும் அபாயமும் உள்ளது. இந்திய ஊடகத்துறையில் கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India)- 1978 என்ற சட்டம் இந்த அமைப்புக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தற்போதைய நிலவரப்படி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் அதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு’ அதிகாரத்தை வழங்கியும் அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல்களும் காணொளிகளும் நம் வேலையைப் பன்மடங்காகக் குறைத்தாலும், அது உண்மைக்கு மிக நெருக்கமாகக் கூட இருக்குமா என்றால் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. இது யூ டியூபிற்கும் பொருந்தும்.   https://chakkaram.com/2024/12/09/youtube-அமா்க்களங்கள்/
    • https://www.investopedia.com/terms/s/seigniorage.asp#:~:text=Seigniorage allows governments to earn,loss instead of a gain. சில எண்ணெய் வள  நாடுகள் பெற்றோ டொலரினை கைவிட முடிவெடுத்த பின்னணியில் அமெரிக்காவின்  பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய நிலையில் இருந்து பல்துருவ உலக ஒழுங்கு மாற்றத்திற்கு மிக சிறந்த உதாரணமாக துருக்கி தனது உலக எண்ணெய் வழங்கலின் கேந்திரமாக மாறுவதற்கு (HUB) சிரியாவில் துருக்கியின் ஆதிக்கம் முக்கியமாக உள்ளது. இந்த நிலை அமெரிக்காவின் அதிக கடன் பொருளாதார சுமையில் அமெரிக்கா துருக்கியின் ஆதரவுடன் மீண்டும் பெட்ரோ டொலருக்கு சாதகமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கு விரும்பக்கூடும், அதே வேளை இரஸ்சியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் உள்ள தளங்கள் இராணுவ, பொருளாதார நலனை கொடுப்பதால் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும், சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினை அமெரிக்கா விலக்குவதற்கு துருக்கி கோரினால் அதனை அமெரிக்காவினால் தட்ட முடியாது எனும் நிலையிலேயே அமெரிக்காவின் தற்போதய சூழ்நிலை உள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் வருவதற்Kஉ முன்னர் இப்படி ஒரு நிலை வரும் என யாராவது நினைத்தாவது பார்த்திருபார்களா? தற்போதுள்ள நிலை பனிப்போர் காலத்திலும் நிலவாத  சிக்கலான நிலையாக மாறிவருகின்றது. இந்த உலக மாற்றத்தில் எவ்வாறு எமது  நலனை நிலை நிறுத்த முடியும் என ஆராய வேண்டும். ஆனால் இந்த துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் சிரியாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையினை இந்த அமெரிக்க மற்றும் இரஸ்சிய வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
    • அமெரிக்க வரலாற்றில் முதல் முறை; ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுகிறது, வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை கைதிகள் திருந்தி வாழ இரண்டாவது வாய்ப்புகளை வழங்க முடியும். செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்காக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்புகளும் தண்டனைக் குறைப்புகளும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். பைடனின் கருணை நடவடிக்கையை மனித உரிமைக் குழுக்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். நீதி அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.   https://akkinikkunchu.com/?p=302980
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.