Jump to content

சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு : ரியாத் புத்தக கண்காட்சி மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் முன்னோடி கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 SEP, 2024 | 01:31 PM
image

காலித் ரிஸ்வான்

அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம்,  போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. 

அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.42_AM.

இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது. 

அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM_

இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின. 

மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ  (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன.

புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM.

இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70  வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM_

சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. 

மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது. 

அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது. 

இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன.

https://www.virakesari.lk/article/195126

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாற்றில் இடம்பெற்ற பெரும்போர்கள், அதில் ஏற்பட்ட அழிவுகள் பற்றி சரித்திரத்தில் கற்றுள்ளோம். எமது காலத்தில் அதை இப்போது காண்கின்றோம். எதுவும் நிரந்தரம் இல்லை. ஒரு புறம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் எல்லாம் சேர்ந்து குழுவாக இயங்குகின்றன. மறுபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு. எமது போராட்டத்தில் குழுநிலை இல்லை. இல்லாவிட்டால் ஆயுதங்கள் மெளனிக்க வாய்ப்பில்லை.
    • கொள்கை ரீதியாக பார்த்தால் சோசலிஸ்டுகளுடன் தமிழ்த்தேசியம் இலகுவாக கைகோர்க்க வேண்டுமே? சோசலிசத்தின் அத்திவாரத்தில் தானே விடுதலை புலிகள் அமைப்பு  கட்டப்பட்டது? விடுதலை புலி உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழியில் (முன்பு) சோசலிட் நாடு எனும் பதம் வருகின்றது அல்லவா? சிங்கள சோசலிஸ்டுகளும் தமிழ் சோசலிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து பயணித்தால் தமிழ்த்தேசியமும் சிங்களதேசியமும் மதிப்பிழந்து போய்விடும் என இரு இனத்தின் தேசிய தூண்களும் எண்ணுகின்றார்களா? @putthan நீங்கள் இன்னமும் கே. இன்பராசாவின் சுயேட்சை குழுவுக்கு தூண்கள் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
    • காரணம் இயலாமை  ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....??? எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்???? இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம்
    • இது சுய நலம் என்றால் பரவாயில்லை, புரியாமை என  எடுத்துக்கொள்ளலாம், தமிழருக்கென பிரச்சினை இல்லை என கூறுபவர்கள்தான் தமிழர்களுக்கான பிரச்சினைகளை உருவாக்கினர், இவர்கள் தொடர்ந்தும் அதே பாதையிலேயே பயணிக்க போகிறார்கள்! அன்றும் இன்றும் கூறிவருவதே தமிழருக்கென பிரச்சினை தனியாக இல்லைஅனைவரும் சமம் என கூறுபவர்கள் அதற்கான சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்போம் என இன்று வரை கூறவில்லை. கட்சிகளையோ, அல்லது மத பீடங்களையோ குறை கூறி உண்மையான பிரசினையினை மடை திருப்புவதால், இதே பிரச்சினை மீண்டும் மீண்டும் நிகழுவதை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த உறுதித்தன்மையற்ற சூழ் நிலையில், இலங்கை சிறுபான்மை மக்கள் வெற்று வாக்குறுதியினை நம்ப வேண்டிய பரிதாபகரமான புரிந்துணர்வற்ற நிலைக்கு எதனால் மக்கள் தள்ளப்படுகிறார்கள்? இந்த புதிய ஜனாதிபதி பிரச்சார மேடையில் இனவாதம் பேசவில்லை என கூறுவதாலா? ஆனால் மறைமுகமாக தனது நிலைப்பாட்டினை இந்த கட்சி தொடருகிறது, இதனை புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மக்கள் உள்ளார்களா? சிறுபானமை மக்கள் மீண்டும் மீண்டும் ஆரபத்திலேயிருந்து ஒவ்வொரு தடவையும் தொடங்கும் நிலையிலேயே உள்ளார்கள், இந்த முறை மக்கள் மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சியாக இந்த கட்சியினை பார்க்கிறார்கள் ஆனால் இவர்களிம் அதே பழைய பாதையிலேயே பயணிக்க கூடாது என்பதே அனைவரது விருப்பம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.