Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரீகன் மோரிஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், லாஸ் ஏஞ்சல்ஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின்.

நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது.

பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி போன்ற ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நேர்த்தியான வான்வழிக் காட்சிகளை உருவாக்கி திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்து வந்தார்.

இப்போது அவர் மீண்டும் வீடற்றவராக மாறும் விளிம்பில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹண்டிங்டனில் கடல் ஓரமாக ஓர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். தெற்கு கலிஃபோர்னியாவில் வசிக்க முடியாததால் அவர்கள் லாஸ் வேகாஸில் குடியேறினர். ஆனால் இப்போது அவர்கள் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

"நாங்கள் ஒரு வீட்டை வாங்க சேமித்துக்கொண்டிருந்தோம். எங்களிடம் பணம் இருந்தது. நாங்கள் முறையான வழியில் வாழ்ந்து வந்தோம்."

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உணவகத்திற்குச் சென்று 200 டாலர்கள் செலவழிப்பதைப் பற்றிக்கூட நான் கவலைப்பட்டதில்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், "தான் இப்போது வெளியே சென்று மெக்டொனால்ஸில் 5 டாலர் மதிபுள்ள ஓர் உணவை வாங்கி உண்ணக் கவலைப்படுவதாக" கூறுகிறார் ஃபோர்டின்.

   

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திரைத்துறையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹூலூ போன்ற புதிய ஓடிடி தளங்களுடன் போட்டியிட ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் போராடி வந்ததால், ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. ஆனால் மே 2023ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கியதில் இருந்து இந்த வளர்ச்சி நின்றுவிட்டது.

இந்த வேலை நிறுத்தங்கள் பல மாதங்கள் நீடித்தன. 1960-களுக்குப் பிறகு முதல் முறையாக எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் இருவரும் இணைந்து இதில் ஈடுபட்டது ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புகளைத் திறம்பட நிறுத்தியது. ஆனால் இந்த வேலைநிறுத்தங்கள் முடிவடைந்த ஓராண்டில், மீண்டும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்த்த நிலையில் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு முடங்கியுள்ளது.

பல ஸ்டூடியோக்களில் வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் ஏற்கெனவே இருந்த படங்களின் தயாரிப்பு ரத்து செய்யப்பட்டு, மேலும் படங்கள் தயாரிப்பதும் குறைந்துவிட்டன. சமீபத்தில் பாரமவுண்ட் ஸ்டூடியோ உள்படப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணிநீக்கங்களும் செய்யப்பட்டன. ஸ்கை-டான்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு, பாரமவுண்ட் ஸ்டூடியோ நிறுவனம் அதன் பணியாளர்களில் 15 சதவீதத்தைக் குறைப்பதற்காக, அங்கு இந்த வாரம் இரண்டாவது சுற்று பணி நீக்கங்களை முன்னெடுத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் வேலையின்மை 12.5% ஆக இருந்தது. பல திரைப்படத் தொழிலாளர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற பதிவு செய்யவில்லை. இதனால் இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று பலர் நினைக்கிறார்கள்.

 
மைக்கேல் ஃபோர்டின்

பட மூலாதாரம்,MICHAEL FORTIN

படக்குறிப்பு, மைக்கேல் ஃபோர்டின்

கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க தயாரிப்புகளின் எண்ணிக்கை சுமார் 40% குறைந்துள்ளது. உலகளவில், அந்தக் காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் 20% சரிவு ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்புகளைக் கண்காணிக்கும் ProdPro நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது குறைவான புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியாகின.

ஆனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் நீடித்து நிலையானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயுடன் இயங்கும் கேபிள் டிவிக்கு மக்கள் சந்தா செலுத்தாதபோது, திரையுலகில் லாபம் ஈட்டுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க ஸ்டூடியோக்கள் முயற்சி செய்கின்றன.

"திரையுலகில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை மக்கள் உணர்கிறார்கள். நான் பீதியைக் கிளப்புவதற்காக இதைக் கூறவில்லை," என்று பொழுதுபோக்குத் துறையைப் பற்றி செய்தி வெளியிடும் பக் நியூஸின் (Puck News) நிறுவனர் மேத்யூ பெலோனி கூறுகிறார்.

ஓடிடி தளங்களின் ஏற்றத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட்டால் தூண்டப்பட்டது. இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி ஜாம்பவான்கள் சாதனை வளர்ச்சியைக் கண்டன மற்றும் பாரமவுண்ட் போன்ற ஸ்டூடியோக்கள் சொந்த ஸ்ட்ரீமிங் ஓடிடி தளங்களைத் தொடங்கியதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்ததைக் கண்டது.

"இது ஓடிடி தளங்களின் சந்தையைச் சூடு பிடிக்கச் செய்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு 600 ஆக்ஷன் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் பங்குச் சந்தை அதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தியது," என்று மேத்யூ பெலோனி கூறுகிறார்.

"நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மற்ற அனைத்து ஓடிடி நிறுவனங்களும் செயலிழந்தன. பின்னர் இதிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் மீண்டுள்ளது. ஆனால், மற்ற நிறுவனங்கள் உண்மையில் லாபத்தைப் பெற போராடுகிறார்கள்," என்கிறார் அவர்.

 
எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன.

திரையுலகில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைத் தாண்டி சில தயாரிப்பு நிறுவனங்கள், கலிஃபோர்னியாவில் இருந்து மற்ற மாகாணங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும், அங்குள்ள கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளால் ஈர்க்கப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர்கள் மந்தநிலையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள், மேயர் கரேன் பாஸ் கடந்த மாதம் ஹாலிவுட்டில் திரைப்படத் தயாரிப்புக்கான புதிய ஊக்குவிப்புகளைப் பற்றி ஆலோசனை செய்ய ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்.

இந்தக் குழு உருவாக்கத்தை அறிவித்துவிட்டு மேயர் கரேன் பாஸ், "லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு பொழுதுபோக்குத் துறை முக்கியப் பங்காற்றுகிறது" என்று கூறினார். இது அந்நகரத்தின் பொருளாதாரத்தின் "மூலக்கல்" மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கக்கூடும் என்று அவர் விவரித்தார்.

சமீபத்திய தரவுகளின்படி, பொழுதுபோக்குத் துரையானது 6,80,000-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. அது அந்த மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 115 பில்லியன் டாலர்கள் பங்களிப்பதாக மேயர் கரேன் பாஸ் கூறினார்.

எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன. இதற்குப் பிறகு அதிக பண மதிப்பு அளிக்கும் தொழிற்சங்க ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான பாதுகாப்புகள் வழங்க வழிவகுத்தன.

ஹாலிவுட்டில் சில ஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாதது என்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் யூனியனுடன் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் டங்கன் க்ராப்ட்ரீ-அயர்லாந்து கூறினார். ஹாலிவுட்டில் கூடிய விரைவில் படங்கள் தயாரிப்பது அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.

 
டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே வீடியோ கேம் காதப்பத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்குக் குரல் கொடுக்கும் கலைஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர்.

"தனித்துவமான படைப்பாற்றல் மிக்க தயாரிப்புகளை உருவாக்குவதுதான் இந்த நிறுவனங்களைச் சிறப்பான மற்றும் மதிப்பு மிக்கதாக மாற்றியுள்ளது," என்று அவர் செப்டம்பரில் டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே ஒரு மறியல் போராட்டத்திற்குச் சென்றபோது கூறினார். இங்குதான் வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள் தற்போது இதேபோன்ற பாதுகாப்புக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளனர்.

"ஹாலிவுட் எப்போதும் நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறது" என்று அவர் கூறுகிறார். இது அனைத்து வகையான மாற்றங்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு நகரம். விஷயங்கள் எப்போதும் இருந்தபடியே இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளதால் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளடக்கத்தை புதியதாக வைத்திருக்க வேண்டியுள்ளது."

மைக்கேல் ஃபோர்டினின் டிரோன் நிறுவனம் இந்த வேலைநிறுத்ததிற்கு முன்பு தினமும் இயங்கி வந்தது. இப்போது இந்த வேலை நிறுத்ததப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வெறும் 22 நாட்கள் மட்டும் டிரோன்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடிகராக வெறும் 10 நாட்கள்தான் பணிபுரிந்துள்ளார்.

அவர் பின்னணி நடிகராகக்கூட பணிபுரிந்துள்ளார், ஆனால் லாஸ் வேகாஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு செல்வதற்கான பெட்ரோல் செலவைக்கூட அந்த வருமானம் ஈடு செய்யவில்லை.

"முன்பு பணி சிறப்பாக இருந்தது இப்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது," என்று ஃபோர்டினின் ஆப்பிள் டிவி+ நிகழ்ச்சியில் தனது ட்ரோன்களை பறக்கவிட்டதன் பின்னர் கூறினார். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ட்ரோன்களுடன் இதுதான் அவரது முதல் பணி.

"விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகின்றன. ஹாலிவுட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. ஆனால் திரைத்துறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் சரிவை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.