Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

ஸ்ரீவாணி மேடம் 

மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். 

பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள்.

“எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. 

“அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. 

12.jpg?resize=600%2C400&ssl=1

“சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ பார்த்து யாரோ என்று நினைக்கிறீங்க நீங்க” என்றாள் சாவித்திரி. 

“இல்லை சாவித்திரி. வருவது அவுங்கதான்” என்றாள் பத்மா. 

அதற்குள் ஸ்ரீவாணி அருகில் வந்துவிடவே, பத்மா கைகளைக் குவித்து, “வணக்கம், மேடம்” என்றாள்.

புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றாள்   ஸ்ரீவாணி. 

“என்ன ஆச்சு இவுங்களுக்கு? இன்று ஏன் இப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் பத்மா.

“உண்மைதான். என்ன ஆயிற்றோ தெரியவில்லை” என்றாள் சாவித்திரி. 

வியப்போடு அவள் சென்ற வழியையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   பேருந்து வந்து  ஹாரன் ஒலி எழுப்பியவுடன் திடுக்கிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அமர்ந்த பின்னும் ஸ்ரீவாணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தர்கள். 

ஸ்ரீவாணி நல்ல வழக்கறிஞராகப் பெயரெடுத்த பெண்மணி. அவளுடைய கணவன் ரங்கசாயி, இஞ்சினியரிங் படித்த பின் இரட்டை பிஹெச்.டி. செய்தான். அமெரிக்காவுக்குச் சென்று பதினைந்து ஆண்டுகள் இருந்துவிட்டுத் திரும்ப வந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைத்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஸ்ரீவாணி தன் கம்பெனியின் லீகல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வாள். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபடுவாள். 

பத்மா தான் வேலை செய்யும் கம்பெனியின் பெண்கள் தின விழாவுக்காக ஸ்ரீவாணியைத் தலைமை தாங்க  அழைத்தாள். அவள் வந்தாள். நல்ல உயரமும் உடல் வாகுமாக பார்ப்பதற்கு அழகான வடிவம். கழுத்தில் இரட்டை வட தாலிச் சங்கிலி. கருகமணி. கை நிறையத் தங்க வளையல்கள், காதுகளில் வைரத்தோடு. காஞ்சீபுரம் பட்டுப் புடவை. இவை எலலாவற்றையும் விட அதிகமாக மனதைப் பறிக்கும் புன்னகையோடு விளங்கிய அந்த உருவத்தைப் பார்த்து மெய் மறந்த சபையினர், அவளுடைய உரையைக் கேட்டு மேலும் பரவசமடைந்தனர். 

“தற்போதைய சமுதாயத்தில் பல பெண்கள் மன உளைச்சலால் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர்களைச் சுற்றி அலையாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் பிறரைப் பற்றி யோசித்து அவர்களுக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும். அவர்கள் நம் உறவினர்களாகவோ  நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. கண்ணுக்கு எதிரில் தெரியும் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணி அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.  

உதவி புரிவதற்கு ஆயிரமோ லட்சமோ செலவு செய்யத் தேவையில்லை. நமக்கு எந்த ஒரு நஷ்டமும் எற்படாமல் நமக்கு மன நிம்மதியை அளிக்கக் கூடிய சாதனங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பழைய துணிகளுக்கு பாத்திரங்கள் விற்பது அவளுடைய தொழில். கையில் பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு நைலான் சட்டையை அணிவித்திருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அவன் விக்கி விக்கி அழுதான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்ணை அழைத்தேன். 

“ஏதாவது புடவைத் துணி இருந்தால் எடுத்து வாருங்கள், அம்மா. பாத்திரம் தருகிறேன்” என்றாள் வந்தவுடன். 

“துணி போடுவதற்காக உன்னை அழைக்கவில்லை. முதலில் அங்கே உட்கார்” என்று சொல்லி விட்டு, சமையலறையில் இருந்த சாதத்தில் சிறிது தயிர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்து அவளைச் சாப்பிடச் சொன்னேன். அவள் சாப்பிடுவதற்குள் வீட்டிலிருந்த ஒரு வேஷ்டியைக் கத்தரித்து தையல் மிஷினில் குழந்தைக்கு நான்கு சட்டைகள்  தைத்தேன். நைலான் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தென்ற கைத்தறி சட்டையை அணிவித்தவுடன் அந்த பச்சைக் குழந்தை ஆசுவாசமடைந்தது. அதைப் பார்த்து அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

இதுபோன்ற ஆனந்தத்தை அவ்வப்போது அனுபவித்து வந்தால் டிப்ரெஷன் நம் அருகில் கூட வராது” என்று அவள் உரையாற்றியபோது கைத்தட்டல் விண்ணை எட்டியது. விழா முடிந்தபின் பலர் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்கள். அவர்களுள் பத்மாவும் சாவித்திரும் இருந்தார்கள்.  

அப்படிப்பட்ட பெண்மணி இன்று அள்ளி முடிந்த தலை, பழைய புடவை, கழுத்தில் சாதாரண கருகமணி, கைக்குக் கண்ணாடி வளையல் என்று ஒரு ஏழையைப் போல ஏன் தோற்றமளிக்கிறாள்?

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையிலும் அதே டாபிக். அவர்களுக்குச் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த சுஜாதா இவர்களுடைய பேச்சு காதில் விழவே டக்கென்று எழுந்து இவர்களின் அருகில் வந்தாள். அவள் அதே ஆபீசில் வேறு டிபார்ட்மென்ட். வெறும் முகப் பரிச்சயம் மட்டுமே. 

“நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று ஆரவத்தோடு கேட்டாள். 

“சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நம்முடைய விமென்ஸ் டே மீட்டிங்கிற்கு வந்தார்களே அந்த ஸ்ரீவாணி மேடத்தைப் பற்றி” என்றாள் பத்மா.

“ஒரு நிமிடம்” என்று கூறிச் சென்று தன் டிபன் பாக்சை எடுத்து வந்து இவர்களோடு  அம்ர்ந்த சுஜாதா, “இப்போது சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டாள். 

“அன்று ஃபங்ஷனில் பார்த்தபோது எத்தனை கிரேஸ்ஃபுலாக இருந்தார்கள்? அதன் பிறகு ஒருமுறை டிவியில் கூட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் மகாலட்சுமி போல இருக்கும் மேடம், இன்று மிகவும் ஏழை போல காட்சியளித்தாங்க” என்றாள் சாவித்திரி. 

ஏளனமாகச் சிரித்தாள் சுஜாதா. “அவள் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். என் வீட்டுக்காரருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவர்கள் ஒரு மாதிரியான மனிதர்கள். இங்கு வேலையை விட்டு விட்டு அமெரிக்கா சென்றார்கள். அங்கு இருக்க முடியாமல்  மீண்டும் இங்கே திரும்பி வந்தார்கள். ஏதாவது வேலையில் சேரலாம் அல்லவா? அதுவுமில்லை. தாமே பத்து பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஒரு இண்டஸ்ட்ரி தொடங்கினார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை. ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளருங்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை. “தெய்வம் எங்களுக்கு குழந்தைகளைக் கொடுக்காத போது மீண்டும் இந்த வளர்ப்புகள் எல்லாம் எதற்கு? எங்கள் ஃபாக்டரியில் பணிபுரிபவர்களே எங்கள் பிள்ளைகள்” என்று டயலாக் பேசினார்கள். 

நூறு ரூபாய் சம்பாதித்தால் அதில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் செலவு செய்தால் ஒழிய அவர்களுக்குத் திருப்தி இருக்காது. ஆடம்பரத்திற்கும் தானத்திற்கும் குறைவு கிடையாது. நாளை என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே கிடையாது. அதி புத்திசாலித்தனமோ அல்லது அறிவீனமோ தெரியவில்லை. யாரோடும் சேர மாட்டார்கள். அவர்களுடைய உலகம் அவர்களுக்கு. என்ன எதிரடி விழுந்ததோ தெரியவில்லை. எந்த விஷயமும் இன்னும் எங்கள் வரை வரவில்லை” என்று பேச்சும் சாப்பாடும் ஒரே தடவையாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் சுஜாதா. கிடுகிடுவென்று கையைக் கழுவிக் கொண்டு மொபைலை எடுத்து கணவனுக்கு அந்தச் செய்தியை பரபரப்பாகப் பகிர்ந்தாள். 

மனைவி கூறியதைக் கேட்டு கணவன் சூரியம் மகிழ்ச்சியடைந்தான். அவர்களுக்கு  நன்றாக வேண்டும் என்று நினைத்தான். அவன் அத்தனை மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் இருந்தது. 

எப்போதோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சூரியத்திற்கு பண உதவி தேவைப்பட்ட போது ரங்கசாயியிடம் சென்று கேட்டான். அவன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்து உதவினான். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. ரங்கசாயி ஒரு தெய்வம் என்று புகழ்ந்தான் சூரியம். அதன் பின் சூரியம் குடும்பத்தினர் கொஞ்சம் செட்டில் ஆனபின் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது சூரியத்திற்குக் கோபம் வந்தது. 

தன்னைப் போல ரங்கசாயி கூட அந்தக் கடன் பாக்கி விஷயத்தை மறந்து போயிருப்பான் என்று நினைத்தான் சூரியம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலம் கடத்திப் பார்த்தான். அவ்வாறு வாயிதா போட்டால், எரிச்சலடைந்து கேட்பதை விட்டு விடுவார் என்று எதிர்பார்த்தான். 

ஆனால் ரங்கசாயி கெட்டிமனிதன். “நீ மனிதனா? மிருகமா? வயிற்றுக்கு சோறு தின்கிறாயா? புல்லைத் தின்கிறாயா?” என்று திட்டித் தீர்த்து, விரட்டி விரட்டி கொடுத்த கடனை வசூல் செய்துவிட்டான். சூரியத்திற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. 

“அந்த ரங்கசாயிக்கு என்ன கேடு? குழந்தையா, குட்டியா? போகும்போது பணத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்வானா? வேண்டியவர்களுக்கு ஆபத்தில் உதவினால், அந்தப்  பணத்தை அணா, பைசவோடு வசூல் செய்ய வேண்டுமா?” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அவ்விதம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான். 

இப்போது அந்த ரங்கசாயிக்கு ஏதோ கஷ்டம் வந்தது என்றும் அவன் மனைவி  ஏழைபோல நடந்து செல்கிறாள் என்றும் தன் மனைவியின் மூலம் தெரிந்து கொண்ட சூரியத்திற்குச் சொல்ல முடியாத ஆனந்தம் தொற்றிக் கொண்டது. அதனைத் தன்  மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். உடனே போன் செய்து நான்கைந்து உறவினர்களுக்குக் கூறினான். அவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் அந்தச் செய்தி பரவி விவாதத்திற்கு உரியதானது. 

“உலகம் என்றால் இப்படித்தான்.. ஏதோ பெரிய பாக்டரி இருக்கிறதென்று பெருமையடித்துக் கொண்டார்களே என்று சமீபத்தில் என் மகனை ரங்கசாயிடம் அனுப்பினேன். அவன் போக மாட்டேன் என்று சொன்னாலும் உறவினர் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர மாட்டானா என்று நப்பாசையில் அவனை பலவந்தமாக அனுப்பினேன். என் பிள்ளை பத்தரை மாற்றுத் தங்கம். பரீட்சைக்கு முன்னால் ஏதோ  ஜுரம் வந்ததால் பத்தாவது பெயில் ஆகி விட்டானே தவிர ஒரு கலக்டரோ ஒரு கவர்னரோ ஆக வேண்டிய புத்திசாலி என் மகன். அப்படிப்பட்ட இளைஞனை அழைத்துச் சென்று லாரியிலிருந்து சரக்குகளை இறக்கும் உத்தியோகத்தில் வைத்தானாம். என் மகனுக்கு ஏற்கெனவே டஸ்ட் அலேர்ஜி. அந்த வேலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு சம்பளமும் ரொம்ப கம்மி. ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றானாம். இந்த நாட்களில் பிச்சைக்காரன் கூட அதைவிட அதிகம் சம்பாதிக்கிறான். என் மகனுக்கு ரோஷம் அதிகம். வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டான். வேண்டியவர்கள் வீட்டுப் பிள்ளை ஆயிற்றே, பக்கத்தில் இருத்தி   வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்து அதில் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வோம் என்று இல்லை. நாளைக்கு அவர்களுக்குப் பிறகு அவனே பொறுப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறான். அந்த அளவு கூட அவர்களுக்கு இங்கித ஞானம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நன்றாக ஆனது. நன்றாக வேண்டும் அவர்களுக்கு”  என்று புலம்பினாள் ஒரு இல்லத்தரசி. 

“உண்மைதான் அண்ணி. என் பெண் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே சென்று அவர்களிடம் கூறினோம். கல்யாணத்திற்கு வர இயலாது, தில்லிக்குப் போகிறோம் என்று சொல்லி இருநூறு ரூபாய் பெறுமான ஒரு புடவையும் ஒரு அகல் விளக்கு அளவுக்கு வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழும் வைத்துக் கொடுத்தாள் அந்த மகராசி. ஒரு ஐநூறு ரூபாயை என் வீட்டுக்காரரின் கையில் வைத்து மாப்பிளைக்கு கொடுங்கள் என்றாள். இருக்கிற சொத்தையெல்லாம் போகும்போது கூட எடுத்துச் செல்லப் போகிறார்களா, என்ன? ஒரு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ கையில் வைத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவளுக்கு மனசு வரவில்லை. என்ன செய்வது? கருமித்தனம். போனால் போகிறது. எங்கள் கவலை என்னவென்றால், யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின் பத்து நாட்களில் அவர்களுடைய பாக்டரியில் வேலை செய்யும் பெண்ணை அங்கேயே பணி புரியும் ஒரு பையனுக்கு திருமணம் செய்வித்தார்களாம். குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், கட்டில் மெத்தை எல்லாம் வாங்கித் தந்தார்களாம்.  குறைந்தபட்சம் கல்யாணச் சாப்பாட்டோடு சேர்ந்து இருபதாயிரம் வரை செலவாகியிருக்கும். வேண்டியவர்களுக்கு இலையிலும் வேண்டாதவர்களுக்குத் தட்டிலும் என்று சொல்வார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் வேலியில் கூடக் காய்க்கும். வேண்டாம் என்றால் மரத்தில் கூட காய்க்காது” என்று தோளில் இடித்துக் கொண்டாள் மற்றொரு இல்லத்தரசி. 

மற்றொரு இடத்தில் மற்றொரு விவாதம் நடந்தது. “இந்த ரங்கசாயி செய்யும் வேலையெல்லாம் தலைகீழ் வேலைகளே. ஒரு முறை அவர்கள் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி என்று அழைத்தார்கள். உறவினர்களுக்கு விருந்து போட்டதோடு ஏழைகளுக்கு அன்னாதானமும் செய்தார்கள். சொந்தக்காரர்களுக்கு புளியோதரை, பூரணம் போளி,  சர்க்கரைப் பொங்கல், வடை எல்லாம் போட்டு அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு பூரி, குருமா, புலாவ், ஜாங்கிரி, ஐஸ்க்ரீம் எல்லாம் பரிமாறினான். இது என்னடா என்று கேட்டபோது ஏழைகளுக்குப் பாவம் இதெல்லாம் யார் கொடுப்பார்கள் என்று விதண்டவாதம் செய்தான்.  அவனுக்கு ஆமாஞ்சாமி போடுவதற்கு அவன் மனைவியும் கூடவே இருக்கிறாள். இரண்டும் இரண்டு ஆப்பை. இரண்டும் கழண்ட ஆப்பை என்பார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் ஒரு பெரிய மனிஷி. 

“கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் பெருமைப் பட எதுவுமில்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரு பாக்டரி, ஒரு சொந்த வீடு, அவ்வளவுதான். வங்கியில் பணம் தங்காது. இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் கை சும்மா இருக்காது. ஏதாவது செலவு செய்து விடுவார்கள். புத்தி கெட்ட விதமாக ஏதாவது செய்திருப்பார்கள். அதனால்தான் இந்த நிலைமை. தனக்காகத் தெரியாவிட்டால் யாரையாவது கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்கவில்லை” என்று குமுறினார் ஒரு மேதாவி. 

அதையெல்லாம் கேட்டு வருந்திய மனிதன் சேகரம் ஒருவனே. அவனுக்கும் ரங்கசாயிக்கும் தூரத்து உறவுமுறை உண்டு. நான்கைந்து முறை ரங்கசாயி, சேகரத்திற்கு உதவியுள்ளான். ரங்கசாயிக்கு போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ரங்கசாயியிடம் வாங்கிய கடன் ஒன்று பாக்கியிருந்தது. அவனுக்கு வலியச் சென்று போன் செய்தால் அவன் பணத்தைக் கொடு என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? தன்னிடம் பணம் இல்லையே, என்ற சங்கோஜம் அவனைத் தடுத்தது. அதனால் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட முடிவு செய்தான். அதுவுமின்றி, ரங்கசாயி தன்  ஒருவனுக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு உதவியுள்ளான். யாரோ ஒருவர் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவ முன்வராமல் போகமாட்டார் என்று நினைத்துச் சும்மா இருந்தான் சேகரம். 

மொத்தத்தில் ரங்கசாயி பற்றியும் ஸ்ரீவாணி பற்றியும் அன்று நிறைய பேர் விவாதித்துக்  கொண்டார்கள். சுஜாதா ஒவ்வொரு நாளும் அதே வேலையாக பத்மாவிடமும் சாவித்திரியிடமும், “என்ன ஆச்சு? மேற்கொண்டு ஏதாவது தெரிந்ததா? ஸ்ரீவாணியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.   

“இன்று கூட பார்த்தோம் அதே அவதாரம்தான். பாவம். நடக்க முடியாமல் அவங்களுக்குப்  பெருமூச்சு வாங்கியது” என்றாள் சாவித்திரி. அந்தச் செய்தியை முடித்தவரை உடனுக்குடன் உறவுகளிடம் பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. 

சூரியம் பொறுக்கமுடியாமல் ஒருமுறை ரங்கசாயியின் பாக்டரிக்கு போன் செய்தான். “சார் ஊரில் இல்லை. திரும்பிவர நீண்ட நாட்கள் ஆகும். எங்கே சென்றாரோ எங்களுக்குத் தெரியாது” என்று பொதுப்படையாக கூறினார்கள். விவரம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது என்றார்கள். 

ரங்கசாயியின் வீட்டுக்கு போன் செய்து பார்த்தான். அந்த நம்பர் வேலை செய்ய வில்லை என்று பதில் வந்தது. போனைக்கூட பிடுங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவன் முகம் காட்ட முடியாமல் தலைமறைவாகி விட்டான் என்று தீர்மானித்து மனைவி சுஜாதாவிடம் கூறினான். 

“ஸ்ரீவாணி வேலையில் இருந்தாலாவது பிழைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும். அதையும் விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனக்கு மிஞ்சித்தானே தானமும் தருமமும்? சொந்த வியாபாரம், சொந்த கம்பெனி என்று பெருமை பேசி சமூக சேவையில் இறங்கினாள். நாமெல்லாம் வியாபாரம் செய்ய முடியாமல்தான் உத்தியோகம் செய்கிறோமா? இப்போது பாருங்கள். பாவம். இருவரும் சாலைக்கு வந்து விட்டார்கள்” என்றாள் சுஜாதா. 

பிறர் கூறித் தெரிந்து கொண்டதையும் தானாக யூகித்ததையும் ஊராரிடம் வலியச் சென்று பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. அதன் காரணமாக உறவினர்களுள் சுஜாதாவுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. காலையில் எழுந்தது முதல் யாராவது ஒருவர் போன் செய்து, “என்னா ஆச்சு சுஜாதா? ஏதாவது தெரிந்ததா? புதிய செய்தி உண்டா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். 

அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கலந்து கதை கட்டி பொழுது போக்கிக் கொண்டிருந்தாள் சுஜாதா. வரவர சுஜாதாவால் சஸ்பென்சைத் தாங்க இயலவில்லை. எப்படியாவது ஸ்ரீவாணியைப் பிடித்து விவரங்கள் எல்லாம் வரவழைத்து சுற்றத்தாருடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதை எப்படிச் செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினாள். 

ஒரு நாள் காலையிலேயே எழுந்து ஆட்டோ ஏறி அரை கிமீ பயணம் செய்து பத்மாவும் சாவித்திரியும் பஸ் ஏறும் ஸ்டாப்பிற்குச் சென்றாள். யாருக்கும் சந்தேகம் வராமால் முன்பாகவே அங்கு சென்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். 

பத்மாவும் சாவித்திரியும் வந்தார்கள். சுஜாதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, “நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டார்கள்.

“நேற்று இந்த ஏரியாவில் என் தோழியின் வீட்டில் பங்ஷன் நடந்தது. இரவு வெகு நேரமாகிவிட்டது. அதனால் இங்கேயே தங்கி விட்டேன். அதுதான் காலையில் பஸ்  பிடித்துப் போகலாம் என்று வந்தேன்” என்று சுவர் எழுப்பினாற்போல் பொய் சொன்ன சுஜாதா, “எங்க ஸ்ரீவாணி வந்துட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள்.  

“இன்னும் இல்லை. இனிமேல்தான் வருவார்கள். சில நாட்கள் அவர்கள் முன்னால் வருவார்கள். வேறு சில நாட்கள் எங்கள் பஸ் முன்னால் வந்து விடும்” என்றாள்  சாவித்திரி. 

“கடவுளே இன்று ஸ்ரீவாணி முன்னால் வர வேண்டும்” என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள் சுஜாதா. அவளுடைய வேண்டுதல் பலித்தது. 

“அதோ ஸ்ரீவாணி மேடம்” என்றாள் பத்மா.

பத்மாவும் சாவித்திரியும் வியந்து போய் எத்தனை சொல்லியிருந்தாலும் எதிரில் ஸ்ரீவாணியைப் பார்த்த சுஜாதா வாயடைத்துப் போனாள். சாதாரண புடவை, வெறும் காது, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள், ரொம்ப இளைத்துப் போய் பெருமூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீவாணி. 

சுஜாதா வியப்பிலிருந்து மீள்வதற்குள் அருகில் வந்த ஸ்ரீவாணி அவளிடம் பேசினாள். . “சுஜாதா, நீ என்ன இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டாள். 

“நான் ஏதோ வேலையாக வந்தேன். அதிருக்கட்டும். அக்கா, நீ என்னக்கா, இப்படி ஆகிவிட்டாய்? உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் சுஜாதா. 

“நன்றாகத் தான் இருக்கிறேன் சுஜாதா. சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாகிறது”   என்றாள் ஸ்ரீவாணி. 

கிடைத்தாற்போல் கிடைத்து நழுவ இருந்த ஸ்ரீவாணியைப் பார்த்து சுஜாதாவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. “எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடுவேனா?” என்று நினைத்துக் கொண்டாள். 

“வா அக்கா. நானும் உன்னோடு வருகிறேன்” என்றாள்.

“பஸ் வந்துவிடும் சுஜாதா” என்று நினைவூட்டினாள் பத்மா. 

“நான் ஆட்டோவில் வருகிறேன், பத்மா. ரொம்ப நாள் கழித்து அக்காவைப் பார்க்கிறேன் அல்லவா? கொஞ்சம் நல்லது கெட்டது பேசி விட்டு மெதுவாகக் கிளம்புவேன்” என்று கூறிவிட்டு ஸ்ரீவாணியோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சுஜாதா. 

“எப்படி இருக்கிறாய் சுஜாதா? உன் கணவர் குழந்தைகள் நலமா?” என்று அன்போடு விசாரித்தாள் ஸ்ரீவாணி. 

“நாங்கள் நன்றாக இருக்கிறோம். அக்கா, நீ சொல். என்ன செய்தி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சுஜாதா. 

“நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுஜாதா. ஒரு குறைவுமில்லை. அண்மையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல பணியில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடாகா பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தேவதாசி வழக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணை அந்தச் சிறையிலிருந்து விடுவித்து கைவேலைகளில் பயிற்சி கொடுத்தோம். புடவையின் மேல் வொர்க் செய்து ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாயாவது அவள் சம்பாதிக்கும்படி செய்தோம். அவள் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினாள். தாயும் தந்தையும் எயிட்ஸ் நோயால் இறந்து போய் அனாதையாக மாறிய ஒரு ஐந்து வயது சிறுமியை அந்தப் பெண் தத்து எடுக்கும்படிச் செய்துள்ளோம். ஒரு குழந்தைக்காக தவமிருந்த தாய்க்கும் குழந்தை கிடைத்தது. அனாதையான சிறுமிக்கும் தாய் கிடைத்தாள். அவரகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும், சுஜாதா” என்றாள் ஸ்ரீவாணி. 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

“எங்களுக்கு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து நல்ல ஆர்டர் கிடைத்திருக்கிறது, சுஜாதா. எப்போதும்போல் லாபம் கிடைக்கும்தான். ஆனால் மேலும் ஒரு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.   அவர் அந்த வேலையாகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டி இருக்கும். போனைப் பற்றி கேட்கிறாயா? பழைய போனை எடுத்து விட்டு சமீபத்தில் ரிலையன்ஸ் போன் வாங்கியுள்ளோம்” என்றாள் ஸ்ரீவாணி. 

எச்சில் விழுங்கினாள் சுஜாதா. “அப்படியா அக்கா? ரொம்ப சந்தோசம். அது சரி, அக்கா, நீ ஏன் நடந்து செல்கிறாய்? உன் கார் எங்கே? நகையெல்லாம் ஏன் கழற்றி விட்டாய்?” பொறுமையிழந்த சுஜாதா நேரடியாக பாயிண்டுக்கு வந்தாள். 

“அதுவா? அண்மையில் எனக்குக் கொஞ்சம் ஆரோக்கியம் சரியில்லை, சுஜாதா. மெனோபாஸ் நேரம் அல்லவா? இடுப்பு வலி. அதோடு, இருந்தாற்போல் இருந்து இடது காலில் வலி. கேரள மருத்துவம் பார்க்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சரி என்று ஆரம்பித்தேன். பஞ்ச கர்மா சிகிச்சை. ஐந்தாறு வாரங்கள் செய்து கொள்ளவேண்டும். நன்றாக இருக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வார்கள் அல்லவா? அதனால், கால் மெட்டியோடு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னார்கள். அங்கு சென்று எடுப்பானேன் என்று வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு தினமும் செல்கிறேன். அதோடு வாக்கிங் செய்வது நல்லது என்று சொன்னார்கள். சரி உடம்பு குறையுமே என்று நடந்து செல்கிறேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். என் தங்கை ராதாவின் மகளுக்கு பிரசவ நேரம். “தனியாக இருக்கிறாள் கொஞ்சம் உதவியாக இரு” என்று கேட்டாள். சரி என்றேன். என் ட்ரீட்மென்ட் சென்ட்டரும் இங்கே அருகில்தான் இருக்கிறது. அவரும் ஊரில் இல்லை. இங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறேன். இது முடிந்ததும்  வீட்டுக்குச் செல்வேன்” என்று எல்லாம் விவரித்து விட்டு, “நீ எங்கே போகவேண்டும்? எதிர்பாராமல் உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முடிந்தபோது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வா” என்று கூறிக் கொண்டே ஒரு சந்திற்குள் திரும்பினாள் ஸ்ரீவாணி.

வாயடைத்துப் போன சுஜாதா, மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். ஓட்டமாக ஓடி பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். ஆனால் அதற்குள் பஸ்கள் சென்று விட்டன. வேறு வழியில்லை.  ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். 

அத்தனை தூரம் வருவதற்கு எந்த ஆட்டோகாரரும் சம்மதிக்கவில்லை. ரிடர்ன் தொகையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். சற்று நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு, வேறு வழியின்றி இருநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றாள். ஆபீஸுக்குச் சென்று பார்த்தால் கேட் மூடியிருந்தது. பார்மாலிடி எல்லாம் முடித்துவிட்டு உள்ளே சென்றால் லஞ்ச டைம் ஆகியிருந்தது. பாஸிடம் திட்டு வாங்கினாள். 

ஒடிந்துபோன மனதோடு லஞ்ச பாக்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றால் அங்கு பதமாவும் சாவித்திரியும் எதிரில் வந்தார்கள். 

“ஸ்ரீவாணி மேடத்திற்கு என்ன ஆச்சாம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள். 

“ஒரு மண்ணாங்கட்டியும் ஆகவில்லை” என்று எரிந்து விழுந்து விட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். “அதிர்ஷ்டக்காரர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. தரித்திரத்தை யாராலும் தீர்க்கவும் முடியாது” என்று நினைத்தபடி கண்களைச் சோர்வோடு மூடினாள்   சுஜாதா. அவள் கண்கள் கண்ணீரைப் பெருக்கின.   

https://solvanam.com/2024/09/08/ஸ்ரீவாணி-மேடம்/

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி நுணாவிலான் அண்ணா.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதிர்கன்னி [மலர்குழலி]     இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இயற்கையின் அழகால் சூழப்பட்ட அந்த கிராமத்திலேயே கழித்தார்.   "அல்லிப்பூ தாமரைப்பூ ஆயிரம் பூப்பூத்தாலும் கல்யாணப் பூவெனக்குக் காலமெல்லாம் பூக்கலையே!"   அப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது. பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போனாள். சிறு வயதிலிருந்தே, மலர்குழலி ஆர்வமுள்ள மனதையும், கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்த அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவளது அபிலாஷைகளுடன் ஒத்துப்போகவில்லை, அவள் ஊனமுற்ற. கொஞ்சம் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தின் பாரங்களாலும் படிப்பை மேல் தொடரமுடியாமல் போய்விட்டது.   என்றாலும் வாழ்க்கை அளிக்கும் எளிய இன்பங்களில் ஆறுதலையும் மனநிறைவையும் கண்ட அவள், தனது பிரகாசமான புன்னகை, கனிவான இதயம் துணை கொடுக்க, தாயிடம் இருந்து இளமையில் பெற்ற விதிவிலக்கான சமையல் திறன் கைகொடுக்க, அதையே ஒரு தொழிலாக்கி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களை தனது வீட்டு வாசலுக்கு இழுத்து, வீட்டில் இருந்தே தங்கள் தேவைக்கு உழைக்கத் தொடங்கினாள்.   வருடங்கள் செல்ல செல்ல, மலர்குழலியின் சுவையான உணவு வகைகளுக்கான நற்பெயர் வளர்ந்தது, மேலும் அவளது ருசியான உணவு மற்றும் ஆறுதலான கூட்டத்தை நாடும் கிராம மக்கள் கூடும் இடமாக அவளது வீடு மாறியது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதிற்குள் சில வேளை, அவளுடைய உணர்வுகள் போராடுவதும் உண்டு, மலர்கள் அணிந்த கொண்டையை உடையவள் என்று பெற்றோர் இட்ட பெயர், பெயர் அளவிலேயே வாழ்ந்து, தனிமையான வாழ்க்கை அமைந்த போதிலும், அதை தனக்குள்ளேயே அடக்கி, அவள் வெளியே அதை காடடாமல் மகிழ்வு போல வாழ கற்றுக்கொண்டாள்.   வாழ்க்கை அவளை தன் வழியில் அழைத்துச் சென்றாலும், மலர்குழலி அறிவு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவள் மிகவும் நேசித்த புத்தகங்களின் ஒரு சிறிய தொகுப்பை அவள் வைத்திருந்தாள், அவள் இரவுகளை அவற்றின் பக்கங்களில் மூழ்கடித்தாள். பலதரப்பட்ட தலைப்புகளில் உரையாடும் அவளது திறன், அவளின் உணவுக்கு வரும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து மரியாதையையும் பாராட்டையும் பெற்றது.   மலர்குழலியின் இல்லமானது அறிவுரையை நாடுபவர்களுக்கு அல்லது வெறுமனே கேட்கும் காதுகளுக்கு ஆறுதல் மற்றும் ஞானம் தரும் இடமாகவும் மாறத் தொடங்கியது. வயிற்றுப் பசிக்கு உணவையும், அறிவு பசிக்கு நல்ல கருத்துக்களையும் கொடுத்தது. அதனால் அவர் கிராமத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக ஆனார், சர்ச்சைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினார், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவளுடைய அமைதியான இருப்பும், எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு பொருத்தமான தீர்வு காணும் திறனும் அவளைப் பலருக்கு நங்கூரமாக மாற்றியது.   ஒரு நாள், அகக்கடல் என்ற நபர் அந்த கிராமத்திற்கு தனது ஆசிரியர் வேலையில் மாற்றம் கிடைத்து வந்தார். அவர் ஒரு திறமையான இசைக்கலைஞரும் கூட. அவர் ஏற்கனவே ஒரு ஆசிரியை ஒருவளை திருமணம் செய்து இருந்தாலும், கொரோனா நோயினால் அவரை பறிகொடுத்தது மட்டும் அல்ல, பிள்ளைகளும் இல்லாததால், தனிக்கடடையாகவே அங்கு தனது புது ஆசிரியர் பணியை தொடங்கினார். மலர்குழலியின் சமையல் திறமை மற்றும் அவளது துடிப்பான இயல்புகளைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவளைச் சந்திக்க, மற்றும் தனது இரவு, வார விடுமுறை நாள் உணவுகளை அங்கு சாப்பிட முடிவு செய்தார். அவளுடைய அடக்கமான இல்லத்தில் அவன் அடியெடுத்து வைத்த கணம், மசாலா வாசனையும் சிரிப்பொலியும் அவனை வரவேற்றன.   மலர்குழலிக்கும் அகக்கடலுக்கும் நாளாக ஆக ஒரு நல்ல புரிந்துணர்வு நட்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசினர். அகக்கடல் தனது கிட்டார் மீது தனது ஆத்மார்த்தமான சுருதிகளை வாசித்தார், மலர்குழலி தனது வயதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதற்கு ஏற்றவாறு அபிநயங்கள் பிடித்து மகிழ்வார். அவளும் அவனும் ஒத்த வயதில் இருப்பதாலும், தன்னை மாதிரியே ஒரு தனிமை அவனிடமும் இருப்பதாலும், அவள் வெளிப்படையாகவே அவனுடன் பழகுவதில் பிரச்சனை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் தொடர்பு ஆழமடைந்தது, மேலும் கிராமவாசிகள் அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை கவனிக்காமல் இருக்கவும் இல்லை.   அகக்கடல் அந்த கிராமத்துக்கு வந்து, ஒரு ஆண்டால் மலர்குழலியின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமானார்கள், இதுவரை பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற துணிவில் இருந்த அவளுக்கு, தனிமை மேலும் பெரிதாகியது. சிலர் அவளை இப்ப வெளிப்படையாக ஒரு முதிர்கன்னி, திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணாக பார்க்க தொடங்கினர். அவளது வீடு இன்னும் உணவுக்கு திறந்திருந்தது, என்றாலும் இப்ப அங்கு வருபவர்களின், சிலரின் போக்கில் சில மாற்றம் காணப்பட்டது. அது அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து உணவு பரிமாறுவது ஒரு இடைஞ்சலாக மாறிக்கொண்டு இருந்தது.   அதைக்கவனித்த அகக்கடல், அங்கேயே அவளுக்கு துணையாக தங்க முடிவு செய்தான். நாட்கள் செல்ல செல்ல மலர்குழலி மற்றும் அகக்கடலின் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கனவுகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் சகவாசம் அடைந்தனர். இளமை கடந்து இருந்தாலும், அவர்களின் இதயம் இளம் பருவத்தினர் போல, ஒரே அலைநீளத்தில் எதிரொலித்தது. மலர்குழலி தன் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நீண்ட காலமாக நம்பியிருந்த உணர்வுகளை, தான் இப்ப அனுபவிப்பதை உணர்ந்தாள். என்றாலும் சமூக அமைப்பையும் மதிக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே ஊரறிய, அவர்களின் முன்னாலையே அவளின் கையை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், ஒரு மாலை நேரத்தில், சூரியன் வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைந்தபோது, அகக்கடல் தனது கிட்டார் மெல்லிசை மூலம் மலர்குழலியிடம் தனது காதலையும் திருமணம் செய்யும் எண்ணத்தையும் ஒப்புக்கொண்டார். மலர்குழலியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவள் ஒரு காலத்தில் இளமைக்காகவே காதல் ஒதுக்கப்பட்டது என்று எண்ணியவள், அது தவறு என்பதை உணர்ந்தாள். இவர்களது காதல் கதை கிராமத்தில் கிசுகிசுக்கப்பட்ட கதையாக மாறினாலும், காதலுக்கு வயது இல்லை என்பதற்கான அடையாளமாக அது அமைந்தது.   ஒரு நாள், சிறு குழந்தைகள் சிலர் அவளது புத்தகங்களின் தொகுப்பைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். அந்த பக்கங்களில் உள்ள கதைகள் மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாடசாலையால் வந்தபின் தங்கள் மாலை நேரத்தை அதில் செலவிடத் தொடங்கினர். ஆசிரியையாக வேண்டும் என்ற மலர்குழலியின் கனவு உண்மையில் இறக்கவில்லை; வேறு வடிவமாக பிள்ளைகளூடாக வெளிவரத் தொடங்கியது.   குழந்தைகளின் உற்சாகம் மலர்குழலியில் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்தது. அவள், புது கணவர் அகக்கடலின் உதவியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் முறைசாரா வகுப்புகளை நடத்தத் தொடங்கினாள். குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் கருணை மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவம் பற்றி கற்பித்தாள். கிராமப் பெரியவர்கள் விரைவில் அவளது முயற்சிகளை அங்கீகரித்து, தங்களின் ஆதரவை வழங்கினர், ஒரு சிறிய சமூக நூலகம் மற்றும் கற்றல் மையத்தை நிறுவ உதவினார்கள்.   மலர்குழலியின் நூலகம் முழு கிராமத்திற்கும் அறிவு மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறியது. படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் எல்லா வயதினரும் அவளது தாழ்மையான இல்லத்திற்கு திரண்டனர். அவள் கற்பித்த குழந்தைகள் தாங்களாகவே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வளர்ந்தனர், அவர்களின் பாதைகள் மலர்குழலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டன.   வருடங்கள் செல்லச் செல்ல மலர்குழலியின் இருப்பு அவளைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டே இருந்தது. அவளின் முதிர்கன்னி வாழ்க்கை முற்றுப்புள்ளிக்கு வந்தது மட்டும் அல்ல, அவளின் மற்றோரு ஆசையான ஆசிரியர் பணியும் ஒரு விதத்தில் நிறைவேறியதுடன், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் இன்று மகிழ்வாக வாழ்கிறாள். மலர்குழலியின் கதை அவளது கிராமத்திற்குள் மட்டுமல்ல, இலங்கையில் எங்கும் பரவி அவளுக்கு புகழ் சூடியது.   என்றாலும் அவளின் வாழ்வு சவால்கள் இல்லாமல் இல்லை, ஏனென்றால் சமூகம் அதன் தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தது, ஆனால் மலர்குழலியும் அகக்கடலும் அவர்களை நெகிழ்ச்சியுடனும், விதிமுறைகளின்படியும், இணைந்து வாழும் உறுதியுடனும் எதிர்கொண்டனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் காதல் மலரலாம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை கிராமவாசிகளுக்குக் கற்பித்த அவர்களின் கதை பலருக்கு உத்வேகமாக அமைந்தது.   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு! இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1413421
    • கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381
    • ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409
    • செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.