Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

7) திரு பிரபாகர் சிறிபரமேஸ்வரன்

அமெரிக்கா (சங்கானை) 30000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

29/08/2025 வரை மொத்தமாக 250070 ரூபா கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

வணக்கம் உறவுகளே,

உயரப்புலம், இளவாலை, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பேசமுடியாத தகப்பனும் மூத்த மகனும் உள்ள திரு சிவானந்தராசா லக்‌ஷன் குடும்பத்திற்கு அரசாங்க உதவியுடன் கூடிய 10 லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. உண்மையில் இந்த பணத்தில் வீட்டுத்திட்டப் பணிகளை நிறைவு செய்ய முடியாது. மேலும் 7 லட்ச ரூபா தேவையாக உள்ளது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்காது தவறியது. இம்முறை எவ்வாறாவது இவ்வீட்டுத்திட்டத்தை கட்டி முடிக்கவேண்டும் என்ற அறிவுறுத்தலோடு இவ்வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்றது. வேறு எந்த அமைப்பும் உதவி செய்ய முன்வராத சந்தர்ப்பத்தில் எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களையும் கருணையுள்ளங்களையும் இந்த வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதில் எமது புலர் அறக்கட்டளை நன்கொடையாளர்களாலும் கருணைகொண்ட நல்லுள்ளங்களாலும் 250070 ரூபா திரு சி.லக்‌ஷனுடைய வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டத்தை பூரணப்படுத்த மேலும் 450000 ரூபா தேவையாக உள்ளது.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் 10 பேர் இணைந்து தலா 100$ போட்டு 1000$ (300000 ரூபா) திரட்டி அனுப்ப இயலுமாக இருந்தால் சிறப்பு. அல்லது உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.

இந்த உதவியானது பனை ஏறும் தொழிலாளியான திரு சி.லக்‌ஷனுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமையும். அவருடைய மாத வருமானம் சராசரியாக 20000 ரூபாவில் இருந்து 25000 ரூபாவிற்குள்ளாக இருக்கிறது. இவ்வருமானத்தில் குடும்பச் செலவுகளை சமாளிப்பதே கடினமானது.

ஏற்கனவே பனை மரம் ஏறும் போது தவறி விழுந்து கை, கால்கள் முறிந்து குணமடைந்துள்ளார். உங்கள் எல்லோரதும் உதவியானது கஸ்ரப்படும் ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டி குடிபுகுவதை உறுதி செய்யும். வருமானம் குறைந்த தமிழ் குடும்பங்கள் பலருக்கு இது போன்ற குறைந்த நிதி வீட்டுத்திட்டங்கள் கிடைத்தாலும் அவற்றை பூரணப்படுத்த அவர்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொண்டு சிறுதுளி தான் பெருவெள்ளமாக மாறுகிறது என்பதால் துளித்துளியாய் உங்கள் எல்லோரதும் உதவியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

சிவரஞ்சன் தேவகுமாரன்

தலைவர்

புலர் அறக்கட்டளை

+94 77 777 5448 / +94 77 959 1047

bank-statement.jpg

அரசின் நிதி உதவியும் நன்கொடையாளர்களது நிதி உதவி சம்பந்தமான வங்கிக்கூற்று மேலே.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

8) திரு திருமதி செல்வராசா ராணி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) சுவிஸ் 35000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

திரு திருமதி செல்வராசா ராணி குடும்பத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9) திரு திருமதி செந்தமிழ்ராஜா ராஜமலர் குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) சுவிஸ் 35000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

17/09/2025 இன்று வரை மொத்தமாக 320070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையின் வருடாந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 18/09/2025

எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த வருடத்தில்(2024) இருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை நடத்துகின்றோம்.

10/10/2025 எமது புலர் அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு நிறைவுநாளில் செய்ய இருந்த நிகழ்வை மழைக்கு முன்பே வழங்கினால் மரக்கன்றுகள் வேரூன்றி வளர உதவியாக இருக்கும் என்ற மரக்கன்று உற்பத்தியாளரான நியூ லங்கா பாம் உரிமையாளர் திரு செல்வராஜா ஐயாவினுடைய ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் வழங்கி இருந்தோம்.

இன்று வரை எமக்கு தொடர்ச்சியாக உதவி வரும் 134 நன்கொடையாளர்கள் மற்றும் தனியாக(மலசல கூடம் கட்டியது 2024, வீட்டுத்திட்டம் பூரணப்படுத்தல் 2025) பல உதவிகளைச் செய்த நன்கொடையாளர்கள் அத்துடன் CHULIPURAM GREENLAND FOUNDATION, சைவ அறப்பணி நிதியம், I3 SOFTWARE SOLUTIONS (pvt) ltd Colombo, பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள், வட்டுக்கோட்டை அரிமாக்கழகம், CHULIPURAM BOOLOGADEVI TRUST தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இவர்களின் தொடரும் ஆதரவினால் எமது புலர் அறக்கட்டளையானது சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்கள் சிரம் தாழ்த்தி எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இயற்கைப் பண்ணையாளர் திரு சிவசுப்ரமணியம் ரவிசங்கர் அண்ணாவும் அவருடைய பாரியார் திருமதி ரவிசங்கர் இருவரும் எமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருக்கிறார்கள். 24000 ரூபா பெறுமதியான 60 தேசிக்கன்றுகளை வழங்கி உதவியுள்ளார்கள். இருவருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.

இலவசமாக கடந்த வருடமும்(50 தென்னங்கன்றுகள்) இந்த வருடமும் தென்னங்கன்றுகளை(60 கன்றுகள்) பெற்று தந்த எமது நிர்வாகியும் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள்.

அத்துடன் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பத்தினர் மற்றும் செயலாளர் திரு மோகனறூபன், திரு இராமலிங்கம், திரு சிறீதரன் ஆகியோருக்கு எமது நன்றிகள்.

ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 22:24, ஏராளன் said:

வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025

மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள +94 77 777 5448,

+94 77 959 1047 (WhatsApp, Viber)

10) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம்(சுழிபுரம் கிழக்கு, ஏழாலை வடக்கு) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸமா றுக்மன் குடும்பம் 40000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

23/09/2025 இன்று வரை மொத்தமாக 360070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.

Edited by ஏராளன்
வடக்கு

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர் கௌரவிப்பும் நான்காம் ஆண்டு நிறைவு விழாவும் 10/10/2025.

மரக்கன்றுகள் வழங்கலில் உதவிகள் புரிந்த திரு ந.கோபிக்குமரன், செல்வன் யது ஆகியோருக்கும் வீட்டுத்தோட்டம் செய்வதற்காக விதைகள் வாங்க உதவிய திரு து.வினோதரன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.

ஒளிப்பதிவு திரு ஜெ.ரஞ்சித்.

01.jpg

02.jpg

03.jpg

வீட்டுத்தோட்டம் செய்ய விதைகள் வழங்கப்பட்டது.

04.jpg

05.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூலோகதேவி அறக்கட்டளை மூலமாக தொல்புரம் மேற்கில் குடிநீர் வழங்குவதற்கு உதவி செய்யப்பட்டது 19/10/2025.

செல்வி மகாலிங்கம் நிரோஜினியின் வீட்டிற்கு குடிநீர் தேவைக்காக ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் எமது புலர் அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்டது. அதற்கமைவாக இந்தப்பணிகளை செய்ய 78820ரூபா நிதியுதவி திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் அம்மையார் (திரு S.A.உமாபதி அவர்களின் அம்மா) ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளையினரால் வழங்கப்பட்டது. இது அவர்களுடைய மூன்றாவது உதவி வழங்கும் திட்டமாகும். இப்பணிகளைச் செய்கிற அவர்களுடைய பேரன் குடும்பத்தினர் திரு திருமதி அபிஷேக் திவ்யா தம்பதியினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஒளிப்பதிவு திரு இரா சிறிதரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது 25/10/25.

சங்கானையை பிறப்பிடமாகவும் சுழிபுரம் கிழக்கு மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31 ஆம் நாள் ஞாபகார்த்தமாக மகன் திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்கள் 30000 ரூபாவிற்கு இயலாமையுடைய 14 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அரிசி, பருப்பு, சோயாமீற் என்பவற்றை வழங்கி உதவியுள்ளார்.

திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எமது புலர் அறக்கட்டளை சார்பாகவும் விசேடதேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இப்பணிகளைச் செய்ய இணைப்பாளராக செயற்பட்ட திருமதி நவறஞ்சினி குமார்(பிள்ளை அக்கா) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

பொருட்களை வழங்கிய முதியோர் சங்கத் தலைவர் திரு சிவரஞ்சன் அவர்களுக்கும் முதியோர் சங்க கட்டடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதியோர் சங்க நிர்வாகிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

கலந்து கொண்ட நிர்வாகிகள் பொருட்களை வாங்கித் தந்த மதிகிருஸ்ணா லாண்ட்மாஸ்ரரில் எடுத்து வந்து உதவிய யது ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி வணக்கம்.

ஒளிப்பதிவு திரு இ.பரணீதரன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையால் 5ஆம் ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 3

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.