Jump to content

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2024 at 08:54, தமிழ் சிறி said:

வடக்கு  மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள்

அதென்ன வடக்கு மக்கள்?

அதாவது வடக்கு மக்கள் சிங்கள தேசத்திலிருந்து விசேடமான பிரிவை சேர்ந்தவர்கள் என்று அநுர சொல்ல வருகிறாரா?

ஒருவகையில் அதுவும் உண்மைதான்,

இங்கே சந்திக்கும் பல சிங்களவர்கள் யாழ்ப்பாணம் தாங்கள் போய் வந்தோம் யாழ்மக்கள் நல்லவர்கள்  என்று  என்னமோ ஐரோப்பா அமெரிக்கா போய் வந்தோம் என்பதைபோல பெருமையாகவும் வியப்பாகவும் சொல்வார்கள். சொல்லிவிட்டு எமது கண்களை கூர்ந்து பார்ப்பார்கள்.

அத்தனை லட்சம் அவர்களின் படைகள் இன்றும் வடக்கில் குவிந்திருந்தாலும் அவர்களுக்கு அது அவர்களின் லங்கா என்பதில் திருப்தியில்லை 

அந்த பயமும் கெளரவமும் தனித்துவமும் கரிகாலன் தந்தது.

கிழக்கு ஏற்கனவே பறிபோய்விட்டது இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் கிழக்கின் விடிவெள்ளிகள் சிங்களவனுடன் பார்ட்டி வைத்து பகிர்ந்தளிக்கிறார்கள்

 சிங்களவன் எமக்கான தீர்வொன்றை தானாக ஒருபோதும் தரபோவதில்லை, அப்படி ஒரு காலம் ஏதோ ஒரு முனையிலிருந்து எம் கதவை தட்டும்வரை....

வடக்கையாவது முழுமையான தமிழர்  பிரதேசமாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க முடிந்தவரை தமிழர்களின் நிலங்களை பிறர் இனங்களுக்கு விற்காமல், எமது மதங்கள், கலாச்சாரங்கள்,வியாபார நடவடிக்கைகள் மொழியின் ஆளூமை அனைத்தையும் முழுமையாக முழு வீச்சாக கடைப்பிடித்தால்,

சிங்களவர்கள் காலபோக்கில் எம் நிலத்தை தின்னமுன்னர் வன்னி முல்லை கிளிநொச்சியில் மக்கள் இல்லாத நிலபரப்புகளை நிலபுலனற்ற மலையக தமிழர்கள், வடகிழக்கின் தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை குடியேற்றி   பெருமெடுப்பில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து முழுமையாக எம் மக்களால் சூழப்பட்ட மாகாணமாக உருவாக்கி நேர்மையானதும் ஒழுக்கமானதுமான புதிய அரசியலை பிரசவித்தால்  எம் மண் சிங்கள தேசத்துக்குள்ளேயே தனித்துவமாக இயங்கும், சிங்களவர்கள் விருந்தாளிகள்போல் வந்து போகட்டும்,

இதுநாள்வரை எம்மிடையே இருந்த கட்சிகள் இல்லாமல் நேர்மையும் இளமையும் ஒழுக்கமும் கலந்த தமிழர் பிரதிநிதிகள் உருவாகி  காலத்திற்கேற்ப சிங்கள அரசியலுடன் முட்டி மோதாமல் எமது சக்தியை வைத்து எம் மக்களின் நலன்களுக்கான  ஒரு பேரம் பேசும் அரசியல் செய்து எம் மக்களை தனித்துவமானவர்களாக்கலாம்.

அதிலாவது சிறு நிம்மதி.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.