Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சீனா - தைவான்
படக்குறிப்பு, கோப்புப் படம்
14 அக்டோபர் 2024, 03:32 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது.

சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது.

சீனா - தைவான் இடையே என்ன நடக்கிறது?

தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை

தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவல்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீன ராணுவம் கூறுவது என்ன?

தைவானைச் சுற்றிலும் போர் ஒத்திகை நடப்பதை சீன ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, ராக்கெட் படை மற்றும் பிற படையினரும் பங்கேற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. சீன கடலோர காவல்படையும் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளது.

போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் பல முனைகளில் இருந்தும் கூட்டு தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போருக்கான தயார் நிலை, முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடுவது, கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த ஒத்திகை நடப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பயிற்சிகளை "பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு" மற்றும் "தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை" என்று சீன ராணுவம் விவரிக்கிறது.

அத்துடன், சீனா ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு, தைவானை சுற்றிலும் செய்யப்படும் போர் ஒத்திகை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

தைவானின் இறையாண்மையை சீனா அங்கீகரிக்கவில்லை என்பதும், தைவான் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறுகிறது என்பதும் நினைவு கூரத்தக்கது.

 
சீனா - தைவான்

பட மூலாதாரம்,PEOPLE'S LIBERATION ARMY SOCIAL MEDIA

படக்குறிப்பு, தைவானைச் சுற்றி வளைத்து சீனா போர் ஒத்திகை செய்யும் இடங்களை காட்டும் வரைபடம்

தைவான் பாதுகாப்புத்துறை பதில்

சீனாவின் நடவடிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டிப்பதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க தேவையான படைகளை அனுப்பியிருப்பதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பேணுவது குறித்து கடந்த வாரம் பேசிய அதிபர் லாயின் உறுதிப்பாட்டை அது சுட்டிக்காட்டியுள்ளது.

அச்சுறுத்தலை எதிர்கொள்ள போருக்கு தயாராவோம் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குப் பதிலடியாக, தைவானும் தனது தயார் நிலையை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

 
சீனா - தைவான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சின்ச்சு விமானப்படை தளத்தில் தயார் நிலையை உறுதிப்படுத்தும் தைவானின் மிராஜ்-2000 போர் விமானம்

தைவான் ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவு

சீனாவின் நடவடிக்கையை கண்டித்திருந்த தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சீனா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை பலவீனப்படுத்துவதாகவும், சர்வதேச விதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேரடியாக மோதல் ஏற்படும் வராமல் இருக்கும் வகையில் செயல்படுமாறும் அதன் படைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

சீன ஏவுகணைகளின் நகர்வை ராணுவ புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வரும் நிலையில், அனைத்து படைப் பிரிவுகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவானின் பாதுகாப்பு மண்டலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து வர வாய்ப்புள்ள எந்தவொரு தவறான தகவல் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு குடிமக்களை தைவான் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா - தைவான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (கோப்புப் படம்)

அமெரிக்கா என்ன சொல்கிறது?

தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டுள்ள ராணுவ ஒத்திகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

தைவான் அதிபர் லாயின் வழக்கமான பேச்சுக்குப் பிறகான சீனாவின் இந்த ஒத்திகையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும், அந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் சீர்கெடும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது என்று பைடன் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

"தைவான் நீரிணை மற்றும் அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்கெடச் செய்யும் எந்தவொரு நடவடிக்கைகளையும் சீனா தவிர்க்க வேண்டும். அதுவே, பிராந்திய அமைதி மற்றும் வளத்திற்கு அத்தியாவசியமானது" அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

சீனா - தைவான்

பட மூலாதாரம்,EPA

சீனாவின் கோபத்திற்கு என்ன காரணம்?

தைவான் அதிபராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியேற்ற லாய், அண்மையில் மக்களுக்கு ஆற்றிய உரையில், தைவானின் தன்னாட்சி அந்தஸ்தை கட்டிக் காக்க உறுதியளித்தார்.

தைவானுக்கு உரிமை கோரும் சீனாவை மறைமுகமாக சாடும் வகையில், "இணைப்பு முயற்சியையோ, நமது இறையாண்மை மீதான ஆக்கிரமிப்பையோ தடுப்பதில் உறுதியாக" இருப்பதாக அவர் சூளுரைத்தார்.

லாய் பதவியேற்றதுமே செய்தது போன்ற போர் ஒத்திகையை இம்முறையும் சீனா செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா

 

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா.

சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது.

இது “தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு” ஒரு எச்சரிக்கை என்ற தைபே மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் கண்டனத்தையும் பெற்றது.

தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் “பகுத்தறிவற்ற மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு” தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தாய்வானின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அதற்கேற்ப பதிலளிக்க தகுந்த படைகளை அனுப்பியுள்ளதாக” கூறியது.

அண்மைய ஆண்டுகளில், சீனா தைவானைச் சுற்றி தனது இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

ஒக்டோபர் 10 அன்று ஜனாதிபதி லாய் சிங்-தேவின் தேசிய தின உரையின் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த போர் பயிற்சிகள் வந்துள்ளன.

ஜனநாயக ரீதியில் ஆளும் தாய்வானை, சீனா தனது சொந்தப் பிரதேசமாக கருதுகிறது.

https://athavannews.com/2024/1404050

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீன ராணுவத்தின் போர்ப்பயிற்சியால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம்

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரும் நிலையில், தைவானின் எல்லைகளை சுற்றி வளைத்து, சீன ராணுவம் போர்ப் பயிற்சியை மேற்கொண்டிருப்பதால் தென் சீனக்கடலில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன ராணுவத்தின் முப்படையினரும் 2 நாட்களாக மேற்கொள்ளும் போர்ப்பயிற்சி,பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும், இறையாண்மையைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கை என்று சீன ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தைவானின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மிரட்டும் போர்ப்பயிற்சியை உடனே நிறுத்துமாறு தைவான் ஜனாதிபதி லாய் ச்சிங் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் நடவடிக்கைகளை தைவான் படைகள் தடுத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

https://thinakkural.lk/article/310741

  • கருத்துக்கள உறவுகள்
Posted

China vs Taiwan: குட்டி தீவை நாலா பக்கமும் சுற்றிவளைத்த சீனா; அமெரிக்கா சொன்னது என்ன?

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.