Jump to content

இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தின் மீது ஆளில்லா விமானதாக்குதல் - ஐந்து பேர் பலி 60க்கும் மேற்பட்டவர்கள் காயம்

ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

இஸ்ரேலின் வடபகுதியில் உள்ள இராணுவதளமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட  ஆளில்லா இராணுவதாக்குதலில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலிற்கு ஹெஸ்புல்லா அமைப்பு உரிமை கோரியுள்ளது.

GZ0BP-2bkAADaK9.jpg

ஹைபாவிலிருந்து தென்பகுதியில் உள்ள பினாமியாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் காயமடைந்த படையினரில் ஏழு பேரின் நிலை ஆபத்தானதாக காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலிற்கு ஹெஸ்புல்லா அமைப்பு உரிமை கோரியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கொலானி படையணியை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்லெபனானிலும் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதில் தாக்குதல் இதுவென ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்கியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/196225

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.