Jump to content

சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. 

காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் இந்த சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பூநகரி கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்துக்கான பணிகள் வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றன. 

கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட, தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

IMG-20241015-WA0082.jpg

IMG-20241015-WA0086.jpg

https://www.virakesari.lk/article/196419

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைவந்து ஒருமிதி மிதிக்க உந்த கரண்டுப்பெட்டி விழுந்துபோம்... ..அதுக்கு பிறகு என்னெண்டு யானை பிடிபடும்....

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.