Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
அனுதாபிகள்
---------------------
ஒரு மனிதனுக்கு
இன்னொரு மனிதன்
அனுதாபம் என்றார்
 
இன்னொரு மனிதனும் 
அதையே சொன்னார்
 
இப்படியே
இன்னொன்று இன்னொன்று என 
அனுதாபங்கள்
இலையுதிர் கால பழுத்த இலைகள் போல
இடைவெளி இல்லாமல்
விழுந்து கொண்டிருந்தன
 
சலித்துப் போன
அந்த ஒரு மனிதன்
ஒளித்துக் கொள்ள இடம் தேடினான்
 
இன்னும் 
ஒளித்துக் கொள்ள
தேவை வராதவர்கள்
இன்னொரு இடம் தேடினர்
அவர்களின் அனுதாபங்களை சொல்ல
 
அனுதாபங்கள்
உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது
அதைச் சொல்லும் மனிதர்களை.
  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விருப்பு அடையாளம்  முடிவடைந்துவிட்டது எல்லாவிதத்திலும் எதிர்மறையான கொள்கை கொண்ட ஜேவிபியை தமிழர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் கற்பனை பண்ணி பிரசாரமும் செய்து மகிழ்கிறார்களே ஒன்றுமே விளங்குது இல்லை 🙄 இதுவும் ஒன்று ஜேவிபியும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் போன்று ஜேவிபிக்கு தமிழர்களின் வலி தெரியுமாம்
    • நீங்கள் கல்வியை பற்றி எழுதியதால். அருச்சுனா Medical Admin - masters படித்துள்ளார், அதற்கு முன் அடிப்படை வைத்தியர் படிப்பை படித்துள்ளார் என நினைக்கிறேன். சுமந்திரன் மட்டும் என்னவாம்? இலங்கையில் பல்கலைகழக சட்ட பீடம் செல்லும் வகையில் ஏ எல் சோதனையில் அதி கூடிய வெட்டு புள்ளி எடுத்தவரா? இல்லை. அவர் திருச்சபையின் தயவில் இந்தியாவில் ஒரு சாதாரண பி எஸ் சி யாகத்தான் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு, பின்னர் மொனாஷில் ஒரு வருடம் மாஸ்டர்ஸ் (நினைவில் உள்ளதை வைத்து எழுதுகிறேன்). ஆக அவரும் ஒன்றும் பிறவி ஜீனியஸ் இல்லை. அது தேவையுமில்லை. உண்மையிலேயே நீங்கள் நினைப்பது போல் அவருக்கு அரசியல் அமைப்பில் அப்படி ஒரு சட்ட தேர்ச்சியும் இல்லை. ஷிராணி பண்டாரநாயக்க, வடக்கு கிழக்கு இணைப்பு இப்படி அவர் பங்குகொண்ட அரசியலமைப்பு வழக்குகளில் எனக்கு தெரிய எல்லாமுமே தோல்விதான். கஜனோடு ஒப்பிடும் போது அவர் ஒரு நல்ல லோயர் என்பது சரியே. ஆனால் இவரை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர் ஒன்றும் ராம் ஜெத்மலானி இல்லை. ராம்ஜெத்மலானியோ, எந்த தனி மனிதனோ அப்படி பெரிய அப்பாடக்கர் இல்லை. தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா? ஜெரி அடம்ஸ், நெல்சன் மண்டேலா, காந்தி, இவர்கள் எவருமே புகழ் பூத்த வக்கீல்கள் இல்லை. அரசியலமைப்பு நிபுணர்களும் இல்லை. ஆனால் எதிர் துருவ அரசியலில் இருந்தாலும், காந்தி/நேரு அம்பேத்கரின் சேவையை பெற்று கொண்டனர். இதுதான் சரியான அணுகுமுறை.  
    • மொழிபெயர்ப்பு சரி என்றால். கோவிட் வைரஸ் ஆகக்குறைந்தது வேறு ஏதோ இடத்திலும் இருந்து இருக்கிறது. வூஹானை தவிர, வேறு எந்த உயிரியல் பரிசோதனை கூடங்களில் கோவிட் வைரஸ் இருக்கவில்லை என்பதை ஏன்  அமெரிக்கா விசாரணை உறுதிப்படுத்தமுடியவில்லை? அப்படி உறுதிப்படுத்தும் விசாணையே நடக்கவில்லை. அமெரிக்காவும் சேர்ந்தே இந்த ஆய்வில் ஈடுபட்டது, அந்த பக்கத்தை மறைகிறது போலும்.
    • சீமான் திரியில் எழுதி இருந்தேன். தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என. இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும். சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார்.  ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார். அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார். வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும். ஒரு அரசியல்வாதி? யாகாவாயினும் நா காக்க.
    • இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே   சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை  அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.   இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.