Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் - தென்  ஆபிரிக்கா  டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்கெட்டைக் கைப்பற்றியபோது தனது 300ஆவது டெஸ்ட் விக்கெட்டைப் பூர்த்தி செய்தார்.

அப் போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய கெகிசோ ரபாடா, தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 302ஆக உயர்த்திக்கொண்டார்.

மேலும் 11,817 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற பெருமையை ரபாடா பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்தி செய்த 6ஆவது வீரரானார் கெகிசோ ரபாடா ஆனார்.

டேல் ஸ்டெய்ன் (439 விக்கெட்கள்), ஷோன் பொலொக் (421), மக்காயா என்டினி (390), அலன் டொனல்ட் (330), மோன் மோர்க்கல் (309) ஆகியோர் ஏற்கனவே 300 விக்கெட்களைப் பூர்த்திசெய்த தென் ஆபிரக்கா பந்துவீச்சாளர்கள் ஆவர்.

இப் போட்டியில் ரபாடாவை விட வியான் முல்டர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 30 ஓட்டங்களையும் தய்ஜுல் இஸ்லாம் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டமும் சிறப்பாக அமையவில்லை.

முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டோனி டி ஸோர்ஸி 30 ஓட்டங்களையும் ரெயான் ரிக்ல்டன் 27 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/196816

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29 வயதில் 300 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் ககிசோ ரபாடா அவரது முதல் விக்கெட்டினை கைப்பற்றியபோது, தென்னாபிரிக்க அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்தார். தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ககிசோ ரபாடா. தென்னாப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6-வது வீரராக ரபாடா மாறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்

டேல் ஸ்டெயின் – 439 விக்கெட்டுகள் (93 போட்டிகளில்)

ஷான் பொல்லக் – 421 விக்கெட்டுகள் (108 போட்டிகளில்)

மக்காயா நிட்னி – 390 விக்கெட்டுகள் (101 போட்டிகளில்)

ஆலன் டொனால்டு – 330 விக்கெட்டுகள் (72 போட்டிகளில்)

மோர்னே மோர்க்கல் – 309 விக்கெட்டுகள் (86 போட்டிகளில்)

ககிசோ ரபாடா – 303* விக்கெட்டுகள் (65 போட்டிகளில்)

தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் ககிசோ ரபாடா பெற்றுள்ளார். அவர் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

https://thinakkural.lk/article/310986

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ் சொந்த‌ ம‌ண்ணில் 106ர‌ன்ஸ் முத‌லாவ‌து இனிங்சில்

 

இந்தியாவில் ந‌ட‌ந்த‌ தொட‌ரில் கூட‌ ம‌ழையால் விளையாட்டு இர‌ண்டு நாளுக்கு மேல் த‌டை ப‌ட்டு விளையாட்டை ச‌ம‌ நிலையில் கூட‌ இவ‌ர்க‌ளால் முடிக்க‌ முடிய‌ வில்லை

 

இள‌ம் வீர‌ரை க‌ப்ட‌னாய் போட்டு இருக்கின‌ம் அவ‌ருக்கு அனுப‌வ‌ம் இல்லை என்று தான் சொல்லுவேன் அதோடு இப்ப‌ இருக்கும் வ‌ங்கிளாதேஸ் அணி 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் பின்ன‌டைவை ச‌ந்திக்கும்

 

முன்ன‌னி வீர‌ர்க‌ள் எல்லாரும் கிட்ட‌ த‌ட்ட‌ ஓய்வை அறிவித்து விட்டின‌ம் . அனுப‌வ‌ம் இல்லா இள‌ம் வீர‌ர்க‌ளை வைத்து வ‌ங்கிளாதேஸ் கிரிக்கேட் வாரிய‌ம் எப்ப‌டி தான் அணிய‌ கொண்டு ந‌ட‌த்த‌ போகின‌மோ தெரியாது..............................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு 2வ‌து டெஸ்ட் தொட‌ங்குது

 

தென் ஆபிரிக்கா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

 

தொட‌ர் 2-0 என‌ முடியும்............................

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா முத‌லாவ‌து இனிங்சில் பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ வாய்ப்பு இருக்கு கைவ‌ச‌ம் 8விக்கேட் இருக்கு...............................

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ் மீத‌ம் இருக்கும் மூன்று நாளை தாக்கி பிடிக்க‌ மாட்டின‌ம்

 

தென் ஆபிரிக்கா சிம்பிலா வெல்ல‌ போகுது...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி ஸோர்ஸி, ஸ்டப்ஸ் கன்னிச் சதங்கள்; பலமான நிலையில் தென் ஆபிரிக்கா

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் போட்டியில் டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் குவித்த கன்னிச் சதங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா பலமான நிலையில் இருக்கிறது.

2910_tristan_stubbs.png

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

2910_tony_de_zorzi.png

தங்களது எட்டாவது போட்டியிலும் 5ஆவது போட்டியிலும் விளையாடும் டோனி டி ஸோர்ஸியும் ட்ரைஸ்டன் ஸ்டப்பஸும் இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் தென் ஆபிரிக்கா பலம்வாய்ந்த நிலையை அடைந்தது.

2910_thaijul_islam_bang_vs_sa.png

தென் ஆபிரிக்க ஜோடியினரால் ஆசிய மண்ணில் பகிரப்பட்ட 3ஆவது அதிசிறந்த இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் இதுவாகும்.

பலமான நிலையை அடைந்ததன் மூலம் தென் ஆபிரிக்கா இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அத்திவாரத்தை இட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்ததை தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

ஆரம்ப வீரரான அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டோனி டி ஸோரி ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

மார்க்ராம் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் திறமையாக துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 201 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

198 பந்துகளை எதிர்கொண்ட ட்ரைஸ்டன், 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார்.

டோனி டி ஸோர்ஸி முழுநாளும் துடுப்பெடுத்தாடி 211 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 141 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

டேவிட் பெடிங்ஹாம் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 110 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்ந்த இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/197456

  • கருத்துக்கள உறவுகள்

சில‌து விளையாட்டு நாளையுட‌ன் முடிந்து விடும்

வ‌ங்கிளாதேஸ் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம்👎.............................

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவ‌து டெஸ்ட் விளையாட்டும் மூன்றாவ‌து நாளில் முடிந்து விட்ட‌து

 

இர‌ண்டு டெஸ்ட் விளையாட்டிலும் வ‌ங்கிளாதேஸ் ப‌டு தோல்வி................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்ளைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த 53 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளை இழந்தது; பலாமான நிலையில் தென் ஆபிரிக்கா

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டோக்ரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

3010_thijul_islam.png

அப் போட்டியில் பங்களாதேஷ் ஒரே ஒரு பந்தில் பத்து ஓட்டங்களைப் பெற்றுவிட்டது. ஆனால் அந்த ஓட்டங்கள் துடுப்பிலிருந்து பெறப்படவில்லை.

3010__wiaan_muldrr_a.png

தென் ஆபிரிக்காவுக்கு பதிலளித்து முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே 5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் சட்டபூர்வமான ஒரே ஒரு பந்தில் 10 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுவிட்டது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது சேனுரன் முத்துசாமி ஓட்டங்களைப் பெறுகையில் அடிக்கடி ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் அவர் எச்சரிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வணிக்கு 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த 5 அபராத ஓட்டங்கள்தான் பங்களாதேஷுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னரே இனாம் ஓட்டங்களாக கிடைத்தது.

பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது கெகிசோ ரபாடா வெளிநோக்கி வீசிய முதலாவது பந்தை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் ஷாத்மன் இஸ்லாம் வெறுமனே விட்டுவிட்டார். இதனிடையே எண்ணிக்கைப் பலகையில் 5 இனாம் ஓட்டங்கள் சேர்ந்திருந்தது.

அடுத்த பந்து நோ போல் ஆனதுடன் அப் பந்து விக்கெட் காப்பாளரைக் கடந்து எல்லைக்கொட்டைத் தாண்டி சென்றுவிட்டது. இதனால் மேலும் 5 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு சேர, ஒரு சட்டபூர்வ பந்து வீசப்பட்ட நிலையில் அதன் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் அடுத்த 53 பந்துகளுக்குள் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையான 38 ஓட்டங்களில் 5 இனாம் ஓட்டங்கள் உட்பட 13 உதிரிகள் அடங்கியிருந்தது.

அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் ஆகிய மூவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்தனர்.

இந்த மூவரும் இப் போட்டியில் தத்தமது கன்னிச் சதங்களைப் பெற்றது விசேட அம்சமாகும்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனது துடுப்பாட்டத்தை 141 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த டோனி டி ஸோர்ஸி 177 ஓட்டங்களைப் பெற்றார்.

டேவிட் பெடிங்டன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் வியான் முல்டர் 105 ஓட்டங்களுடனும் சேனுரன் முத்துசாமி 68 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

போட்டியில் முதல் நாளான நேற்றைய தினம் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்திருந்தார்.

பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 198 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/197547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று  நாட்களில்  முடிவடைந்த டெஸ்டில் தென் ஆபிரிக்காவுக்கு மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றி

image

(நெவில் அன்தனி)

சட்டோக்கரம், ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 273 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அமோக வெற்றிபெற்றது.

மூன்று நாட்களில் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்தது.

புளூம்ஃபொன்டெய்னில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே தென் ஆபிரிக்காவின் முந்தைய மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றியாக இருந்தது.

இன்றைய வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமையாக தென் ஆபிரிக்கா கைபற்றியது.

அத்துடன் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் உபகண்டத்தில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த நான்கில் மூன்றில் வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தென் ஆபிரிக்காவின் வெற்றியில் கன்னிச் சதங்கள் குவித்த டோனி டி ஸோர்ஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், பந்துவீச்சில் பிரகாசித்த   கெகிசோ ரபாடா,  கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

இந்தப் போட்டி ஆரம்பித்தது முதல் கடைசிவரை தென் ஆபிரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி  இருந்தது.

தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 575 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்ட தென் ஆபிரிக்கா, எதிரணியை முதலாவது இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 143 ஓட்டங்களுக்கும் சுருட்டி அமோக வெற்றியீட்டியது.

இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸ் ஒன்றரை நாட்களுக்கு மேல் நீடித்ததுடன் பங்களாதேஷின் இரண்டு இன்னிங்ஸ்களும் ஒன்றரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் பிற்பகல் 1.20 மணியளவில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஃபலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மூன்றரை மணித்தியாலங்களுக்குள் 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: 575 - 6 விக். டிக்ளயார்ட் (டோனி டி ஸோர்ஸி 177, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 106, வியான் முல்டர் 105 ஆ.இ., சேனுரன் முத்துசாமி 68 ஆ.இ., டேவிட் பெடிங்டன் 58, தய்ஜுல் இஸ்லாம் 198 - 5 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 159 (மொனிமுல் ஹக் 82, தய்ஜுல் இஸ்லாம் 30, உதிரிகள் 22, கெகிசோ ரபாடா 37 - 5 விக்., டேன் பெட்டர்சன் 31 - 2 விக்., கேஷவ் மஹாராஜ் 57 - 2 விக்.)

பங்களாதேஷ் - ஃபளோ ஒன் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஹசன் மஹ்முத் 38, நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ 36, மஹிதுல் இஸ்லாம் அன்கொன் 29, கேஷவ் மஹாராஜ் 59 - 5 விக்., சேனுரன் முத்துசாமி 45 - 4 விக்.)

ஆட்டநாயகன்: டோனி டி ஸோர்ஸி, தொடர் நாயகன்: கெகிசோ ரபாடா (14 விக்கெட்கள்)

https://www.virakesari.lk/article/197607

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.