Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,NTK YT/TVK

 
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி,பிபிசி தமிழ்

"திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்" என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சீமான் விமர்சித்துள்ளார்.

"கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் என்ற கோபத்தில் சீமான் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது சீமான் விமர்சிப்பது ஏன்? இதன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம், மொழி எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார்.

பிளவுவாத அரசியல் செய்கிறவர்களை த.வெ.க.,வின் கொள்கை எதிரியாகக் குறிப்பிட்ட நடிகர் விஜய், "கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இவை நமது இரண்டு கண்கள்" எனப் பேசினார்.

சீமான் பேசியது என்ன?

இந்தப் பேச்சுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு கடும் எதிர்வினையைக் காட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கண் என்றவுடன் பயந்துவிட்டேன். சாம்பாரும் கருவாடும் வேறு வேறு. கருவாட்டு சாம்பார் எனக் கூறக்கூடாது.

அண்மையில், 'காட்டுப் பூனையும் நாட்டுக் கோழியும் ஒன்று' என்கிறார் விஜய். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான், "அண்மையில் வந்த படத்தில் கதாநாயகன், வில்லன் என இரண்டு பாத்திரத்தையும் அவர் (விஜய்) ஏற்றதால் குழம்பிப் போய்விட்டார். திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஏன் வேண்டும் என்பதற்கான காரணம் தெரிந்திருந்தால் அவர் சொல்ல மாட்டாரா?" என விஜயை சாடினார்.

"திராவிடம் என்பது வேறு. தமிழ்த் தேசியம் என்பது வேறு. திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இனத்துக்கு நேர் எதிரான ஒன்று. என் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியம். குடிக்க வேண்டும் என்பது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

விஜய் பாணியில் விமர்சித்த சீமான்

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,NTK/YT

தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படையே தவறாக இருப்பதாகப் பேசிய சீமான், "இது கொள்கையே அல்ல. தான் நடுநிலை என்கிறார். இது நடுநிலை அல்ல கொடுநிலை" எனக் கூறிவிட்டு, "வாட் ப்ரோ... வெரி ராங் ப்ரோ" என விஜய் பாணியிலேயே அவரைச் சாடினார் சீமான்.

அதைத் தொடர்ந்து, மாநாடு கட்-அவுட்டில் வேலுநாச்சியார் படத்தை த.வெ.க முன்னிறுத்தியது குறித்துப் பேசிய சீமான், "அவர் யார் எனச் சொல்லட்டும். சேர, சோழ, பாண்டியர், அஞ்சலை அம்மாள் யார் என அவருக்குத் தெரியாது" என்று பேசினார்.

மேலும், "பெண்ணிய உரிமை என்பதை வேலுநாச்சியாரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். 250 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளவுக்கு பெண்ணுரிமையைப் பேசியவர் வேறு யாரும் இல்லை. பெரியாரிடம் பெண்ணுரிமையை இவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்றால், வேலுநாச்சியாரிடம் இருந்து என்ன கற்றார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

'கொள்கை வேறு. உறவு வேறு'

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,PTI

மறுநாள் (நவம்பர் 2) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. எனக்கு கொள்கை மொழி தமிழ்தான். இந்தி உள்பட எல்லா மொழிகளும் எங்கள் விருப்ப மொழிதான்" என்றார்.

அண்ணன்-தம்பி உறவாக நடிகர் விஜயை பார்ப்பதாக முன்னர் சீமான் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கொள்கை வேறு. உறவு வேறு. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக எதிரிதான். எங்களுக்கு ரத்த உறவைவிட லட்சிய உறவுதான் முக்கியம்" என்றார்.

 

நாம் தமிழர் வாக்குகளை பிரிக்கிறதா த.வெ.க?

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,NTK/YT

"நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையை மாற்ற வேண்டும் அல்லது பேசுவதற்கு எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும்" எனவும் சீமான் கூறினார்.

த.வெ.க மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கூட்டம் எல்லாருக்கும் வரும். ஜல்லிக்கட்டுக்கும் கூட்டம் கூடியது. நாளை இன்னாரு நடிகர் பேசினாலும் கூட்டம் வரும். மதுரையில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா?" என்றார்.

"நாம் தமிழர் வாக்குகளை த.வெ.க பிரிக்கும் எனப் பேசப்படுகிறதே?" என செய்தியாளர்கள் கேட்டபோது, "இதெல்லாம் என்ன பேச்சு? யார் ஓட்டையும் யாரும் பிரிக்க முடியாது" என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.

 

சீமானின் பேச்சுக்கு த.வெ.க-வின் பதில் என்ன?

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,LOYOLAMANI/FB

சீமானின் விமர்சனம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் லயோலா மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், "இதுபோன்ற பேச்சுகள் வரவே செய்யும். மக்கள் பணி செய்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். ஏதோவோர் உணர்வின் அடிப்படையில் சீமான் பேசுகிறார். அதை மௌனமாகக் கடந்து போகவே விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.

"திராவிடமும் தமிழ்த்தேசியமும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பதைத் தனது கருத்து என்றுதான் விஜய் சொன்னாரே தவிர, கருத்தியலாக அவர் அதைக் கூறவில்லை. அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்" என்கிறார் லயோலா மணி.

மக்களுக்கு என்ன சித்தாந்தம் தேவையோ அதை நோக்கி த.வெ.க பயணிப்பதாகவும் த.வெ.க-வை ஒருவர் விமர்சிப்பதைவிட பல கோடி பேர் வாழ்த்துவதையே தங்கள் கட்சி பார்ப்பதாகவும் லயோலா மணி குறிப்பிட்டார்.

"தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை பிரதான எதிரிகளாகப் பார்க்கிறோம். பாசிசமும் ஊழல் நிறைந்த அரசும் இருக்கக்கூடாது என்பதுதான் த.வெ.கவின் நிலைப்பாடு. சீமான் எப்போதும் எங்களின் சகோதரர். அவரை விமர்சிப்பதற்காக அரசியல் களத்திற்கு நாங்கள் வரவில்லை" என்கிறார்.

 

சீமான் பேசியதன் பின்னணி என்ன?

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,AYYANATHAN/FB

அதேநேரம் சீமானின் பேச்சை விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன், தமிழக வெற்றிக் கழகத்தால் வாக்கு வங்கியில் பாதிப்பு வரலாம் என்ற கோபத்தின் வெளிப்பாடாக சீமான் பேசியதைத் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

“விஜய் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக உள்ளது. ஒரு மண்ணில் எந்த சித்தாந்தம் தோன்றியதோ, அந்த மண்ணுக்கு அது செய்த பங்களிப்பு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். திராவிட சித்தாந்தம் என்றால் பெரியார்தான். அவரது போராட்டம், வாழ்க்கை ஆகியவற்றால் பலன் பெற்ற மண்ணாக தமிழ்நாடு உள்ளது" என்றார் அவர்.

"தமிழ்நாட்டின் நலன், தமிழ் மக்கள் மேம்பாடு ஆகிய அரசியல் கூறுகளை உள்ளடக்கியதுதான் தமிழ்த் தேசியம். தமிழர்களை முன்னேற்றிய ஒன்றை இரண்டு கண்கள் என விஜய் கூறியதில் என்ன தவறு?" என அய்யநாதன் கேள்வி எழுப்புகிறார்.

மாநாட்டில் விஜய் பேசிய பேச்சின் மூலம் நாம் தமிழர் கட்சியுடன் த.வெ.க கூட்டு சேராது என்பதைப் புரிந்து கொண்டதால், தனது எதிர்ப்பை சீமான் வெளிக்காட்டுவதாகக் கூறுகிறார் கா.அய்யநாதன்.

 

நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன?

விஜய் மீது சீமான் வைக்கும் விமர்சனங்கள் என்ன? பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா?

பட மூலாதாரம்,EDUMBAVANAMKARTHIK/FB

இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், "வாக்குகளை விஜய் பிரிப்பார் என நினைத்திருந்தால் அப்போதே எதிர்த்திருப்போம். இது விஜய் மீதான காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ இல்லை. இதுவொரு சித்தாந்த முரண்" என்கிறார்.

"காலம் காலமாக ஏமாற்றப்பட்ட மக்கள், தாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என்ற விழிப்புணர்வைப் பெற்று வரும் சூழலில் அதை மீண்டும் விஜய் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதால் எதிர்க்கிறோம்" என்றார் கார்த்திக்.

தனது அரசியல் வருகையை பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சி வரவேற்றதாகக் கூறும் இடும்பாவனம் கார்த்திக், "கடந்த ஆறு மாதங்களாகத் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. மாநாட்டில் பேசிய பின்னரே விமர்சிக்கிறோம்" என்றார்.

"திரைக் கவர்ச்சியை நம்பி அரசியலை ஓட்டிவிடலாம் என விஜய் நினைக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை" என்றும் கடுமையாக இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அய்‌ய‌நாத‌ன் திருமாள‌வ‌ன் புக‌ழ் பாடி ஓய்ந்து விட்டார் இப்போது விஜேய்

 

சீமானை சீண்டின‌து விஜேய் அத‌ற்க்கு எதிர்வினைய‌ சீமான் முன் வைத்தார்.....................

 

விஜேய்க்கு ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் வ‌ந்த‌ போது விஜேக்கு ஆத‌ர‌வாய் குர‌ல் கொடுத்த‌தே சீமான் தான்

 

த‌மிழ் நாட்டு பீஜேப்பி விஜேயை மிர‌ட்டின‌ போது விஜேய்க்கு ஆத‌ர‌வாய் நின்ற‌து சீமான் தான்

இப்ப‌டி சொல்ல‌ ப‌ல‌ இருக்கு........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்?

விஜய் - சீமான்
5 மணி நேரங்களுக்கு முன்னர்

‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) மாநாட்டில் விஜய் பேசியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்.

இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் என்ற தன்னுடைய தனித்த வாக்கு வங்கிக்கு விஜயின் தமிழ் தேசியம் குறித்த பேச்சால் ஆபத்து ஏற்படும் என்பதாலேயே சீமான் இப்படி விமர்சித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், “எங்களுடைய விமர்சனம் கோட்பாட்டு ரீதியிலானது மட்டுமே, வெற்றி குறித்ததோ, வாக்கு வங்கி குறித்ததோ அல்ல,” என்கின்றனர், நாம் தமிழர் கட்சியினர்.

இதற்கு, “எங்களுடைய எதிரிகள் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தான், நாம் தமிழர் கட்சி எங்கள் எதிரி அல்ல,” என த.வெ.க தரப்பிலிருந்து பதில் வருகிறது.

 

கடந்த அக்டோபர் 27-ஆம் த.வெ.க மாநாடு நடைபெற்ற திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ராணி வேலுநாச்சியார் என, நாம் தமிழர் முன்னெடுக்கும் மன்னர்களைப் போற்றும் அரசியலை விஜயும் முன்னெடுப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. மேடையில் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என விஜய் பேசியதிலிருந்து, தமிழ் தேசியத்தையும் அவர் தழுவிக்கொள்ள நினைத்தது தெளிவானதாக, அரசியல் ஆய்வாளர்கள் அச்சமயத்தில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தான், தமிழ் தேசியம் குறித்த விஜயின் பேச்சைக் கடந்த இரு தினங்களாக விமர்சித்துவந்தார் சீமான். “வேலுநாச்சியார், மூவேந்தர்கள், அஞ்சலை அம்மாள் குறித்து விஜய்க்குத் தெரியாது,” என நேரடியாகவே விமர்சித்தார். “திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றல்ல. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்,” என்றார் சீமான்.

சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 01) நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் தான் இவ்வாறு சீமான் பேசியிருந்தார்.

சீமானது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

விஜய்

பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு, திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என பேசியிருந்தார் விஜய்

வாக்கு வங்கி அரசியலா?

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை நடந்திருக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. முதல் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1% ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1% வாக்குகள் கிடைத்தன. இதன் காரணமாக, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அந்தஸ்தை எட்டியது நாம் தமிழர் கட்சி.

ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய தலைமுறையினர், தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு எதிராக மாற்று அரசியலை நாடும் இளைஞர்கள் ஆகியோர்தான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்காளர்கள். தற்போது சீமான் பேசும் தமிழ் தேசிய ஆதரவை பெரியார் ஆதரவுடன் விஜய் முன்வைப்பதால், தன்னுடைய அடிப்படை வாக்காளர்கள் த.வெ.க பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், சீமான் சற்று கலக்கம் அடைந்திருப்பதாக தெரிகிறது என்கின்றனர், மாநில அரசியலை உற்றுநோக்கும் அரசியல் நிபுணர்கள்.

எனினும், கணிசமாக அந்த வாக்குகள் குறையுமா என்பதைத் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“கொள்கை அடிப்படையிலான மோதல் என்பதைவிட இது வாக்கு வங்கி சம்மந்தப்பட்டது. விஜய் திராவிடம், பெரியாரை முன்னிறுத்தியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். விஜய் மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் சீமானுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

 
இடும்பாவனம் கார்த்திக்

பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK

படக்குறிப்பு, விஜயை விமர்சிக்க வேண்டாம் என கட்சி சார்பில் முன்னர் முடிவெடுத்ததாக இடும்பாவனம் கார்த்திக் கூறுகிறார்

சீமானின் விமர்சனம் அதீதமானதா?

மாநாட்டுக்கு முன்னதாகப் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் விஜயை ‘தம்பி’ என அழைத்துவந்தார் சீமான். ஆனால், தற்போது கொள்கை முரண் காரணமாக, “கொள்கை வேறாக ஆனபின் அண்ணன் என்ன, தம்பி என்ன?” என்றும் சீமான் பேசியிருந்தார்.

அதேபோன்று, மாநாட்டுக்கு முன்பாக தனக்கு ஒத்த கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என சீமான் எதிர்பார்த்திருக்கலாம் என ப்ரியன் கூறுகிறார். இரு கட்சிகளும் கூட்டணியாகக் கூடப் போட்டியிடலாம் என்ற யூகங்கள் கிளம்பியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

விஜயை விமர்சிக்க வேண்டாம் என்ற முடிவை மாநாட்டுக்கு முன்னதாகவே தங்களின் உயர்மட்டக் குழுவில் சீமான் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறுகிறார், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்.

“அவருடைய கொள்கை தெரிவதற்கு முன்பாகவே மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விஜயை வாழ்த்தினோம். அவர் நம் தோழமை சக்தி என்ற நிலைப்பாட்டை சீமான் எடுத்தார்,” என்கிறார் கார்த்திக்.

திராவிடம், தமிழ் தேசியம் இரண்டையும் ஆதரித்திருக்கும் விஜயின் த.வெ.க-வை, அவற்றை ஏற்கெனவே பேசிவரும் இருவேறு கட்சிகளும் தங்களின் எதிரிகட்சியாக பார்க்கிறது.

“திராவிடம் - தமிழ் தேசியம் இரண்டும் நெடுங்காலமாக வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுகுறித்த எதிரெதிர் விமர்சனப் பார்வைகள் தி.மு.க, நா.த.க-வுக்கு உண்டு. நடுநிலையான நிலைப்பாட்டை விஜய் எடுத்திருக்கிறார். சர்ச்சையில் சிக்க வேண்டாம் என நினைத்திருப்பார்,” என்கிறார் ப்ரியன்.

மாநாட்டுக்குப் பின்னர் சீமான் கட்சியிலிருந்து இளைஞர்கள் விஜய் கட்சிக்குச் செல்வார்கள் என பரவலாக அரசியல் மட்டத்தில் பேசப்படுவதை சீமான் ரசிக்கவில்லை, அதனாலேயே இத்தகைய எதிர்வினையை அவர் ஆற்றியிருப்பதாகவும் கூறுகிறார் ப்ரியன்.

“ஆனால், அவருடைய விமர்சனங்கள் செயற்கையாக இருக்கின்றன. மாநாட்டுக்கு முன்பு ஒருமாதிரியும் இப்போது ஒருமாதிரியும் பேசுகிறார். தேவையில்லாத வார்த்தைகளால் விமர்சிப்பது அதீதமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

நாம் தமிழர் கட்சிக்குள் அதிருப்தியா?

நாம் தமிழர் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியிருப்பதாக ப்ரியன் கூறுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சீமான் ‘தவறான அணுகுமுறையை கையாள்வதாக’ அவர்கள் தெரிவித்திருந்தனர்.

“சீமானின் கட்சியில் 4-5 மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. தொடர்ச்சியாக நிர்வாகிகள் விலகுகின்றனர்,” என்கிறார் ப்ரியன்.

“தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழர்களைப் பிரிக்கிறார் சீமான். ஆனால், எல்லா தமிழர்களுக்குமான உரிமை, நல்லிணக்கம் குறித்து விஜய் பேசுகிறார். வரும் காலங்களில் சீமானுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பார் விஜய்,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக், “மொழியை சாதி, மதத்துடன் ஒப்பிடுகின்றனர். சாதி ரீதியான அரசியலை நாங்கள் செய்வதாகக் கூறும் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். தேர்தல் பரப்புரைகளில் நாங்கள் சாதியை எதிர்த்துப் பேசுகிறோம்,” என்றார்.

 
மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூவேந்தர்களின் கட்-அவுட்

பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X

படக்குறிப்பு, மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூவேந்தர்களின் கட்-அவுட்

தமிழ் தேசிய அரசியல்

இரண்டு, மூன்று முறை தங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் கூட விஜய்க்கு செலுத்துவார்கள் என்ற பயம் சீமானுக்கு இருக்கிறது, என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். “அ.தி.மு.க, தி.மு.க வேண்டாம் என நினைப்பவர்கள், புதிதாக வரும் கட்சிக்கு வாய்ப்பளிக்கலாம் என நினைப்பார்கள். இம்முறை அது சீமானாக இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார் அவர்.

எனினும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு தற்போது எந்த இடமும் இல்லை என்றும், தமிழ் தேசியத்தைக் கையிலெடுத்த ஈ.வெ.க.சம்பத், மா.பொ.சி., பழ.நெடுமாறன் ஆகியோர் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“சீமான் பேசும் தமிழ் தேசியம் நீர்த்துப்போன, தோற்றுப்போன கொள்கை. மாறாக, திராவிடமும் தமிழர் நலனைத்தானே பேசுகிறது. அதில் குறைகள் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் திராவிடத்தால் ஒன்றும் நிகழவில்லை என கூறிவிட முடியாதுதானே,” என்கிறார் அவர்.

தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி எனப் பல கட்சிக் கொள்கைகளின் கலவையாக விஜய் தன் கொள்கையை அறிவித்திருக்கிறார் எனக்கூறும் குபேந்திரன், அது தன்னை மற்றக் கட்சிகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ளும் முயற்சி என்கிறார்.

தமிழ் தேசியம் குறித்த விளக்கத்தையோ, தமிழ் தேசியம் - திராவிடம் இரண்டு கண்கள் என கூறியதற்கான அர்த்தத்தையோ மாநாட்டில் விஜய் விளக்கவில்லை. தமிழ் தேசியம் தொடர்பாக தன்னுடைய முன்னோடி யார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை என விமர்சனங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

 
சீமான்

பட மூலாதாரம்,NAAM TAMILAR

படக்குறிப்பு, விஜயை பல இடங்களில் வெளிப்படையாக 'தம்பி' என அழைத்துவந்தார் சீமான்

த.வெ.க., நா.த.க கட்சியினர் கூறுவது என்ன?

சீமானின் விமர்சனம், விஜய் மீதான தனிப்பட்ட வன்மமோ, கோபமோ, காழ்ப்புணர்ச்சியோ அல்ல என்கிறார், நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக்.

“இது தத்துவார்த்த ரீதியான முரண் தான். சித்தாந்தப் போர் இது. நாம் தமிழரை விட நாங்கள்தான் மாற்று என்று சொல்லியிருந்தால் கூட கடந்துபோயிருப்போம், எதிர்வினையாற்றியிருக்க மாட்டோம். வாக்குகள் போய்விடும் என எந்தக் கணக்கும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதோ, கமல் கட்சி தொடங்கியபோதோ எங்கள் கட்சியிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை, வாக்களிக்கவும் இல்லை. எங்கள் கட்சியினர் கொள்கைத் தெளிவு உள்ளவர்கள்,” என்கிறார் அவர்.

அதேசமயம், நா.த.க., எங்களின் எதிரி அல்ல என்கிறார், தமிழக வெற்றிக் கழகச் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

“மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்கள் கருத்தியல். திராவிடம், தமிழ்தேசியம் இரண்டுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதை அனைத்துக் கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன. அனைத்து மக்களுக்குமான கட்சியாக வரும்போது எங்களுக்கு இரண்டும் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான தலைவர்தான் விஜய். நாங்கள் இனவாதம், தூய்மைவாதம் பேசும் தமிழ் தேசியத்தைப் பேசவில்லை. தமிழர்களின் வாழ்வியலைப் பேசுகிறோம்,” என்கிறார்.

மேலும், நாம் தமிழரும் நல்ல கட்சிதான், அவர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள், என்றும் எங்களின் பிரதான எதிரி பா.ஜ.க, தி.மு.க தானே தவிர நா.த.க அல்ல என்றும் அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

என்றும் எங்களின் பிரதான எதிரி பா.ஜ.க, தி.மு.க தானே தவிர நா.த.க அல்ல என்றும் அவர் கூறினார்.

தட் தம்பி அப்படி ஓரமாய் போய் விளையாடு மொமெண்ட்.

சீமானை இப்போவெல்லாம் எல்லோரும் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

தட் தம்பி அப்படி ஓரமாய் போய் விளையாடு மொமெண்ட்.

சீமானை இப்போவெல்லாம் எல்லோரும் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுகிறார்கள்.

பண்ண‌ட்டுமே இது ஒன்றும் சீமானுக்கு புதித‌ல்ல‌...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, வீரப் பையன்26 said:

பண்ண‌ட்டுமே இது ஒன்றும் சீமானுக்கு புதித‌ல்ல‌...................................

தட் ஊருல உள்ள ரவுடி எல்லாம் என்னை அடிச்சு ஓஞ்சு போய் ஊரக்காலி பண்ணிட்டான் மொமெண்ட்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

தட் ஊருல உள்ள ரவுடி எல்லாம் என்னை அடிச்சு ஓஞ்சு போய் ஊரக்காலி பண்ணிட்டான் மொமெண்ட்🤣

2026 ம‌க்க‌ள் ப‌தில் சொல்லுவின‌ம்...............................

ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்காக‌ ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் க‌ட‌ந்த‌ 14வ‌ருட‌மாய் யார் நின்ற‌து என்ர‌ கேள்விக்கு சீமான் தான் என்று இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் தொட்டு ப‌ல‌ர் த‌ங்க‌ட‌ தெரிவை ரிவிட்ட‌ரில் தெரிவித்து இருக்கின‌ம்..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, வீரப் பையன்26 said:

2026 ம‌க்க‌ள் ப‌தில் சொல்லுவின‌ம்...............................

ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்காக‌ ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் க‌ட‌ந்த‌ 14வ‌ருட‌மாய் யார் நின்ற‌து என்ர‌ கேள்விக்கு சீமான் தான் என்று இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் தொட்டு ப‌ல‌ர் த‌ங்க‌ட‌ தெரிவை ரிவிட்ட‌ரில் தெரிவித்து இருக்கின‌ம்..................................

2026 இல் மட்டும் அல்ல கடந்த 15 வருடமா மக்கள் பதிலை தெளிவாக சொல்லி கொண்டுதான் உள்ளார்கள்.

2026 இல் டிவிட்டர், பேஸ்புக், டிக்டொக் மற்றும் உன்குழாயில் நா த க தனி மெஜோரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்பதை நானும் ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

2026 இல் மட்டும் அல்ல கடந்த 15 வருடமா மக்கள் பதிலை தெளிவாக சொல்லி கொண்டுதான் உள்ளார்கள்.

2026 இல் டிவிட்டர், பேஸ்புக், டிக்டொக் மற்றும் உன்குழாயில் நா த க தனி மெஜோரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்பதை நானும் ஏற்கிறேன்.

ஊட‌க‌ ப‌ல‌ம் ப‌ண‌ ப‌ல‌ம்

ஓட்டுக்கு காசு கொடுக்காம‌

35ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌மே........................

 

பெரியார் ம‌ற்றும் அண்ணா . ச‌மாதியில் இருந்து திமுக்காவால் சொல்ல‌ முடியுமா 2026 தேர்த‌லில் ஓட்டுக்கு காசு கொடுக்க‌ மாட்டோம்

 

அதோட‌ ம‌க்க‌ளை ஆடு மாடுக‌ள் போல் வாக‌ன‌த்தில் கூட்டிட்டு போய் காலை 500ரூபாய் மாலை 500ரூபாய் அதோட‌ பிரியாணி

 

இதுவெல்லோ அர‌சிய‌ல்...................

 

நீங்க‌ள் உண்மையான‌ ஆண் ம‌க‌னாய் இருந்தால் இல‌ங்கையில் ஒரு க‌ட்சிய‌ ஆர‌ம்பிச்சு ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்கு குர‌ல் கொடுத்து க‌ட்சிய‌ வ‌ள‌த்தெடுக்க‌லாமே அதை விடுத்து யாழிலும் முக‌ நூலிலும் அடுத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும் கேலியும் கிண்ட‌ல் செய்வ‌து தான் உங்க‌ ப‌ணி.....................அடுத்த‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்க‌ முத‌ல் அத‌ற்க்கு நீங்க‌ள் த‌குதியான‌ ஆளா என்று ஒரு க‌ன‌ம் க‌ண்டாடியில் மூஞ்சைய‌ பார்க்க‌வும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான்

இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடம் விசம் போன்றது என்றும், தமிழ்த் தேசியம் அதன் மாற்று மருந்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் - விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டின் பின்னரே இந்த கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில், விஜய் தனது சித்தாந்தம் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் உரை 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் குறித்த விஜய்யின் கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திராவிடம் என்பது மக்களை ஆள்வது என்றும், தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் உயர்நிலையை அடைய உதவுவது என்றும் கூறியுள்ளார்.

திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான் | Indian Politicin Seeman Speech

எனவே, இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழ் தேசியம் கூறுகிறது.

எனினும், திராவிடம் மதுபானகங்களை திறக்கிறது. திராவிடம் சாதிப் பிரிவினையை ஊக்குவிக்கிறது. எனினும் தமிழ் தேசியம் சாதிப்பிரிவினையை நிராகரிக்கிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் திராவிடம் எவ்வாறு தமிழ் தேசியத்துடன் உண்மையாக இணைய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை சீமானின் இந்த கருத்துக்களுக்கு விஜய் இதுவரை பதில் எதனையும் வழங்கவில்லை. அத்துடன், தமது கட்சியினரும் சீமானின் கருத்து தொடர்பில் எவ்வித மாற்றுக்கருத்தையும் கூறக்கூடாது என்றும்  விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/indian-politicin-seeman-speech-1730720930#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ஏராளன் said:

திராவிடம் என்பது மக்களை ஆள்வது என்றும், தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் உயர்நிலையை அடைய உதவுவது

வெற்று வார்த்தைகள். இரெண்டின் நோக்கமும் அதிகாரத்தை அடைந்து அதன் மூலம் நன்மை மக்களுக்கு செய்வதுதான்.

திராவிடத்தை பாவித்து சுயநலன் அடைந்தது கருணாநிதி குடும்பம்.

தமிழ் தேசியத்தை வைத்து சுயநலன் அடைந்தது சீமான்.

இரு கயவர்கள் இரு கொள்கைகளை தவறாக பயன்படுத்தியது கொள்கைகளின் தவறல்ல.

2 hours ago, ஏராளன் said:

மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழ் தேசியம் கூறுகிறது.

எனினும், திராவிடம் மதுபானகங்களை திறக்கிறது.

பொய். 

மதுக்கடைகளை திறப்பது திமுக எனும் கட்சி.

மதுக் கடையை திறவுங்கள் என்பது திராவிட அரசியல் தத்துவத்தின் அங்கம் அல்ல.

அதே போல் இலட்சிய தமிழ் தேசிய மண்ணாக இருந்த புலிகளின் நடைமுறை அரசில் கூட மதுக்கடைகள் இருந்தன.

ஆகவே இது கொள்கை சம்பந்த பட விடயமே அல்ல.

சீமானுக்கு தமிழ் தேசியம் என்றாலே என்ன என்று தெரியவில்லை.

2 hours ago, ஏராளன் said:

அதேவேளை சீமானின் இந்த கருத்துக்களுக்கு விஜய் இதுவரை பதில் எதனையும் வழங்கவில்லை. அத்துடன், தமது கட்சியினரும் சீமானின் கருத்து தொடர்பில் எவ்வித மாற்றுக்கருத்தையும் கூறக்கூடாது என்றும்  விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

லெட்ப் ஹாண்ட் டீலிங்

Edited by goshan_che


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.