Jump to content

தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அணி திரளவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image

- எம்.ஆர்.எம்.வசீம்

தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது  லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் சட்டம் இருப்பது இலங்கையிலாகும். என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது வேலை நேரம் 8 மணி நேரமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்களை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

எமது நாட்டில் தொழிற் சங்கங்கள் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைக்காக முன்னெடுத்து வந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே நாங்கள் எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியுமாகின. அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும். அதனால் லக்ஷ்மன் நிபுணாரச்சியின் கூற்றை நாங்கள் கண்டிப்பதுடன் அவரின் இந்த கூற்றுக்கு எதிராக இந்த நாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அணி திறளவேண்டும். நிபுணாரச்சி போன்றவர்களுக்கு இவ்வாறு கதைக்கவிட்டு, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் எங்கே என கேட்கிறோம்.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்களில் அதிகமானவை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டதாகும். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்ததுடன் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து, ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடையில் வளமான நாடு அழகான வாழ்க்கை என தெரிவித்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.மக்கள் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அட்டை பக்கத்தை மாத்திரம் பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதுதான்  இவர்களின் உண்மை சுயரூபம் அவர்களின் வாய்களினாலே வெளிவருகிறது.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளுக்கு எமது புதிய ஜனநாயக முன்னணியே பாரிய சவாலை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு பாரிய பிரச்சினையாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை பாதுகாத்துக்கொள்வதும் தற்போது அவர்களுக்கு சவாலாகியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் பாரிய சக்தியை வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/197810

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது  லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.

தொழில்சங்கங்கள் இருந்தால் தனது ஆட்சிக்கும்.கட்சிக்கும் ஆபத்து வரும் என்பதை நன்றாக அறிந்தவர் நம்ம தோழர்....பாம்பின் கால் பாம்பு அறியுமல்ல...சங்கங்கள் இருந்தால் ஒன்று கூடுவியள் கருத்து பகிர்வுகள் செய்வீர்கள் ..வீதியில் இறங்குவீர்கள் இது தெரியாத என்ன ? மூன்று நேரம் சோறு..வழங்கப்படும் பொத்தி கொண்டிருக்க வேணும் ...
மீண்டும் அரகலயா ஒன்று நாட்டில் ஏற்பட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் அதி உத்தமர்... 

ஆயுத புரட்சிகள் ஊடாக இப்படியான திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ,அதன் தலைவரையும் குடும்பத்தையும் ,பரம்பரையையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திஅழித்துவிடுவார்கள் ....

இவர்களின் ஆட்சியில் இரும்பு கரம் கொண்டு சோசலிச கொள்கையின்படி மெல்ல மெல்ல சங்கங்கள் அழிக்கப்படும் ...மத சார்பான சங்கங்களும் அடுத்த தேர்தலில்(2029) இல்லாமல் போகலாம்...

அதன் பின்பு ஏக்கராஜ்ய ,எக்கபக்சய(ஒரே ராஜ்ஜியம் .ஒரே கட்சி)
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
    • முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.