Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்; அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றி

image

(நெவில் அன்தனி)

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

0411_mohammed_rizwan.png

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது.

0411_haris_rauf.png

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

0411_steven_smith.png

அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 37 ஓட்டங்களையும் நசீம் ஷா 40 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

0411_pat_cummins.png

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது.

அவர்களில் மிச்செல் ஸ்டாக் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0411_aus_vs_pak_odi_series.png

எட்டாவது பந்துவீச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட மானுஸ் லபுஷேன் ஒரு ஓவரில் 5 ஓட்டங்களுக்கு ரிஸ்வானின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சற்று சிரமத்திற்கு மத்தியில் 33.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஸ்டீவ் ஸ்மித் (44), ஜொஷ் இங்லிஷ் (49) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்ததால் அவுஸ்திரேலியா தடுமாற்றம் அடைந்தது. (155 - 7 விக்.)

எனினும், சோன் அபொட் (13), பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர்.

தொடர்ந்து பெட் கமின்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 32  ஓட்டங்களைப்  பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்.

https://www.virakesari.lk/article/197891

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி. மண்ணில் 7 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒருநாள் முதலாவது வெற்றி

image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய பாகிஸ்தான் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

0811_abdullah_shaffique_pak_vs_aus_2nd_o

அவுஸ்திரேலிய மண்ணில் 7 வருடங்களின் பின்னர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஈட்டிய  முதலாவது வெற்றி இதுவாகும்.

0811_harris_rauf__vs_aus_2nd_odi.png

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நான்கு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் 5 விக்கெட் குவியல், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு, சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 5  விக்கெட்களையும்  ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சய்ம் அயூப் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 122 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்று பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தன் பலனாக அவுஸ்திரேலியா சிரமப்படாமல் வெற்றியை ஈட்டிக்கொண்டது.

பாபர் அஸாம் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: ஹரிஸ் ரவூப்

https://www.virakesari.lk/article/198227

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் நேற்று அவுஸ்ரேலியாவை வென்ற‌தை நினைக்க‌ ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு😁😛.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் நேற்று அவுஸ்ரேலியாவை வென்ற‌தை நினைக்க‌ ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு😁😛.........................

இந்த‌ Aரீமில் த‌மிழ‌க‌ வீர‌ர் சேய் சுத‌ர்ச‌னும் விளையாடுகிறார்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ரை வென்ற‌து பாக்கிஸ்தான்

 

அவுஸ்ரேலியா முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாட‌ வில்லை

அப்ப‌டி இருந்தும் இள‌ம் வீர‌ர்க‌ள் விளையாடி பாக்கிஸ்தான‌ வெல்ல‌ முடிய‌ வில்லை😁..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலிய மண்ணில் 22 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது

image

(நெவில் அன்தனி)

பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக சம்பியன் (50 ஓவர்) அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் மிக இலகுவாக பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 22 வருடங்களின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக பாகிஸ்தான் வீழ்த்தி வரலாறு படைத்தது.

மெல்பர்னில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 2 விக்கெட்களால் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபார பந்துவீச்சின் உதவியுடன் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திக் கொண்டிருந்தது.

அப் போட்டியில் அவுஸ்திரலியாவை 35 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான், கடைசிப் போட்டியில் மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களின் அசாத்திய பந்துவீச்சுகளால் அவுஸ்திரேலியாவை 31.5 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சுருட்டி வெற்றியிட்டிது.

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் சோன் அபொட் மாத்திரமே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக 22 உதிரிகளே இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பின்வரிசையில் அடம் ஸம்ப்பா 13 ஓட்டங்களையும் ஸ்பென்ஸர் ஜோன்சன் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 26.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சய்ம் அயூப் 42 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 37 ஓட்டங்ளையும் பெற்று 84 ஓட்டங்களைப் பகிரந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து பாபர் அஸாம் (28 ஆ.இ.), அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் லான்ஸ் மொறிஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப்.

1011_pak_win_in_aus.jpg

1011_pakistan_celebrate.png

https://www.virakesari.lk/article/198372

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியா மீண்டும் வெற்றி..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டு ம‌ச்சும் தோல்வி பாக்கிஸ்தான்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானுடனான ரி - 20 தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா

image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ஹோபாட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 29 ஓட்டங்களாலும் சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 13 ஓட்டங்களாலும்  வெற்றிபெற்றிருந்த அவுஸ்திரேலியா, இன்றைய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் ஆரோன் ஹார்டியின் சிறப்பான பந்துவீச்சும் மாக்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடி துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பாகிஸ்தான் 7ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானின் எஞ்சிய 9 விக்கெட்கள் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 41 ஓட்டங்களையும் ஹசீபுல்லா கான் 24 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆரோன் ஹார்டி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

மாக்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அணித் தலைவர் ஜொஷ் இங்லிஷ் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் மாக்கஸ் ஸ்டொய்னிஸுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.  

அவர்களைவிட ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி, ஜஹாந்தாத் கான், அபாஸ் அப்றிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மாக்கஸ் ஸ்டொய்னிஸ்.

தொடர்நாயகன்: ஸ்பென்சர் ஜோன்சன்

1811_aus_bt_pak_win_t20_series_3_nil.jpg

1811_barbar_azam.png

https://www.virakesari.lk/article/199111

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் அணிக்கு கூடுத‌ல் ஆலோச‌னை தேவை

 

இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் புது முக‌ங்க‌ள்

 

ஒரு கால‌த்தில் பாக்கிஸ்தான் அணி சிற‌ப்பாக‌ விளையாடின‌து

அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் ஓய்வு பெற‌

அதோட‌ ப‌டுத்த‌ அணி மீண்டு வ‌ர‌ வில்லை....................உள்ளூரில் ந‌ல்லா விளையாடி திற‌மைய‌ வெளிப்ப‌டுத்தும் வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம் அதோட‌ ப‌ழைய‌ இள‌ம் வீர‌ர்க‌ளையும் மீண்டும் அணியில் சேர்க்க‌னும்...............................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.