Jump to content

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2-15.jpg?resize=750,375&ssl=

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!

ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது,

எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன.

பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது.

இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது.

அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல் - பலர் கைது

image

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார்.

israel_fans_1.jpg

இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே  மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/198182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ்
இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்.....
இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.