Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/198246

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு வாகனம்

கண்டி (Kandy) பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனமொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வாகனத்தைச் சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறை

இதன்படி, குறித்த ஜீப் ரக வாகனம் சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு வாகனம் | Another Jeep Seized In Kandy

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயஸ்ரீ உயன பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

https://ibctamil.com/article/another-jeep-seized-in-kandy-1731228667

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

கண்டியில் (Kandy) தொடர்ந்து பல சொகுசு வாகனங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்தநிலையில் மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனமானது நேற்று (16)  கண்டி தலைமையக காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி முறைப்பாடு

பதில் காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு | Luxury Vehicle Seized In Kandy

மேலும், கடந்த 12 ஆம் திகதி தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/luxury-vehicle-seized-in-kandy-1731826577#google_vignette



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.