Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் டூ வீலர்களில் ஜிபிஎஸ் பொருத்தி, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, பகலில், வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் (சித்தரிப்பு படம்)
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டுள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வீட்டில் இருந்தவர்களின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆள் இல்லாத வீட்டில் நடந்த கொள்ளை பற்றி போலீசார் துப்பு துலக்கியது எப்படி? கொள்ளையடித்துவிட்டுச் சென்ற கும்பலை ஒரே வாரத்தில் போலீசார் பிடித்தது எப்படி?

என்ன நடந்தது?

கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு (வழக்கு எண்: 352/2024), கடந்த அக்டோபர் 21 அன்று பதிவானது. கிழக்கு சம்பந்தம் சாலையில், ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் குமார் என்பவர் தான் அந்த புகாரை அளித்திருந்தார். முதல் தகவல் அறிக்கையில், அந்த திருட்டு தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

குமார், ஆர்எஸ் புரம் விசிவி ரோட்டில் மளிகைக் கடையும், ஓர் உணவகமும் வைத்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும் காலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டைப் பூட்டி விட்டு, காலை பத்தரை மணிக்குக் கடைக்குப் போய் விடுவது வழக்கம். அதே வீட்டின் கீழ் தளத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குடியிருந்து வருகிறார்.

அக்டோபர் 21 அன்று, மதியம் இரண்டரை மணியளவில், குமாரை உடனே வருமாறு செல்வராஜ் அவசரமாக அழைத்துள்ளார். அங்கே சென்று பார்த்த போது, குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு, 60 சவரன் நகையும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

‘கார்களில் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை’

இரண்டு பேர், மாடி வீட்டிலிருந்து ஹெல்மெட் உடன் இறங்கிச் சென்றதைப் பார்த்து, வீட்டு உரிமையாளர் செல்வராஜ், நீங்கள் யாரென்று கேட்டதும், இருவரும் நிற்காமல் ஓடிச் சென்று, வெளியில் நின்ற காரில் ஏறி, பூ மார்க்கெட் பக்கமாக வேகமாகச் சென்று விட்டனர். அவரும், அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண்ணும் சத்தம் போட்டும் காரை நிறுத்தவில்லை.

அதன்பின், மாடியில் சென்று பார்த்தபோது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்து செல்வராஜ் அதிர்ச்சியடைந்து, குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் யாவும் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிலிருந்த ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ஆட்களை அடையாளம் கண்டறிய முடியவில்லை.

ஆனால் ஏழே நாட்களில் இருவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஜாஹீர் உசேன், மோனிஸ் என்பதைக் கண்டு பிடித்தனர். இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிப்பதற்கு முன், கொள்ளையர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குப் பயன்படுத்திய அதிநவீன தொழில் நுட்பங்கள், அவர்களைக் கைது செய்வதற்கு மேற்கொண்ட புலனாய்வு முறைகள் பற்றிய பல சுவராஸ்யமான தகவல்களை, ஆர்எஸ் புரம் போலீசார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

 
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, (சித்தரிப்பு படம்)

‘வாகனத்தில் மேக்னடிக் ஜிபிஎஸ் கருவி பொருத்தம்’

‘‘திருட்டு நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. அதன்பின், அவர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்துத் தேடினோம். அதில் இருந்த கேரளா பதிவெண் போலி என்பது தெரியவந்தது. அதே நிறமுள்ள கார் அப்பகுதியில் உள்ள வேறு இடங்களில் வலம் வந்துள்ளதை வேறு சில சிசிடிவி பதிவுகளில் கண்டுபிடித்தோம். அந்த காரின் ஒரிஜினல் எண்ணைக் கண்டுபிடித்த போது, அது சேரன் மாநகரில் ஓரிடத்தில் தினசரி ரூ.1750-க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரியவந்தது.’’ என்று தெரிவித்த போலீசார், தொடர்ந்து விவரித்தனர்.

‘‘அந்த காரை வாடகைக்குக் கொடுக்கும் போது, ஒரு மெசேஜ் அனுப்பி, கார் எடுப்பவரின் எண்ணை உறுதி செய்கின்றனர். அதில் தரப்பட்ட எண்ணை வைத்து, அந்த நாளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த டவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்த மொபைல் போன் பயன்பாட்டில் இருந்தது என்று பார்த்தபோது, அவர்கள் எங்கெங்கு காரை நிறுத்தி, என்னென்ன வாங்கினார்கள் என்று தெரியவந்தது."

"பூட்டை உடைப்பதற்காக சுக்ரவார்பேட்டையில் ஒரு கடையில் நிறுத்தி, டூல்ஸ் வாங்கியுள்ளனர். அந்த சிசிடிவியில்தான் அவர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.’’ என்று போலீசார் கூறினர்.

இருவரில் ஜாஹீர் உசேன் மீது ஏற்கெனவே கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் கார் திருட்டு, அன்னுாரில் ஒரு கூட்டுக் கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆர்எஸ் புரம் போலீசார், "மோனீஸ் மீது குனியமுத்துார் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்குப் பதிவாகியுள்ளது. இவர்களிடம் விசாரித்ததில், குமாரையும், அவரின் மனைவியையும் நீண்ட காலமாகக் கண்காணித்து, அவர்களின் வீட்டில் பெரிய அளவில் பணமும், நகையும் இருக்குமென்று திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.’’ என்று கூறினர்.

 
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,AMAZON

படக்குறிப்பு, 'கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன' என்கிறார் ஆராய்ச்சியாளர் மோகன்

இந்த கொள்ளை நடப்பதற்கு முன்பாக, குமார், அவரின் மனைவி இருவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் கடைபிடித்த உத்திதான் இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று ஆர்எஸ் புரம் போலீசார் கூறினர்.

அதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘குமாரும், அவரின் மனைவியும் தனித்தனியாக டூ வீலர்கள் வைத்துள்ளனர். அவர்களின் கடைகளுக்கு அடிக்கடி சென்று வந்த கொள்ளையர் இருவரும், குமாருக்கும், அவரின் மனைவிக்கும் தெரியாமல், அவர்களின் டூ வீலர்களில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’ கருவியை, பொருத்தியுள்ளனர். அதை வைத்து அவர்கள் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டிற்கே சென்று பகலில் கொள்ளையடித்துள்ளனர்.’’ என்றனர்.

 

‘குழந்தைகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கருவி’

கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இத்தகைய ஜிபிஎஸ் கருவிகளை குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் கார்களில் பொருத்தியுள்ளனர் என்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார்

இந்த வழக்கின் புகார்தாரரான குமாரிடம், உங்கள் டூ வீலரில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ் பொருத்தியது உங்களுக்குத் தெரியவில்லையா என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘கடைசி வரை எனக்கு அது தெரியவே இல்லை. போலீசார்தான் ‘என்னுடைய வாகனத்தில் அதைப் பொருத்தியிருப்பதாக குற்றவாளிகள் சொன்னதாகத்’ தெரிவித்து, அதை எடுத்துள்ளனர். எப்படிப் பொருத்தினார்கள், எப்போது பொருத்தினார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக எங்களை கண்காணித்துள்ளனர்’’ என்றார்.

இது போன்று ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’களை வாகனங்களில், உரிமையாளருக்குத் தெரியாமல் பொருத்த முடியுமா என்பது பற்றி, வனத்துறைக்காக ‘ஜிபிஎஸ்’ பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் மோகன் பிபிசி தமிழிடம் விளக்கியபோது, ‘‘இப்போது கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் வந்து விட்டன. அமேசானில் 1,400 ரூபாய்க்கு இவை கிடைக்கின்றன.” என்கிறார்.

மேலும், “வாய்ஸ் ரிக்கார்டர் உடன் ஜிபிஎஸ் கருவிகளே, 3000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த கருவிகள் வாகனத்தின் ஒரு பாகம் போலவே இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த காந்தத்துடன் வைத்து, வாகனத்தின் இரும்பு பாகத்தில் ஒட்ட வைத்துவிட்டால் யாராலும் எளிதில் கண்டறிய முடியாது. வாகனத்தைப் பற்றி சற்று தெரிந்தவர்களே இதைக் கண்டுபிடிக்க முடியும்.’’ என்று தெரிவித்தார்.

கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘‘இத்தகைய ‘ஜிபிஎஸ்’கள் செயல்பட பேட்டரி அவசியம். முன்பு கார்களில் உள்ள பேட்டரிகளில் இவற்றை இணைக்க வேண்டியிருந்தது. இப்போது மொபைல் போன்களில் உள்ள லித்தியம் பேட்டரியுடன் இயங்கும் கைக்கு அடக்கமாக ‘ஜிபிஎஸ்’ கருவிகள் வந்து விட்டன.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “கார்களில் உள்ள பழுதுகளை சென்சார் மூலமாக ‘ஸ்கேன்’ செய்வதற்கு உதவும் ‘டயாக்னஸ்டிக் டிரபிள் கோடு கப்ளர்’ (Diagnostic Trouble Code coupler) இருக்கும். அதில் ‘ஜிபிஎஸ்’ பொருத்தினால் பேட்டரி தேவையில்லை. அதை மொபைலில் ‘ஆப்’ டவுன்லோடு செய்து, இணைத்துக் கொண்டால், வாகனத்தின் நடமாட்டத்தை, மொபைலிலேயே கவனித்துக் கொள்ளலாம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் இவற்றை கார்களில் பொருத்தியுள்ளனர்.’’ என்று விளக்கினார்.

‘‘இந்த ‘ஜிபிஎஸ்’ கருவிகள், நகருக்குள் இருக்கும்போது, வாகனத்தின் நகர்வைத் துல்லியமாகக் காண்பிக்கும். டவர்கள் அதிகமில்லாத பகுதியாக இருந்தாலும், அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை மட்டுமே தாமதமாகக் காண்பிக்கும். அதனால் இந்த கருவி பொருத்திய வாகனம், எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் இயக்கப்படுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும். வாகனதாரர்கள் விழிப்புணர்வாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் மோகன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு என்னால் ஒன்றைத்தான் சொல்ல முடியும்  விசுகர்,.. தயவுசெய்து  பள்ளிக்கூடம் போங்கோ.  அதற்குப் பின்னராவது பிறர்  எழுதுவதில் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா என்று  பார்ப்போம்.  😏
    • யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு  பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂
    • ஆம் அத்துடன் முக்கியமாக தனிநாடு மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் கோசங்கள் மற்றும் பேச்சுக்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அதனை மீறுவோர் மீது எம் அடுத்த தலைமுறையே எதிர்ப்பை காட்டும். சுபம். 
    • கடற்றொழில் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்கள்.
    • பத்து வரி பேய் கதை.   ஓர் இரவு நேரம்…ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக் கொண்டிருக்கும் போது…தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தில் அவளைக் கொன்று, யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான். மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவை பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான். ஆனால் மகன் அம்மாவை பற்றி கேட்கவில்லை. இரண்டாவது நாலாவது கேட்பான் என நினைத்தான். ஆனாலும் கேட்கவில்லை. வழக்கம்போல் மகன் சந்தோசமாக இருந்தான். மூன்றாவது நாள் மகனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான், "உனக்கு நம் வீட்டில் ஏதாவது மாற்றம் தெரியுதா? _என்கிட்ட ஏதாவது கேட்கணும் போல இருந்தா கேளு". மகன் மெல்ல கேட்டான்:"மூணு நாளா அம்மா ஏன் உனக்கு பின்னாடியே நிக்கிறாங்கப்பா"?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.