Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 23ஆம் திகதியிலிருந்து 2025 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 2024 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இந்த விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. 2025 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை  ஜனவரி 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/199099



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. தகவலுக்கு நன்றி பேராசிரியரே.
    • உரிமைக் குரல்                                 - சுப.சோமசுந்தரம்          சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற  தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/                1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது.              இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்;  பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ?            மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள்.            இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் :     https://www.facebook.com/share/p/189yZuZxQp/    
    • முன்னாள் டக்ளசின் மீன்பிடி  அமைச்சுப் பதவி...  தற்போது ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  கேரள கஞ்சா வாற வழியை பிடிக்க போட்ட பொறி போல் உள்ளது.  டக்ளசின் வியாபாரம் எல்லாம் அம்பிடப் போகுது.
    • ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்! இலங்கையின் புதிய அமைச்சரவையில்  இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே  இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில்  கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார  அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408957
    • பைடன் அரசு திட்டவட்டமாக  இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணியினை பயன்படுத்துவதற்கு அனுமதி வ்ழங்கவில்லை, ஆனால் அண்மையில் பைடன் ட்ரம்பினை சந்தித்த பின்னரே இந்த அறிக்கை வெளிவந்துள்ளமையால் ட்ரம்ப் பைடனிடம் கோரியிருக்கலாம் உக்கிரேனிற்கு நீண்ட தூர ஏவுகணையினை இரஸ்சியாவிற்குள் பயன்படுத்த அனும்திக்குமாறு அதன் மூலம் இரஸ்சியாவின் மேல் அழுத்தத்தினை ட்ரம்ப் அரசு பிரயோகிக்க விரும்பியிருக்கக்கூடும். ட்ரம்ப் பைடனை போல அல்ல அவரை கணிக்கமுடியாது, அண்மையில் செலன்ஸ்கிகூட கமலா காரிஸினை விட ட்ரம்ப் விரவாக சமாதானத்தினை கொண்டு வர கூடியவர் என தொனிபட கூறியிருந்ததாக கருதுகிறேன். செலன்ஸ்கி அமெரிக்காவிடம் டொமகவாக் ஏவுகணையினை கோரியுள்ளது இது 1500 கிலோ மீர்ரர் வரை செல்லலாம் என  கருதுகிறேன் (சரியாக நினைவில்லை).  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.