Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் 

ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Ministers Will Not Get Salary  

கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் விழுந்து விடாது என சுசந்த குமார மேலும் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/npp-mps-ministers-will-not-get-salary-1731898420#google_vignette

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு..

1) அமைச்சு  கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய  உண்டியல் வைப்பது

2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது..

இதில் எது சிறந்தது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, alvayan said:

பிழைப்புக்கு என்னதான் வழி இருக்கு..

1) அமைச்சு  கந்தோர் வாசலில் உண்டியல் வைப்பது...அல்லது கனடா தமிழ் கடைவழிய  உண்டியல் வைப்பது

2) ஐ.எம். எஃப்...இடம் இதற்கென்று தனியாக கடன் வாங்குவது..

இதில் எது சிறந்தது..

உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை...

யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்...

புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, putthan said:

உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை...

யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்...

புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, alvayan said:

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே...............

வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும்.

சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, alvayan said:

சிறப்பான தெரிவு புத்தரே...எழுதின  நானே...யோசிக்கவில்லை..இப்படியொரு சிறப்பான அனுகூலம் இருக்குமென்று

பிறகுறிப்பு...ஊருக்கு போனநேரம் பனங்கட்டிக்கு அலைந்து களைத்துவிட்டேன்...அனுர காலத்தில் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்ப கிடைச்சிருக்கு..

இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே...............

வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும்.

சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................

மூன்று நாலுநாள்  அந்த ஏரியா சுத்தினனான்...தட்டுப்படவில்லை..பார்ப்பமே வரும்காலத்தில்

3 minutes ago, putthan said:

இனி நாங்கள் போனால் நடராசாவில தான்....ஒட்டோ ,கார் எல்லாம் வாடகைக்கு பிடிக்க முடியுமோ தெரியவில்லை...அமைச்சர்மார் வீட்டில இருந்து வேலை செய்யும் பொழுது ....நாங்கள் கண்டபடி காரில் ஒட்டோவில் திரிய முடியாது

இந்த ரெயினிங்கு ...நான் இந்த தடவை போனவுடனே எடுத்திட்டன்...பஸ் சும் ..நடையும்தான்..



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்வ‌தில் உட‌ன் ப‌டுகிறேன் தாத்தா ஆனால் மைக் ரைச‌ன் ப‌ண‌ ஆசையில் தான் விளையாட‌ ச‌ம்ம‌தித்தார்.................இள‌ம் வீர‌ர் தொட‌ர்ந்து ப‌ல‌ வெற்றிக‌ள்.................என்ர‌ சிறு வ‌ய‌து ந‌ண்ப‌ன் சொன்னான் மைக் ரைச‌ன் அன்டைக்கு வெல்ல‌க் கூடும் என்று     மைக் ரைச‌ன் தான் நேசித்த‌ விளையாட்டில் இன்னும் சாதிக்க‌னும் என்று ம‌ன‌ம் வைச்சு இருந்தால் இன்னும் ப‌ல‌ வெற்றிக‌ளை 20வ‌ருட‌த்துக்கு முத‌லே வென்று இருப்பார்     ஆர‌ம்ப‌ கால‌த்தில் மைக் ரைச‌ன் கூட‌ யாரும் வெல்ல‌ ஏலாது 3ரொன்ட் ஓட‌ விளையாட்டை வென்று விடுவார் குத்தின் வேக‌ம் அதிக‌ம் இள‌ம் ரைச‌னாய் இருக்கும் போது.................................
    • மேல் மட்டத்து மாணவர்கள் நிறைய பேர் அநேகமாக கண்டியில் இருந்து வருவார்கள், anti ராகிங் குறூப்ஆக இருக்கும். இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது, ராக்கிங் பிரச்சனைகளில் அடிக்கடி முண்டுவார்கள். JVP யின் மாணவர் அமைப்பு பலமாக இருப்பதால், அவர்களது இடமாக இருந்தாலும், கண்டி மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  தமிழர்களில் பொருளாதாரரீதியில், ஒரு சிலரைத்தவிர பெரியளவு வித்தியாசம் இருந்ததில்லை, பேராதனைக்கு வரும் பெரும்பாலான சிங்கள மாணவர்கள் வறுமைமையானவர்கள், அதனால் 5 வீதம் வாக்குகொண்ட ஜேவிபி இங்கு பலமாக இருக்கும். இவர்களில் இனவாதிகள் இருந்தாலும், உண்மையாகவே அந்த நேரங்களில் ஜேவிபியினால் எங்களுக்கு ஒருவித பாதுகாப்பு இருந்தது. நான் பல்கலைக்கழக விடுதியில் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை மாத்திரமே ஏதோ ஒரு பிரச்சனைக்கு அங்கு police வந்தது. தமிழ் சிங்கள மாணவர் பிரச்சனைகளை ஜேவிபியின் மாணவர் அமைப்பு பஞ்சாயத்து பண்ணிவைக்கும். ஆணையிறவை புலிகள் பிடித்தநேரம், உடல்கள் தெற்குக்கு வந்துகொண்டிருந்த  நேரம், அங்கு ஒரு இறுக்கமான நிலை இருந்தது. மட்டக்களப்பை சேர்ந்த ஒருத்தன் யாரோ ஒருவனோடு உள்ள பிரச்சனையில் வெடியை கொளுத்தி போட்டுவிட்டான். மற்ற சிங்கள மாணவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு அடிக்க ரெடியாக இருந்தார்கள், ஜேவிபி இற்கு நிலைமை புரிந்து தலையிட்டு தடுத்து விட்டார்கள். ஜேவிபி உறுப்பினர்கள் தனிய எல்லாம் அடிக்கமாட்டார்கள், அமைப்புரீதியாக இயங்குபவர்கள், கட்சி அடி என்றால் எங்களை போட்டுத்தாக்கி விடுவார்கள்
    • எப்படியும் உங்களின் தம்பியை பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்...........🤣. அங்கே போனால் என்ன, போகாவிட்டால் என்ன அண்ணை, இப்ப ஒன்றாக முழுநேரம் யாழ் களத்தில் நிற்பதில் தானே இரு வாழ்க்கைகளும் வந்து நிற்கின்றன.............😀.
    • மொத்தம் எட்டுச் சுற்றுகள். ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்கள்.  மொத்தமாக பதினாறு நிமிடங்கள். தோற்றாலோ, வென்றாலோ, 20 மில்லியன் டாலர்.  ஒரு நிமிடத்துக்கு 1.25 மில்லியன் டாலர். 58 வயதான மைக் டைசன் பெற்றுக்கொண்ட ஊதியம்.  நிஜப் போட்டியா, பாவனைப் போட்டியா கவலையில்லை. உலகம் முழுக்க, விழித்திருந்து பார்த்த குத்துச்சண்டை நிகழ்வு.  “படி.. படி… படிக்காவிட்டால் நாளை மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று திட்டிப் படிக்கவைத்த உலகம் போய், இப்போது நவீன வியாபார உலகமாக மாறிவிட்டிருக்கிறது.  எந்த விதத்திலும் கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியுமென நம்ப வைத்திருக்கிறது.  மைக் டைசன் ஒரு சிறந்த வீரர் என்பதிலோ, திறமைசாலி என்பதிலோ எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  அவர் இதற்கெல்லாம் தகுதியானவர்தான். நான் சொல்ல வந்தது அவரின் தகுதிபற்றியல்ல.  ஒரு நிமிடத்திற்குப் பத்து இலட்சம் டாலர்களை அள்ளிக் கொடுக்கும் நவீன வியாபாரச் சந்தை பற்றியே!  முன்னரெல்லாம் உடல் உடைந்து, நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து, ஒரு மாதச் சம்பளமாகக் கொண்டுவரும் பணத்தை, இன்றைய இளைஞர்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு நாளில் கொண்டு வருகிறார்கள்.  இது வியப்பைக் கொடுத்தாலும், கூடவே ஒருவிதப் பயத்தையும் கொடுக்கிறது.  இதுவும் பரிணாம  வளர்ச்சியின் ஒருவிதப் படிநிலையென ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.  
    • பாக்கிஸ்தான் அணிக்கு கூடுத‌ல் ஆலோச‌னை தேவை   இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் புது முக‌ங்க‌ள்   ஒரு கால‌த்தில் பாக்கிஸ்தான் அணி சிற‌ப்பாக‌ விளையாடின‌து அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் ஓய்வு பெற‌ அதோட‌ ப‌டுத்த‌ அணி மீண்டு வ‌ர‌ வில்லை....................உள்ளூரில் ந‌ல்லா விளையாடி திற‌மைய‌ வெளிப்ப‌டுத்தும் வீர‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம் அதோட‌ ப‌ழைய‌ இள‌ம் வீர‌ர்க‌ளையும் மீண்டும் அணியில் சேர்க்க‌னும்...............................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.