Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், நடாலி ஷெர்மேன்
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான கௌதம் அதானிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அவரது வணிகப் பேரரசு மீதும் இருக்கிறது.

குற்றப் பத்திரிகையில், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதானி குழுமம் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கடந்த 2023ஆம் ஆண்டு, உயர்மட்ட நிறுவனம் ஒன்று அதானி குழுமம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதிலிருந்து, அதானி நிறுவனம் அமெரிக்காவில் கண்காணிப்பின்கீழ் இருந்து வந்தது.

அந்த நிறுவனத்தின் கூற்றுகளை கௌதம் அதானி முற்றிலுமாக மறுத்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.

இந்த லஞ்ச விசாரணை பல மாதங்களாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டில் இந்த விசாரணையைத் தொடங்கியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்படப் பல தரப்பிடம் இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அதற்காக, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன்கீழ் திரட்டப்பட்ட பணம் லஞ்ச எதிர்ப்பு கொள்கையை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், “குற்றச்சாட்டுகளின்படி, பிரதிவாதிகள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டனர்.

மேலும், அவர்கள் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் பொய் கூறியுள்ளார்கள்,” என்று தெரிவித்தார்.

அதோடு, தனது அலுவலகம் சர்வதேச சந்தைகளில் இருந்து ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார் பிரையன் பீஸ். இதுதவிர, “நமது நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையைப் பணயம் வைத்து லாபம் பார்க்க விரும்புவோரிடம் இருந்து முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த லஞ்சம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பல சந்தர்ப்பங்களில் அதானியே அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் முதலீடு செய்ய உறுதியளித்த அதானி

கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பராக கௌதம் அதானி கருதப்படுகிறார். அதானி தனது அரசியல் தொடர்புகளின் மூலம் பயனடைவதாக நீண்டகாலமாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் பதவிகள் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறையை மாற்றியமைப்பதாக உறுதியளித்து, வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் டிரம்பின் தேர்தல் வெற்றிக்குத் தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கௌதம் அதானி உறுதியளித்திருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் சர்வதேச முதலீடுகளை எந்தளவுக்கு பாதிக்கும்? - ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரும் பணக்காரர் கௌதம் அதானி. துறைமுகஙகள் முதல் எரிசக்தி வரை கௌதம் அதானி குழும தொழில்கள் பரவியுள்ளன.

அமெரிக்காவில் தற்போது அதானி கடும் பிரச்னையில் சிக்கியுள்ளார். தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை மதியம் வெளியிட்டது, அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அக்குழுமம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முதல் இந்திய தொழிலதிபதாக அதானி உள்ளார்.

 

அமெரிக்காவில் இக்குற்றச்சாட்டுக்குப் பின் அதானியின் உலகளாவிய லட்சியங்களுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து கூறிய கௌதம் அதானி, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் அதானியின் முதலீட்டு உறுதிப்பாடும் தெளிவற்ற நிலையில் உள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்து, அதானி குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நாங்கள் அவற்றை மறுக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

"நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றும், சட்டங்களை மதிக்கும் நிறுவனம் என்பதை எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கௌதம் அதானிக்கும் அவரது கூட்டாளிகள் பலருக்கும் பிரச்னைகள் அதிகரிக்கலாம்

பெரும் பின்னடைவா?

அமெரிக்காவில் அந்நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற மூத்த அதிகாரிகள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, குழும நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பெர்க் அறிக்கை கடந்தாண்டு அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்களுக்கு மேல் சரிந்தது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதானிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உறவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதானியும், பாஜகவும் ஒருவருக்கொருவர் பலனடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகிறது. நியூயார்க்கில் அமெரிக்கக் குடிமகனும் சீக்கிய பிரிவினைவாத தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ கொல்ல இந்திய அரசு அதிகாரி ஒருவர் சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த விவகாரங்களில் டிரம்ப் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்புக்கும் மோதிக்கும் நல்ல உறவு இருக்கிறது, இருவரும் ஒருவரையொருவர் நண்பர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பது டிரம்பிற்கு பிடிக்கவில்லை.

 
'ஸ்டாப் அதானி' பிரசாரம் அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 45 நாட்கள் நடைபெற்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'ஸ்டாப் அதானி' பிரசாரம் அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 45 நாட்கள் நடைபெற்றது

என்ன நடந்தது?

கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் உடன், ஆறு பேர் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா)(SECI) நிறுவனத்திடமிருந்து எட்டு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

இதேபோல், அஸூர் பவர் நிறுவனமும் (Azure Power) நான்கு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்த ஒரு கனடிய பொது ஓய்வூதிய நிதி மேலாளரும் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் செய்தியின்படி, சூரிய சக்தியை அதானி மற்றும் அஸூர் பவர் நிறுவனங்கள் கொடுத்த விலையில் வாங்குவதற்கு எந்த நிறுவனத்தையும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் (SECI) கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் வழங்கிய பின்னர், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் SECI உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச அதிகாரி ஒருவருக்கு 228 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாக ஆந்திரப் பிரதேசம் SECI-யிலிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சாகர் அதானி குறித்து அமெரிக்க ஆவணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினீத் ஜெயின் தனது போனில், இந்த லஞ்ச விவகாரத்தில் அஸூர் பவர் பங்கு பற்றிய ஆவணத்தின் புகைப்படத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், சாகர் அதானி தனது மொபைல் போனை பயன்படுத்தி லஞ்ச விவரங்களை அறிந்ததாக கூறப்படுகிறது. இந்த லஞ்சத்தின் அளவு எட்டு கோடி டாலர்கள்.

லஞ்சத் தொகையை வழங்குவதற்காக அஸூர் பவர் நிறுவன அதிகாரிகளுடன் கௌதம் அதானி ஆலோசனை நடத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 
அதானி குழுமம் தொடர்பாக பல நாடுகளில் சர்ச்சை எழுந்துள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதானி குழுமம் தொடர்பாக பல நாடுகளில் சர்ச்சை எழுந்துள்ளது

பல நாடுகளில் சர்ச்சை

அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் கௌதம் அதானி, சாகர் அதானி, னீத் ஜெயின் ஆகியோர் பொய் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் அதானி சர்ச்சைக்குரியவராக உள்ளார். 2017-ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் பெற இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இதுதான்.

ஆனால், அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கினர். குயின்ஸ்லாந்தில் 'ஸ்டாப் அதானி' (Stop Adani) இயக்கம் 45 நாட்கள் நீடித்தது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது

ஜூன் 2022 இல், இலங்கையின் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவின் முன் விளக்கம் ஒன்றை அளித்தார்.

அதில், பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 'அழுத்தம்' கொடுத்ததாக கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

 
இந்த ஆண்டு செப்டம்பரில், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த ஆண்டு செப்டம்பரில், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது

இலங்கை, கென்யா முதல் மியான்மர் வரையிலான சர்ச்சைகள்

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.

"மோதியின் அழுத்தத்தில் தான் இருப்பதாக ராஜபக்ச என்னிடம் கூறினார்" என்று பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழு முன் கூறியிருந்தார்.

எனினும், ஒரு நாள் கழித்து, கோட்டாபய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்திருந்தார்.

இதுகுறித்து, அதானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் முதலீடு செய்வது அண்டை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகும். பொறுப்புமிக்க நிறுவனமாக, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் முக்கியமான பகுதியாக தாங்கள் பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் அதானி குழுமத்தின் அனைத்து மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது என இந்தியாவின் ஆங்கில வணிக நாளிதழான பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது

கடந்த 2007-ஆம் ஆண்டில், அதானி பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது மற்றும் இங்கிருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதானியின் இந்த ஒப்பந்தம் குறித்து வங்கதேசம் மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் பல எதிர்ப்புகளை தெரிவித்தன.

கடந்த 2021 ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மியான்மரின் யங்கூனில் ஒரு கொள்கலன் முனையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. மியான்மர் ராணுவத்திடம் இருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதால் அதானியின் இந்த திட்டமும் விமர்சத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவம் மனித உரிமைகளை மீறுவதாகவும், அதனுடன் அதானி ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

செப்டம்பர் 2024 இல், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற இருந்தது.

விமான நிலைய தொழிலாளர்கள், அதானிக்கு அப்பொறுப்பு கிடைத்த பிறகு வேலை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர்.

ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும்.

"வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளுடன் எங்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு எங்கள் அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது," என கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"எங்கள் நாட்டின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கு எதிரான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா

அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இதையே சாட்டாக வைத்து அநுரவின் அரசாங்கமும் அதானியின் மன்னார் காற்றாலை திட்டத்தை ரத்துச் செய்யலாம் தானே.....................என்று நாங்கள் நினைக்கக்கூடும், ஆனால் அது நடக்காது. இந்திய அரசாங்கமே அதானியைக் கைவிட்டால், அதன் பின் இலங்கை அதானியின் திட்டத்தை ரத்துச் செய்யக் கூடியதாக இருக்கும்.

ஆந்திரா, தமிழ்நாடு, ஜார்கண்டு என்று மூன்று மாநில அரசுகளின் பெயர்கள் தான் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் இருக்கின்றது போல.............. அமெரிக்கா லஞ்சம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியே விட்டால், திமுகவிற்கும் நெருக்கடி இருக்கின்றது.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடியாணை - வழக்கின் பின்னணி என்ன?

22 NOV, 2024 | 11:03 AM
image
 

புதுடெல்லி: தமிழகம் ஆந்திரா ஒடிசா ஜம்மு-காஷ்மீர் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62) உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும் இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

adani-group.jpg

2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம் ஆந்திரா ஜம்மு - காஷ்மீர் சத்தீஸ்கர் ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17இ000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

லஞ்சத்தை மறைத்து பெற்ற ரூ.25000 கோடி முதலீடு: சட்டவிரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்காவில் அதானி நிறுவனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25000 கோடி) முதலீடு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திர சட்டங்கள் விதிகளை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி சாகர் அதானி அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கவுதம் அதானி சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதால் தமிழக அரசு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 3 ஆண்டுகளாக வணிகரீதியில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி நிறுவனம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்த நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது சகாக்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது அதானி குழுமத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதானி குழுமம் மறுப்பு: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: சோலார் பவர் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை முற்றிலுமாக மறுக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். வெளிப்படைத் தன்மை தரமான நிர்வாகம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது.

நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து

அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199383

  • கருத்துக்கள உறவுகள்
Posted

US-ன் அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்; படிக்க படிக்க என்ன இருக்கிறது? Adani Issue Full Details

இந்தியாவின் பெருங்கோடீஸ்வர்களின் ஒருவரான கௌதம அதானி மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இன்று ஒரே நாளில் Adani Enterprises-ன் சந்தை மதிப்பு 23 சதவீதமும்  Adani  Green Energy-ன்  சுமார் 19 சதவீதமும்,  Adani Energy Solutions 20 சதவீதமும் சரிவை கண்டன. அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவை கண்டன. மொத்தத்தில் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதான் குழுமத்தின் பங்கு மதிப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை சரிந்தது. 

ஆனால் அமெரிக்க நீதிமன்றத்தின் அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சரி, அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு என்ன? இந்தியாவில் இது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம்

கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், ஜுகல் புரோஹித்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

கௌதம் அதானியின் பெயர் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களின் பட்டியலில் உள்ளது. அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுவரை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இதுவே மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும். அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ஆகிய அந்நாட்டு அரசு அமைப்புகள், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், சட்ட வழிகள் குறித்து ஆராய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த வியாழனன்று பெரும் சரிவு ஏற்பட்டது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது, இந்த விவகாரம் இதோடு நிற்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

 

இப்போது பல கேள்விகள் நமக்கு முன்னே உள்ளன. அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

கெளதம் அதானியும் அவரது கூட்டாளிகளும் சிறைக்குச் செல்லும் சாத்தியகூறு உள்ளதா? அதானி குழுமம் எதிர்காலத்தில் தனது திட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பிபிசி ஹிந்தி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியது.

 

சட்ட செயல்முறை மற்றும் சவால்கள்

பிரையன் பீஸ், நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கெளதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளித்த அவர், “பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டம் தீட்டப்பட்டது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெய்ன் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனத்தைத் திரட்ட முயன்றனர். அதனால்தான் அவர்களிடம் இவர்கள் பொய் கூறினார்கள்,” என்றார்.

ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் கூறினார்.

"முதலாவதாக, லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியாவில் உள்ளவர்களின் வாக்குமூலத்தை அமெரிக்க அதிகாரிகள் எப்படிப் பெறுவார்கள்?

இதில் இந்தியாவின் சட்டங்களையும் பார்க்க வேண்டும். ஒருவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுவொரு சிக்கலான வழக்காக மாறலாம்," என்று விளக்கினார் ஆனந்த் அஹூஜா.

 
கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இருப்பவர்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு விசாரிக்க முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

அதோடு, எதிர்காலத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் இதில் பங்கு வகிக்கலாம், ஏனென்றால் சட்டம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார் அஹூஜா.

“இரண்டாவது காரணம், மோசடி வழக்கில் ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதி முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டுமே மோசடியை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக நீங்கள் சில வேலைகளைச் செய்தீர்கள், ஆனால் நீங்கள் அதைத் தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும் என்றால் அதை மோசடி எனக் கூறுவது கடினம். அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் இதை நிரூபிக்க முடியுமா என்பதைக் காலம்தான் சொல்லும்,” என்கிறார் ஆனந்த் அஹூஜா.

முழு செயல்முறையும் முடிவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அஹுஜா “நீதித்துறையின் முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்து விசாரணை முடிவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்,” என்றார்.

 

தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?

கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹெச்பி ரனினா ஒரு மூத்த கார்ப்பரேட் வழக்கறிஞர். “குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இவை நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஜூரி (நடுவர் குழு) குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கருதினால், தண்டனை பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியைப் பொறுத்து இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

“அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொறுத்த வரை அந்த அமைப்பு அபராதம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும். இருப்பினும் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அபராதத்தின் அளவு பெரியதாக இருக்கலாம். அந்த அபராதத்தைச் செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அவர்.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குற்றம் சாட்டப்பட்டவரை நாடு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.

கௌதம் அதானியை கைது செய்ய அமெரிக்கா கோர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்?

“இது அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது. இதில் இரு அரசுகளும் சம்பந்தப்படலாம் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்,” என்று ரனினா குறிப்பிட்டார்.

 

அதானி பிராண்ட் மீது ஏற்படும் தாக்கம் என்ன?

கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்யா அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கான ஒப்பந்தம் பெறப்படவிருந்தது. இதுதவிர, 736 மில்லியன் டாலர்களுக்கு மற்றோர் ஒப்பந்தமும் இருந்தது. இதன் கீழ் அங்கு மின்கம்பிகள் அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றிருந்தது.

இந்த இரண்டு விவகாரங்களிலும் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழன்று இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தபோது அதற்கு ஊழலைக் காரணம் காட்டினார்.

கென்யாவின் நாடாளுமன்றத்தில் பேசிய ரூட்டோ, "எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்கள் மற்றும் நம்பகமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று கூறினார்.

அதானி குழும நிறுவனங்கள் கென்யாவை போலவே பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது திட்டங்களைத் தொடங்க முயல்கின்றன. இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், வெளிநாடுகளில் உள்ள பல அரசுகளுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.

கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும் கென்யாவின் நடவடிக்கை போலவே மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வியாழனன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் இதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் காரணமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து பின்னர் ஏறுமுகமாக ஆனதும் நடந்துள்ளது.

அம்பரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர் மற்றும் எந்த நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர்.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்கு விலைகள் பெருமளவு சரிந்தன. ஆனால் இந்த முறை பங்கு விலை வீழ்ச்சி அந்த அளவுக்கு இருக்காது என்று தான் நினைப்பதாக அவர் பிபிசி இந்தியிடம் கூறினார்.

கடந்த 2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அந்த வாரத்தில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்தது.

“இந்தக் குழுமம் சவால்களை எதிர்கொள்வதில் தன் வழியைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இத்தகைய அறிக்கைகள் அதன் பிம்பத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன என்பது உண்மைதான். இதன் காரணமாக குழுமம் நிதி திரட்டுவதில் தாமதத்தை எதிர்கொள்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தநேரத்தில் ’அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது குழுமம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக்கொண்டிருந்தது,” என்று பலிகா குறிப்பிட்டார்.

 

பிராண்ட் இந்தியாவும் பாதிக்கப்படுமா?

கௌதம் அதானி: எதிர்கொள்ளப் போகும் சட்டரீதியான சவால்கள் - நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சந்தோஷ் தேசாய் ஓர் ஆய்வாளர். இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அவர் கருதுகிறார்.

முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள், எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாடுகளில் இருந்து 'நிறுவன நிதி' பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவர் நினைக்கிறார்.

"அதேநேரம் பொதுமக்கள் அவரைப் பார்க்கும் விதத்தில் இந்த விஷயம் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வி. அதானி அரசியல் துருவமுனைப்பின் சின்னமாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.

யாருக்கு அதானியை பிடிக்குமோ அவர்கள் தொடர்ந்து அவரை சாம்பியனாகவே பார்ப்பார்கள். அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார் என்று கருதுவார்கள். இந்தக் குழுமத்தைப் பற்றித் தாங்கள் எப்போதுமே சரியாகச் சொன்னதாக அவரைப் பிடிக்காதவர்கள் கூறுவார்கள்," என்று தேசாய் கூறினார்.

“முதலீட்டாளர்கள் லாபத்தையும் ஸ்திரத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படாது," என்கிறார் சந்தோஷ் தேசாய்.

ஆயினும் 'ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டும் யோக்கியதை’ உள்ள ஒரு உலகில் நாம் வாழ்கிறோமோ என்பதே சந்தேகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு அவசியம் என்ற கருத்தை இந்த விவகாரம் வலுவாக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதானிக்கு  அமெரிக்கா அழைப்பாணை!

அதானிக்கு  அமெரிக்கா அழைப்பாணை! 

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய  அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மேலும் அவரது மருமகனும் 'அதானி கிரீன்' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பெறும் நோக்கில் இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196351

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா?

கௌதம் அதானி, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கெளதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உலகளாவிய வணிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது
  • எழுதியவர், ஜுகல் புரோஹித்
  • பதவி, பிபிசி நிருபர்

62 வயதான கௌதம் அதானி, இந்தியாவின் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவர்.

அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவே மிகக் கடுமையானதாக உள்ளது.

அமெரிக்க நீதித்துறை, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) போன்ற அமெரிக்க அரசு அமைப்புகளால் இக்குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவற்றை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது.

அதானி மீதான குற்றச்சாட்டால் எழும் கேள்விகள்

கௌதம் அதானி, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்ய அரசு அறிவித்தது

இந்த குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு பெரும் சரிவைக் கண்டது.

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும் போது, இந்த விஷயம் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழும வணிகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

கெளதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? எதிர்காலத்தில் அதானி குழுமம் தனது திட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி ஹிந்தி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியுள்ளது.

 

சட்ட செயல்முறை மற்றும் சவால்கள்

கௌதம் அதானி, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன

கௌதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ள பிரையன் பீஸ் விளக்கமளித்தார்.

“பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டது” என்கிறார் பீஸ் .

கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை திரட்ட முயன்றனர். அந்த முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லியுள்ளனர்.

ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் வழக்கறிஞராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.

“குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறேன்.” என்று பிபிசி ஹிந்தியிடம் பேசிய போது அவர் கூறினார்.

முதலாவதாக, “ லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படியானால், இந்தியாவில் உள்ளவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் எவ்வாறு வாக்குமூலம் பெற முடியும்? இதில், இந்தியாவின் சட்ட முறைகளையும் பார்க்க வேண்டும். அதில் யாராவது அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அதனால் இது ஒரு சிக்கலான வழக்காக மாறக்கூடும்." என்று அவர் கூறினார்.

"அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர்கள் இந்தியாவில் வாழும் மக்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை எந்த அளவிற்கு விசாரிக்க முடியும் என்பது குறித்தும் இனிமேல் தான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய உச்ச நீதிமன்றமும் எதிர்காலத்தில் இதில் பங்கு வகிக்கலாம். ஏனென்றால், சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி உச்ச நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் இரண்டும் ஒரே நேரத்தில் மோசடியை வெளிப்படுத்துகின்றதா? என்பதை நீதிபதி முன்பாக நிரூபிக்க வேண்டும்” . என்றார் அவர்.

மேற்கூறிய இந்த இரண்டு காரணங்களும் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு கடினமானதாக்குவதாக ஆனந்த் அஹுஜா தெரிவிக்கின்றார்.

"உதாரணமாக, நீங்கள் சில வேலைகளைச் செய்தால், அதை தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், அதை மோசடி என்று அழைக்க முடியாது. எனவே அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

 

அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா?

கௌதம் அதானி, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நடுவர் மன்றம் கருதினால், பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்து தண்டனை அமையும்."

“இது போன்ற முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலிருந்து விசாரணை முடியும் வரை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்” என இந்தக் கேள்விக்கு அஹுஜா பதில் கூறினார்.

தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?

“இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர் இழப்பீடு வழங்க வேண்டும். அல்லது இரண்டு தண்டனைகளும் கொடுக்கப்படலாம்” என மூத்த வழக்கறிஞரான ஹெச்பி ரனினா கூறுகிறார்.

"குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நடுவர் மன்றம் கருதினால், பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்து தண்டனை அமையும்."

ரனினாவின் கூற்றுப்படி, "அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொருத்தவரை, அவர்கள் சேதங்களுக்கு தீர்வு காண விரும்புவர்."

" இருப்பினும், குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பொருத்தவரை, அபராதத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். அந்த அபராதத்தை செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் பாதிக்கலாம்."

1997-ம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.

கௌதம் அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் அதற்கு இந்தியாவின் பதில் என்ன?

“இது ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொருத்தது. இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்” என ரனினா கூறினார்.

 

பங்குச் சந்தை மற்றும் அதானி பிராண்ட் - இதன் தாக்கம் என்ன?

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருந்தது.

அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்தம் பெற்று இருந்தது. இது தவிர 736 மில்லியன் டாலருக்கு இன்னொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அங்கு மின்கம்பி அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றது.

இரண்டு ஒப்பந்தங்களிலும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

கென்ய அதிபர் வில்லியம் ருடோ, வியாழக்கிழமையன்று இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் போது ஊழல் குறித்து மேற்கோள் காட்டினார்.

“ ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்களையும் நம்பத்தகுந்த தகவல்களையும், எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கூட்டணி நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” என கென்ய நாடாளுமன்றத்தில் ரூட்டோ கூறினார்.

அதானி குழும நிறுவனங்கள், கென்யாவைப் போல பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது அங்கு திட்டங்களைத் தொடங்க முயற்சிக்கின்றன.

இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், பல வெளிநாட்டு அரசுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், கென்யா நடவடிக்கை எடுத்த விதத்தை போன்று , மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த வியாழக்கிழமைய அன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பில் சரிவு ஏற்பட்டது.

இருப்பினும், குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குகளின் விலையில் வீழ்ச்சி இதற்கு முன்பும் காணப்பட்டுள்ளது. பின்னர் அவற்றில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

 

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கௌதம் அதானி, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதானி குழும நிறுவனங்கள் பல நாடுகளில் இயங்குகின்றன,

அம்ப்ரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர். அவர் எந்த நிறுவனத்துடனும் தொடர்புடையவர் அல்ல.

“ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு நாம் பார்த்ததைப் போல இந்த முறை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பெரிய வீழ்ச்சியை சந்திக்காது என்று நான் நினைக்கிறேன்."என பலிகா பிபிசி இந்தியிடம் கூறினார்.

ஜனவரி 2023 இல், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அதே வாரத்தில், அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை குறைந்தது.

“அதானி குழுமம் சவால்களை சமாளிப்பதில் வெற்றிகரமானதாக இருக்கிறது. ஆனால், அத்தகைய அறிக்கைகள் அந்த குழுமத்தின் நற்பெயரை கேள்விக்குட்படுத்துகின்றன" என்று பலிகா விளக்குகிறார்.

“இதன் காரணமாக, நிதி திரட்டுவது இக்குழுமத்திற்கு தாமதமாகிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போது அதானி கிரீன் நிறுவனத்துக்கு நிதி திரட்டி கொண்டிருந்தனர். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்." என்று அவர் கூறினார்.

அதானி குழுமத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படுமா?

இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் நன்மதிப்பைப் பாதிக்கும் என சந்தோஷ் தேசாய் எனும் ஆய்வாளர் கருதுகின்றார்.

“முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள். எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாட்டில் நிதி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது” என்று நினைப்பதாக தேசாய் தெரிவிக்கின்றார்.

“ஆனால் கேள்வி என்னவென்றால், அவர் மீதான பொதுமக்களின் பார்வையை இந்த வழக்கு மாற்றுமா? அவரை விரும்பும் மக்கள் அவரை ஒரு வெற்றியடைந்த மனிதராகப் பார்ப்பார்கள். அதனால் அவர் குறிவைக்கப்படுகிறார் என நினைப்பார்கள். அவரைப் பிடிக்காதவர்கள் இந்தக் குழுமத்தைப் பற்றி முன்னமே தாங்கள் சரியாகச் சொன்னதாகச் கூறுவார்கள்." என்று தேசாய் கூறுகிறார்.

 

சந்தோஷ் தேசாய் கூறுகையில், “முதலீட்டாளர்கள் லாபத்தையும் நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது ஒரு பொருட்டாக இருக்காது. அதுபோலவே, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு தேவை என்ற கருத்தும் இந்த வழக்கின் மூலம் மேலும் அதிகரிக்கலாம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.