Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.

வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர்.

திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர்.

அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது.

அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது.

விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

மேலும், பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், கட்டமைப்பின் ஒரு முனையில் தடுப்புகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

https://athavannews.com/2024/1409765

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

மேலும், பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், கட்டமைப்பின் ஒரு முனையில் தடுப்புகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

அவ்வளவு அலட்சியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பாதுகாப்பில்லாத பாலத்தில் யார் போக சொன்னது?  அதுவும் வெளிச்சம் குறைந்த நேரத்தில் ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ. பி: பாதி கட்டப்பட்ட பாலத்திலிருந்து விழுந்த கார்; மேப்ஸ் மீது புகார் - கூகுள் அளித்த பதில் என்ன?

உத்தர பிரதேசம், கார் விபத்து, கூகுள் மேப்ஸ்

பட மூலாதாரம்,VIRAL VIDEO

படக்குறிப்பு, பரேலியில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து ஒரு கார் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.
  • எழுதியவர், சையத் மொஸிஸ் இமாம்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் நடந்த கார் கார் தொடர்பாக நான்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவனக் குறைவின் காரணமாக மூன்று இளைஞர்கள் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தனர்.

இவர்கள் கூகுள் மேப்ஸின் வழிக்கட்டுதல்களின் படி அங்குள்ள பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. இதனால் அதில் சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்தது.

இந்த சம்பவத்தில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.மேலும் இந்த வழக்கு விசாரணையில் தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

 

புகாரின் படி, அஜீத், நிதின், அமித் ஆகிய மூன்று நபர்களும் பதாயுனில் இருந்து பரேலியில் உள்ள ஃபரித்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

ராம்கங்கா ஆற்றின் மேல் பாதி கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது அவர்கள் கார் சென்ற போது பாலத்தின் மேலிருந்து கிழே விழுந்தது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.

 
உத்தர பிரதேசம், கார் விபத்து, கூகிள் மேப்ஸ்
படக்குறிப்பு, இந்த விபத்தில் அஜித், அமித் மற்றும் நிதின் (இடமிருந்து) ஆகியோர் உயிரிழந்தனர்.

கூகுள் மேப்ஸ் மீது புகார்

பொதுப் பணித் துறையின் துணை பொறியாளர்களான அபிஷேக் குமார் மற்றும் முகமத் ஆரிப் ஆகியோர் மீதும், இளநிலை பொறியாளர்களான மகாராஜ் சிங் மற்றும் அஜய் கங்வார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அந்த பாலத்தின் அருகில் எந்த விதமான தடுப்போ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ நிறுவவில்லை. மேலும் இந்த பாலம் முழுவதும் கட்டப்படவில்லை என்பதை குறிக்க எந்த வித அறிவிப்பும் வைக்கவில்லை" என புகார்தாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த பாலத்தின் ஏற்றத்தில் இருந்த மெல்லிய சுவர் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

இந்த வழியை கூகுள் மேப்ஸில் தேடினால், இங்கு எந்த தடையும் இல்லை என்றும், இது வாகனங்கள் செல்லக்கூடிய பாதைதான் என்றும் காட்டியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கூகுள் மேப்ஸ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை கூகுள் நிர்வாகிகளின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை", என்று ததாகஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் கௌரவ் விஷனோய் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

 
உத்தர பிரதேசம், கார் விபத்து, கூகிள் மேப்ஸ்

பட மூலாதாரம்,VIRAL VIDEO

கூகுள் நிறுவனம் கூறியதென்ன?

இந்த சம்பவத்திற்கு பிறகு கூகுள் மேப்ஸுக்கு பிபிசி ஹிந்தி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது.

"இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம்" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பதில் அளித்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர்கள் நிதின் குமார்(30) மற்றும் அவரது சகோதரர்களான அமித் குமார் மற்றும் அஜீத் குமார் ஆவார்.

நிதின் மற்றும் அமித் ஆகிய இருவரும் ஃபரூகாபாத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தூரத்து உறவினர்தான் அஜீத். நிதினும் அஜித்தும் குருகிராமில் ஓட்டுநாராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் மூவரும் தங்களது குடும்பத் திருமணத்தில் பங்கேற்க ஃபரித்பூர் சென்றுகொண்டிருந்தனர்.

குருகிராமில் இருந்து கிளம்பிய இவர்கள், பதாயுனில் உள்ள ததாகஞ்ச் வழியாக ராம்கங்கா பாலத்தில் ஏறியுள்ளனர்.

''இவர்கள் மூவரும் திருமண நிகழ்ச்சிக்காக எனது வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தனர். மொபைலில் மேப் மூலமாக வழி தேடி வந்துக்கொண்டிருந்த இவர்களின் கார், ராம்கங்கா பாலம் அருகே வந்தபோது கிழே விழுந்துள்ளது'' என்கிறார் நிதினின் மாமா ராஜேஷ் குமார்.

ராம்கங்கா பாலத்தருகே வரும்பொழுது எந்த வித எச்சரிக்கை அறிவிப்பையும் மேப் வழங்கவில்லை என அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த விபத்திற்கு பிறகு அங்கு கூடி இருந்த மக்கள் மேப்பில் பாலத்தருகே எந்த தடையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 
உத்தர பிரதேசம், கார் விபத்து, கூகிள் மேப்ஸ்

பட மூலாதாரம்,UP POLICE

படக்குறிப்பு, ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் ஷிவம்

விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு?

ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளரான அஷுதோஷ் ஷிவம், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

அந்த பாலம் முழுமையாக கட்டப்படவில்லை. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. கார் மிகுந்த வேகத்தில் வந்ததால் கீழே விழுந்துள்ளது என்றார் அவர்.

இந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் இடிந்து விழுந்தது, அதன் பிறகு இதனை மக்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. பாலத்தில் எந்த வித எச்சரிக்கைப் பலகையும் இடம்பெறவில்லை என்ற பிடிஐ வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களும் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது என்று கூறுகின்றனர்.

“இந்த பாலம் உத்தர பிரதேசத்தின் மாநில பாலம் கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடியாத பாலத்தின் வழி மூடப்படாமல் இருந்ததால் விபத்து நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஃபரித்புர் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் குலாப் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காலை 9.30 மணி அளவில்தான் தங்களுக்கு தகவல் வழங்கியதாக காவல்துறை தெரிவித்தது.

அந்த பாலத்தில் எந்த பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லை என்றும் அந்த நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,நிர்வாகத்தின் அலட்சியமே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

“அவர்களுடைய மொபைலில் எந்த மேப் சேவை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை", என்று ஃபரித்புர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் சிங் பிபிசியிடம் கூறினார்.

மறுபுறம், விபத்தில் உயிரிழந்தவர்களின் மொபைலில் மேப் சேவை பயன்பாட்டில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அங்குள்ள அனைத்து சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்ய பொதுப் பணித்துறைக்கு பதாயுன் மாவட்ட ஆட்சியர் நிதி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணொளி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.