Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு

வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1409886



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.