Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நைஜீரியாவின் விசித்திரமான கர்ப்ப மோசடி விவகாரம்
  • எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி
  • பதவி, பிபிசி உலக செய்திகள்

சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார்.

"ஹோப் என்னுடைய மகன்," அவர் உறுதிபடச் சொல்கிறார்.

தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா.

அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உடையவர். ஆனால் இந்த விவகாரம் சாதாரண கருத்து வேறுபாடு அல்ல.

 

சியோமா - இக்கே தம்பதி கூறுவதுப் போல, ஹோப் அவர்களின் உண்மையான குழந்தை என்று அந்த அறையில் இருக்கும் இக்கே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் நம்பவில்லை.

சியோமா இந்த குழந்தையை கிட்டதட்ட 15 மாதங்கள் சுமந்ததாக கூறுகிறார். அந்த ஆணையர் மற்றும் இக்கேவின் குடும்பத்தினர் இந்த கூற்றை நம்ப மறுக்கின்றனர்.

"குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை இக்கேவின் குடும்பத்திடமிருந்து சந்தித்தேன். மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு இக்கேவை அவர்கள் கேட்டனர்," என சியோமா கூறுகிறார்.

விரக்தியில், அவர் வழக்கத்திற்கு மாறான "சிகிச்சையை" வழங்கும் "மருத்துவமனைக்கு" சென்றார் சியோமா. தாய்மை அடைய வேண்டும் என தீவிரமாகவுள்ள பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு விசித்திரமான மற்றும் குழப்பமான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனை அது. குழந்தைகளை கடத்தும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இரகசிய கர்ப்பம் மோசடி தொடர்பான எங்கள் செய்தி சேகரிப்பின் ஒரு பகுதியாக சியோமாவுடன் ஆணையர் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்க பிபிசி அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.

சியோமா, இக்கே மற்றும் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற பெயர்கள் அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன.

நிர்பந்திக்கப்படும் பெண்கள்

உலகில் அதிக பிறப்பு விகிதம் கொண்டுள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இதில் பெரும்பாலும் பெண்கள் கருத்தரிக்க வேண்டும் என்ற சமூக அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். கருத்தரிக்காத பட்சத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள்.

இந்த அழுத்தத்தால், சில பெண்கள் தாய்மைப் பற்றிய தங்களின் கனவை நனவாக்க எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, பிபிசி ஆப்ரிக்கா ஐ (BBC Africa eye) "இரகசிய கர்ப்பம்" மோசடி பற்றி புலனாய்வு மேற்கொண்டது.

மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக தங்களை இந்த மோசடிக்காரர்கள் காட்டிக்கொண்டு, கர்ப்பம் தரிக்க "அதிசய கருவுறுதல் சிகிச்சை" இருப்பதாக பலரை நம்ப வைக்கின்றனர்.

ஆரம்பக்கட்ட "சிகிச்சைக்கு" பொதுவாக நூற்றுக்கணக்கான டாலர் செலவாகும். அந்த சிகிச்சையில் பெண்களுக்கு ஒரு ஊசி, ஒரு பானம் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு பொருளை வைத்தல் போன்றவை இடம் பெறும்.

எங்கள் விசாரணையில் நாங்கள் பேசிய பெண்கள், அதிகாரிகள் என எவருக்கும் இந்த மருந்துகளில் என்ன இருந்து என்பது தெரியவில்லை என்கின்றனர். ஆனால் சில பெண்கள் எங்களிடம் கூறுகையில், இந்த சிகிச்சைக்குப் பிறகு, வயிறு வீங்குதல் போன்று, அவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட வழிவகுத்தது என்கின்றனர். இது அவர்களை கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்துள்ளது.

இந்த சிகிச்சையைப் பெற்ற பெண்கள் வழக்கமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை அணுக வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். ஏனெனில் எந்த ஸ்கேன் அல்லது கர்ப்ப கால சோதனையிலும் "குழந்தை" கண்டறியப்படாது, இது கருப்பைக்கு வெளியே வளரும் குழந்தை என மோசடிக்காரர்கள் கூறியிருக்கின்றனர்.

குழந்தையை "பிரசவம்" செய்ய வேண்டிய நேரம் வரும் போது, பெண்களுக்கு "அரிதான, விலையுயர்ந்த மருந்து" கொடுத்தால் தான் பிரசவ வலி அவரும் என்று மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு மேலும் பணம் கொடுக்க வேண்டும்.

பிரசவம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக உள்ளது. அவை குழப்பமானவையாகவும் உள்ளன. சிலருக்கு மயக்க மருந்து தரப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அறிகுறிகளுடன் அவர்கள் கண் விழிக்கின்றனர். மற்றவர்கள் ஊசி கொடுத்த பிறகு தூக்கம், சுயநினைவற்ற நிலையை அவர்கள் அடைந்ததாகவும் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏதாவது ஒரு வகையில் அந்த பெண்கள் கையில் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர்.

"பிரசவத்திற்கான நேரம் வந்த போது மருத்துவர் என்று அழைக்கப்பட்ட நபர், எனது இடுப்பில் ஊசி போட்டார். பிறகு, குழந்தையை அழுத்தி வெளியே தள்ளுமாறு கூறினார்" என்று ஆணையர் இஃபி ஒபினாபோவிடம் சியோமா கூறினார். ஆனால் அவருக்கு ஹோப் எப்படி பிறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் பிரசவம் "வலியுடன்" இருந்ததாக கூறுகிறார்.

 
நைஜீரியாவின் விசித்திரமான கர்ப்ப மோசடி விவகாரம்
படக்குறிப்பு, மாநில ஆணையர் இஃபி ஒபினாபோ இந்த மோசடியை உடைக்க முயற்சி செய்கிறார்

தம்பதி போல் சென்று போலி மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிபிசி செய்தியாளர்கள்

'மருத்துவர் ரூத்' என்ற பெயருடன் ரகசியமாக பேறுகால சிகிச்சை வழங்கி வந்தவரின் ரகசிய மருத்துவமனைக்கு எங்களின் பிபிசி செய்தியாளர்கள் சென்றனர். எட்டு வருடங்களாக குழந்தைப் பேறு வேண்டும் என்று முயற்சித்து வரும் தம்பதியினராக அவர்கள் தங்களை ரூத்திடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

"மருத்துவர் ரூத்" என்ற பெயர் கொண்ட அவர், தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள இஹியாலா நகரிலுள்ள பாழடைந்த விடுதியில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தனது சிகிச்சை சேவைகளை வழங்கினார்.

அவரது அறைக்கு வெளியே விடுதியில் பல பெண்கள் காத்திருக்கின்றனர். இதில் சிலர் வீங்கிய வயிறுடன் காணப்பட்டனர்.

அந்த முழு இடமும் நேர்மறையாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என கூறப்பட்ட போது, அறைக்குள் பெரிய ஆரவாரம் கிளம்பியது.

பிபிசி நிருபர் அவரை சந்திக்க நேர்ந்த போது, "மருத்துவர் ரூத்" இந்த சிகிச்சை நிச்சயம் பலனளிக்கும் என்று கூறியுள்ளார்.

நிருபருக்கு ஊசியை வழங்கினார் ரூத். அது அந்த தம்பதிகள் தங்களின் வருங்கால் குழந்தையின் பாலினத்தைத் "தேர்வு செய்ய" உதவும் என கூறியுள்ளார். இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்ற ஒன்று.

அவர்கள் ஊசியை நிராகரித்த பிறகு, "மருத்துவர் ரூத்" நொறுக்கப்பட்ட மாத்திரைகளின் பையையும், சில மாத்திரைகளையும் கொடுக்கிறார். மேலும் எப்போது உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் அவர் அளிக்கிறார்.

இந்த ஆரம்ப சிகிச்சைக்கு 350,000 நைரா ($205; £165) செலவானது. இது இந்திய மதிப்பில் இது ரூ. 17,500 ஆகும்.

பிபிசி நிருபர் மருந்துகளை உட்கொள்ளவோ அல்லது "மருத்துவர் ரூத்தின்" வழிமுறைகளை பின்பற்றவோ இல்லை. நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரின் ஆலோசனைக்காக விடுதிக்கு சென்றனர் பிபிசி செய்தியாளர்கள்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் போன்ற ஒரு சாதனத்தை நிருபரின் வயிற்றில் இயக்கிய பிறகு, இதயத்துடிப்பு போன்ற சத்தம் கேட்கிறது என கூறிய "மருத்துவர் ரூத்", பிபிசி செய்தியாளர் கர்ப்பம் அடைந்ததாக கூறி வாழ்த்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இந்த நற்செய்தியை கூறிய பிறகு, "மருத்துவர் ரூத்" குழந்தை பெற்றெடுக்க தேவையான எளிதில் கிடைக்காத மற்றும் விலையுயர்ந்த மருந்திற்காக அவர்கள் எப்படி பணம் கொடுக்க வேண்டும் என விளக்கினார். இந்த மருந்தின் விலை 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் நைரா(நைஜீரிய பணம்) வரை விலை இருக்கும் எனக் கூறினார்.

இந்த மருந்து இல்லாவிட்டால், கர்ப்ப காலம் ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகும் என "மருத்துவர் ரூத்" அறிவியல் உண்மைக்கு எதிராக ஆலோசனைகளை வழங்கினார். அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைவாக பிறக்கும் என்றும் அக்குழந்தையை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"மருத்துவர் ரூத்" பிபிசியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட பெண்கள் இந்த கூற்றுகளை எந்த அளவிற்கு உண்மையென நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அவர்கள் ஏன் இத்தகைய அபாண்டமான பொய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை ஆன்லைனில் கர்ப்பத்தைப் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்கள் மூலம் அறியலாம்.

 
நைஜீரியாவின் விசித்திரமான கர்ப்ப மோசடி விவகாரம்
படக்குறிப்பு, அனம்ப்ரா மாநிலத்தில் போலி கருத்தரிப்பு மருத்துவமனை நடத்திவரும் "மருத்துவர் ரூத்"

தவறான தகவல்களின் வலையமைப்பு

க்ரிப்டிக் கர்ப்பம் என்பது அறிந்த மருத்துவ நிகழ்வாகும். இதில் ஒரு பெண் அவர் கர்ப்பமாக இருப்பது இறுதிக்கட்டம் வரை தெரியாது.

ஆனால் பிபிசி புலனாய்வில், இந்த வகையான கர்ப்பம் குறித்து பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களில் பரவலாக பரப்பப்படும் தவறான தகவல்களை கண்டுபிடித்தோம்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் முழு பக்கத்தையும் "ரகசிய கர்ப்பத்திற்காக" அர்ப்பணித்து, "பல ஆண்டுகளாக" கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது பயணம் அறிவியலால் விளக்க முடியாது எனவும் கூறுகிறார்.

உறுப்பினர்களால் மட்டுமே பார்க்க முடியும் வகையில் இயங்கும் 'க்ளோஸ்டு பேஸ்புக்' குழுக்களில், பல பதிவுகளில் கருத்தரிக்க முடியாதவர்களுக்கு போலியான சிகிச்சையை ஒரு அதிசயம் என்று பாராட்ட மத சொற்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற தவறான தகவல்கள் பெண்கள் இந்த மோசடிகளில் நம்பிக்கை கொள்ள உதவுகின்றன.

இந்த குழுக்களில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் பலர் உள்ளனர்.

மோசடிக்காரர்களும் சில சமயம் இந்த குழுக்களை நிர்வகித்து அதில் பதிவிடுகின்றனர். அவர்கள் இந்த "சிகிச்சையில்" ஆர்வம் காட்டும் பெண்களை தொடர்பு கொள்ள இந்தக் குழுக்கள் உதவுகின்றன.

ஏதாவது ஒரு பெண் இத்தகைய சிகிச்சைக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிந்தால் மோசடி செயல்முறைகள் தொடங்கி விடுகின்றன. அவர்கள் மிகவும் ரகசியமாக செயல்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கப்படுகின்றனர். அங்கு, நிர்வாகிகள் "ரகசிய கிளினிக்" மற்றும் செயல்முறை என்ன என்பதைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

 
இந்த குழுக்களில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் பலர் இடம் பெற்றுள்ளனர்.
படக்குறிப்பு, டஜன்கணக்கில் பெண்கள் மருத்துவர் ரூத்தை காண காத்திருக்கின்றனர்.

"நான் இன்னும் குழப்பத்தில் உள்ளேன்"

"சிகிச்சையை" நிறைவு செய்ய மோசடிக்காரர்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைகள் தேவைப்படுகிறது. கருக்கலைப்பு நைஜீரியாவில் சட்ட விரோதம் என்பதால், நம்பிக்கை இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை, அதிலும் இளம் வயது கர்ப்பிணிகளை இந்த மோசடிக்காரர்கள் குறிவைக்கின்றனர் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர்.

2024 பிப்ரவரி மாதம், அனம்ப்ரா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஹோப்பை சியோமா "பெற்ற இடத்தில்" சோதனை நடத்தியது.

அந்த அதிரடி சோதனையின் கேமரா காட்சிகளை பிபிசி பெற்று அதில் ஆய்வு செய்தது. அந்த வீடியோவில் இரண்டு கட்டடங்கள் கொண்ட பெரிய வளாகம் உள்ளது.

குழந்தை வேண்டும் என்று சென்ற வாடிக்கையாளர்களுக்காக ஒரு அறையில் மருத்துவ உபகரணங்கள் இருந்தன. மற்றொரு அறையில் சில கர்ப்பிணிகள் அவர்களின் விருப்பதிற்கு மாறாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதில் சிலர் 17 வயதினர்.

தங்களின் குழந்தைகளை மோசடிக்காரர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார்கள் என்று தெரியாமல் ஏமாந்து போய் இங்கே வந்ததாக பலர் தெரிவித்தனர்.

உஜு போன்ற சிலர், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர் கர்ப்பமாக இருப்பதை தனது குடும்பத்திடம் கூறுவதற்கு அஞ்சி அதில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது குழந்தைக்காக அவருக்கு 800,000 நைரா கொடுப்பதாக கூறியுள்ளனர் மோசடிக்காரர்கள்.

தனது குழந்தையை விற்கும் முடிவை வருத்தமளிக்கிறதா என கேட்ட போது, "நான் இன்னும் குழப்பத்தில் இருப்பதாக" அவர் பதிலளித்தார்.

 
நைஜீரியாவின் விசித்திரமான கர்ப்ப மோசடி விவகாரம்
படக்குறிப்பு, நைஜீரியாவில் கருக்கலைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் மோசடிக்காரர்கள் இளம் தாய்மார்களை குறிவைக்கின்றனர்

இந்த மாநிலத்தில் மோசடிகளை கண்டறியும் முயற்சிகளில் அங்கம் வகித்த ஆணையர் ஒபினாபோ கூறுகையில், மோசடிக்காரர்கள் உஜு போன்ற பாதிக்கப்படக் கூடிய பெண்களை குழந்தைகளுக்காக குறிவைக்கின்றனர்.

அதிகாரிகள் அவரை காப்பாற்றாமல் இருந்திருந்தால், உஜு தனது குழந்தையை விற்றிருப்பார்.

விசாரணையின் முடிவில், ஆணையர் ஒபினாபோ சியோமாவிடமிருந்து ஹோப்பை பிரிப்பதாக அச்சமூட்டினார்.

ஆனால் சியோமா தனது தரப்பு நியாயத்தை முன் வைத்தார். தானும் ஒரு பாதிக்கப்பட்டவர் என்றும் என்ன நடக்கிறது என்பதை அவர் உணரவில்லை என்றும் அவர் கூறிய விளக்கத்தை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.

அந்த வகையில் சியோமா மற்றும் இக்கே அந்த குழந்தையை வைத்துக்கொள்ள அவர் அனுமதித்தார். அக்குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் உரிமை கோராத வரை சியோமா அந்த குழந்தையை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் பெண்கள் மீதான அணுகுமுறை, குழந்தையின்மை, மற்றும் தத்தெடுப்பு ஆகியவை மாறாவிட்டால் இதுபோன்ற மோசடிக்காரர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.