Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!

எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.

இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும்.

இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தீவின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும்.

சில இடங்களில் 75 மி. மீக்கு மேல் பலத்த மழை பதிவாகலாம்.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர்களாக காணப்படும்.

மேலும், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

கடல் நிலை

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5-3.0 மீ) உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அதிகரிக்கலாம்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இதனால், கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரும் இதனால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1410022

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றம் பெறும்; விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

கடந்த 23 ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும்.
ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை.

தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன

தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே….. நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு
எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம்.

-நாகமுத்து பிரதீபராஜா-

https://thinakkural.lk/article/312749

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு சாத்தியம்!

28 NOV, 2024 | 06:53 AM
image

சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்  திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இந்த தாழமுக்கமானது, மெதுவாக நகர்ந்து செல்கின்றது. மேலும் தீவிரமடைவதுடன் இன்று சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்து வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு  இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் சூறாவளியாக வலுவடைய இருப்பதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்ததும் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது கரையை தொடக்கூடும் தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.

https://www.virakesari.lk/article/199890

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text that says 'PointPedro Point Pedro 210 210km km Mullativu Deep Depression 135km 135 km 110 110kT km Írincomalee Trincomalee 160km 160 km Batticaloa Batticaloa Sri Lanka olombo K.Sooriyakumaran 1001m 3D'

தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை

இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவிலே கரையைக் கடக்கும் இலங்கையில் மழையுடனான காநிலை நீடிக்கும் கரையை கடக்கும் வரை

இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும்
திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும்
முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும்
யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

AB Amam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.