Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


23 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர்.


வழக்கினை விசாரணைக்கு எடுத்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 40லட்சம் ரூபா அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.


இதேவேளை, அபராத தொகை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் நிபந்தனையுடன் விடுதலை!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.