Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

04 DEC, 2024 | 04:51 PM

image
 

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று புதன்கிழமை (03) முதல் தடவையாக பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.

அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார்.

மேலும், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில்,

பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார்.

எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன அவர்களின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hon._Saroja_Savithri_Paulraj__2_.jpg

Hon._Samanmali_Gunasingha__2_.jpg

Hon._Chamindranee_Kiriella__2_.jpg

Women_Caucus_20241203__2_.jpeg

Women_Caucus_20241203__8_.jpeg

https://www.virakesari.lk/article/200407



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.