Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்: அருட்தந்தை மா.சத்திவேல்

Oruvan

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. 

அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும். 

தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். விரிவடைய வேண்டும். 

புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம். 

தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம்.

நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும். 

சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம்.

உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம். 

கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது.

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். 

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது.

தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே.

தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர், படைத்தளங்களை கூட்டுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர், கைதும் செய்கின்றனர்). இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. 

இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை.

தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம்.

மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.
 

 

https://oruvan.com/sri-lanka/2024/12/04/national-peoples-power-will-intensify-the-political-war-against-tamils

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாந்தன் போன்ற வாய்வாளர்களை, தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் புள்ளிகள் எல்லோரையும் விட அருட்தந்தைக்கு சீரிய அரசியல் பார்வை இருக்கிறது.

1 hour ago, கிருபன் said:

மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது! adminDecember 9, 2024 ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், அந்தக் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் செயற்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் ஒன்றிற்கு அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் இதுவரையில் யாருக்கும் வழங்கப்படவில்லை. கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அக்கட்சியின் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர்களை தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த தாமதத்திற்கான காரணமாகும். ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேசியப் பட்டியலில், சுதந்திர மக்கள் காங்கிரஸின் டலஸ் அழகப்பெரும, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாகரன் விஜயேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிஷாம் காரியப்பர் ஆகிய வேட்பாளர்கள் மூன்றிலிருந்து ஐந்தாம் இடம் வரையில் உள்ளனர். அந்த பட்டியலில் முதல் இரண்டு வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆவர். இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்த படி ஏனைய கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2024/209105/
    • ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார்  அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது. 
    • அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர், குடியேற்றம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகவும் ட்ரம்ப் உறுதியளித்தார். அமெரிக்காவின் மிகப் பெரிய குற்றவியல் விசாரணை எனக் கூறப்பட்ட 2021 ஜனவரி 6 தாக்குதலில் குறைந்தது 1,572 பிரதிவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக நுழைவது முதல் தேசத்துரோக சதி மற்றும் வன்முறைத் தாக்குதல் வரையிலான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இவர்களில் 1,251 க்கும் மேற்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் மற்றும் 645 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411506
    • சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்! பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம் மேலும் கூறியுள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒரு மின்னல் முன்னேற்றத்திற்குப் பின்னர் தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது. https://athavannews.com/2024/1411490
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.