Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

ன்பானவர்களே!
“பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது.kavimagan-book.jpg

வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன் இ.இ. கவிமகன்
இயக்குனர்
முருகு வெளியீட்டகம்ltte-histroy-book-kavimagan-3.jpg

முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள்.
***********************************************

“பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை.

மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது.

திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள்.

அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது.ltte-histroy-book-kavimagan-4.jpg

பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார்.

வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது.

தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர்.

பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார்.ltte-histroy-book-kavimagan-6.jpg

தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன்.

இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது.

 

 

https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.