Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம்

நடராஜ ஜனகன்

tna.jpg

தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது.
எனவே தேசிய மக்கள் சக்தியின் சோசலிச பொருளாதார எதிர்பார்ப்புகள் பின்நிலைக்குச் செல்ல சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் முதலீட்டு உள் வருகைக்கான ஆயத்தங்கள் அனைத்துமே முன்னெடுக்கப்படும் நிலை அதிகம் காணப்படுகின்றன. எனவே இவை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின்  பாராட்டுதல்கள், ஒத்துழைப்புக்கள் முதன்மை பெறும் நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு , மனித உரிமை மீறல்கள் தொடர்பான நகர்வுகள் மேற்படி தளங்களில் அடக்கி வாசிக்கப்படும் நிலை தோற்றம் பெற தொடங்கியுள்ளன.

தற்போதைய இலங்கையின் ஆட்சித்தள நகர்வை பார்க்கின்ற போது சகலரும் எதிர்பார்த்த சோசலிச பொருளாதார நகர்வில் இருந்து விலகி முற்று முழுதாக நடைமுறை சார்ந்த பொருளாதார முறைமையை முன்னெடுக்கும் நிலை காணப்படுகிறது. 1970 காலப்பகுதியில் இந்த நாட்டின் பாரம்பரிய இடதுசாரிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த சோசலிச பொருளாதார முன்னெடுப்புகள் பெரும் தோல்வியை வழங்கியவுடன். இவை காரணமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த நிலையும் தோற்றம் பெற்றது. இவர்களின் ஆட்சி 17 வருடங்கள் இலங்கையில் நீடித்தது.

எனவே இலங்கையின் எதிரணியாக காணப்படும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கட்டும் ஏனைய தரப்புகளாக இருக்கட்டும்  இவர்களின் செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி நேர்த்தியாக முன்னெடுப்பதால் இவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு  ஆதரவு வழங்க வேண்டிய நிலையே காணப்படுகிறது.

மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் களத்தில் நின்று செயல்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் மென்மையான முறையில் முன் வைத்திருக்கின்றன. இவர்கள் இது தொடர்பாக கவன ஈர்ப்பு போராட்ட செயற்பாடுகளுக்கு செல்ல தயார் இல்லாத நிலையும் காணப்படுகிறது.

மேலும் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக அனுதினமும் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலை முன்னிலை சோசலிச கட்சி தளத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில் வாழ்க்கை செலவு சுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. அரிசி விலை தொடர்பாக சர்ச்சை நீண்டு கொண்டே போகின்றது. தேங்காய் உட்பட மரக்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. இது போதாதென்ற நிலையில் சபாநாயகரின் தகுதி தொடர்பான சர்ச்சை மிகப்பெரிய விவாதங்களை தோற்றுவித்துள்ளது. மேலும் இயற்கை அனர்த்தமும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலையும் தொடர் கதையாக மாறி வருகிறது.இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 70 லட்சம் மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் இதையும் காண முடியாத நிலை  தொடர்கின்றது.

தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் அதற்கான தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முகாம் அடக்கி வாசிக்கும் நிலையே காணப்படுகிறது. ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலும் அத்தகைய நிலையே காணப்பட்டது. தேசிய மக்கள் கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்தே வருகின்றனர்.

எனவே  மாகாண சபைகள் வழமை போல் இயங்கும். அதற்கு எந்த தடையும் வராது. மூன்று வருடங்களுக்கு பின்னர் எம்மால் கொண்டு வரப்படவிருக்கும் புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம் மட்டும் தேசிய மக்கள் சக்தி தளத்தில் வாக்குறுதியாக இன்னும் காணப்படுகிறது. உண்மையில் தென்னிலங்கையில் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் தேசிய பிரச்சனை தீர்வு விடயம் மேல்வரும் போது அதற்கு எதிரான இனவாத போராட்ட நிலைமை சகலதையும் முடிவுக்கு கொண்டு வரும் நிலை வரலாற்று உண்மையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தம் , டட்லி – செல்வா ஒப்பந்தம் , சந்திரிகாவின் புதிய அரசியல் யாப்பு முயற்சி இதற்கு சிறந்த உதாரணங்களாகும். எனவே தான் தேசிய மக்கள் கட்சியினர் இந்த விஷப் பரீட்சைக்குள் சிக்காமல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய பிரச்சனையை கைவிட்டுள்ளனர் என்ற பகல் கனவில் மிதக்கின்றனர்.

டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் போரின் போது தமது உறவுகளை பறிகொடுத்தவர்கள் காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எப்படி மாவீரர்களை நினைவுகூர்ந்தனரோ அதேபோன்று காணாமல் போனவர்களுக்கு அரசே பதில் கூறு எனக் கேட்டு காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். தென்னிலங்கை அரசு சார்பு ஊடகங்கள் இப் போராட்டங்கள் தொடர்பில் எத்தகைய செய்தியையும் வெளிப்படுத்தாமல் இருந்தமையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்யும் பே ச்சுவார்த்தைகள் செயலுருவம் பெற்று வருவது சற்று ஆறுதல் தரும் விடயமாகும். இது தேர்தல் தொடர்பில் மட்டும் உருவாகாமல் முழு தமிழ் தேசத்துக்குமான அனைத்து விடயங்களிலும் சம்பந்தப்பட்டதாக அமைய வேண்டும். தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தமது அணி வாக்கு வங்கியின் பலத்தைக் கொண்டே  கட்சிகளின் இணைப்பை பற்றி கவனம் கொள்ளும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவரின் கருத்தை பார்க்கின்ற போது கொள்கை பலம் தொடர்பாக இவர்கள் அக்கறை கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதிலை முன் வைக்கப் போகின்றார்கள்.

எனவே தேசிய மக்கள் சக்தி எமக்கு என்ன தரப் போகின்றது என்பதை தவிர்த்து எமது தேசத்திற்கு இன்றைய காலகட்டத்தில் எது தேவை எமது தேசம் எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அவை தொடர்பான போராட்ட செயற்பாடுகள் முன்னிலை பெற வேண்டும். தமிழ் தேசிய பிரச்சனையை தமிழ் மக்கள் கைவிட்டுள்ளனர், இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை அவர்கள் வாக்குகளை வழங்கினர் என்ற தென்னிலங்கை தேசிய மக்கள் சக்தியின் முகாமின் நம்பிக்கைக்கு தமிழர் தேசம் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் பதிலை வழங்கும் நிலை வலிமை பெற வேண்டும்.
 

https://thinakkural.lk/article/313780



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வேடிக்கையான, தனிமனித மாண்பை மதிக்கத்தெரியாத துறை, நீதித்துறையாம். சிரிப்பாய்க்கிடக்கு.
    • ஆனந்தசங்கரியும் சம்பந்தனும் தமிழர் விடுதலை  கட்சியை மீட்க கோட்டுக்கு போய் பிரிந்ததுபோல், சுமந்திரனிடமிருந்து தமிழரசுக்கட்சியை மீட்டெடுக்க நீதிமன்றத்தினால் மட்டுமே முடியும். பதவியாசைக்காக நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு திரிகிறார்கள், அது கிடைக்காத போது கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றெல்லாம் வசை பாடினார்கள். இப்போ, பலவந்தமாக பதவிகளை கையகப்படுத்தி வைத்திருப்பது யார்? கட்சியை இரண்டு படுத்தி உறுப்பினர்களை வெளியேற்றுவது யார்? இவர்கள் பதவியாசை இல்லாத துறவிகளா?
    • இதனால் என்ன வருமானம் வரும்  ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி   பச்சை நீல சிவப்பு   எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு    பச்சை தாள்கள் நீல தாள்களை   எடுத்து விடுங்கள்   அலுவல்கள் நெடிப்பொழுதில்.  நடக்கும் 🤣
    • டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்'' என்று கூறியிருந்தார். அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறியுள்ளார். Read more at: https://tamil.oneindia.com/news/international/iranian-singer-who-performed-without-hijab-to-face-appropriate-action-says-judiciary-department-662997.html
    • யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட...  எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும்.  அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்...    நான்  உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.