Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

December 18, 2024  12:32 pm

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax  தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது.

"நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது.

மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது.

மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.

அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம்."

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197474

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டு கம்பனிகளுக்கு software developer ஆக தொழில் புரியும் இளைஞர்கள் அதியுச்ச tax bracket இல் வர இடமுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும். 2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரி விலக்கு வரம்பை ரூகப 100,000 முதல் 150,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மீளாய்வு தொடர்பாக ஐ.எம்.எப். உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வருமான வரி வரம்பை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

புதிய வரி திருத்தங்களின் பிரகாரம் தனிநபர் வருமானமாக  ரூ. 500,000 முதல் ஒரு மில்லியனை பெறுபவர் வரியின் முதல் கட்டத்தில் உள்ளடகப்பட்டுவதுடன், அவர் 6 வீத வரி விகிதத்திற்கு உட்படுவார். 150000 ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் முழுமையாக வரி விலக்குக்கு உட்படுவர். 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவருக்கு 71 வீதம் விரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,

ரூ.250,000 வரை வருமானம் பெறுபவருக்கு 61 வீதமும்,  300,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 47 வீதமும்,  350,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு  25.5 வீதமும்  அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு அதிகமான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரியும் காணப்பட்டது. தற்போது, குறைவான வரி பெறுவோருக்கு குறைவான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறவிடும் முறை உருவாகியுள்ளது.

தடுத்து வைக்கும் வரி 5 வீதத்திலிருந்து 10 வீதமாக அதிகரிக்கப்படும். சேவைகள் ஏற்றுமதிக்கான வரியை 30 வீதத்திலிருந்து 15 வீதமாக  குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டள்ளது. வாகன சந்தையும் அதை சார்ந்த தொழில்துறையும் மிகவும் பெரியது. நீண்டகாலம் இதனை மூடி வைத்திருக்க முடியாது.

இதுவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் மறுபரிசீலமை செய்யப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்கும் வகையில் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கிக் கணக்கை திறக்க முடியாது 67ஆயிரம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கை திறப்பதற்கான அனுமதியை வழங்க மத்திய வழங்கியுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வருட நிலுவை தொகையுடன் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு 6ஆயிரம் ரூபா வவுச்சர் ஒன்றை பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதல் குறித்த வவுச்சர்கள் வழங்கப்படும். அதேபோன்று அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது குறித்த வவுச்சர்களை பெற்றுக்கொள்ள தகுதியுடைய மாணவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
 

 

https://oruvan.com/income-tax-reduction-presidential-action-plan/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா பெரும் முதலைகளிடமும் சரியாக அறவிட்டாலே போதுமான வருவாய் கிடைத்துவிடும். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னிக்கவும், உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலின் சகோதரம் திருவடிவேல் (கொழும்பில் பிரபல பல் சிகிச்சை நிபுணர்), திருவவடிவேலின் மனையின் வழி உறவினர், மனைவியின் தகப்பனாகவும் இருக்கலாம். அவர்கள், பிசினஸ், கொஞ்சம் வசதி சராசரியிலும்  கூட,  அவரை , கிந்திய  படை காலத்தில் அளம்பில் காட்டில் பிடித்து வைத்து காசு கேட்டது - உறவினர் சென்று பார்க்க முடியாது ஏனெனில், காடு, ஹிந்தியை படைகள், புலிகள் காட்டில் இடம் மாறுவது .. என்று  ஹிந்தியை படைகள் வெளியேறி கட்டுக்குப்பதில் அந்த பின் இரண்டாவது தடவையும், அப்போது யாழில் தான் பிடித்து வைத்து இருந்ததாக. 
    • ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂
    • போராட்டத்தின் நிதி நெருக்கடி காலத்தில் கிழக்கு மாகாணத்தைவிட பல மடங்கு அதிகமாக வடக்கில் நிதி அறவீடுகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன, வரிகள் விதிக்கப்பட்டன, வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டன, அப்பிளுக்கு கூட வரி விதிக்கப்பட்டது, அதனால் பலர் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளானார்கள், இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. இந்த நிதி அறவீட்டில் வசதியுள்ள மாவீரர் குடும்பங்களும் தப்பவில்லை.  அதற்கு உதாரணமாக ஒரே குடும்பத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்து மாவீரர்களான ஜேம்ஸ் , வாசு, சுந்தரி குடும்பமும் அடக்கம். போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார். ஒரு ஆயுத போராட்ட போர் காலத்தில்  தவறுகள் இல்லாமல் எதுவுமே ,எங்குமே அனைவரின் விருப்பப்படியே எல்லாம் நடந்தது என்று உலகின் ஒரு மூலையில்கூட நீங்கள் உதாரணம் காட்ட முடியாது. வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? பயன் படுத்தப்பட்டிருந்தால், உலகிலேயே வசதியானவர்கள் வரிசையில் புலிகளின் அமைப்பும் சிங்களவனுக்கு கால் கழுவியபடி இன்று உயிருடன் இருந்திருக்கும். போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது, சரி ஊர் ஊராக சுற்றி வளைத்து கொத்து கொத்தாக எம்மக்களை சிங்களவன் கொன்று குவித்தபோது என்ன சொல்லி ஆரவாரித்தார்கள்? கண்கண்ட சாட்சியான நீங்கள் இதையும் கண்டிருக்க வாய்ப்புண்டு அதனால் கேக்கிறேன். கப்பம் வசூலித்த போராளி கிழக்கில் எத்தனை பங்களாக்கள் கட்டியுள்ளார் என்று ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பகிர்ந்து கொள்ளூங்கள் அதுவும்  உங்கள் சாட்சிகளில் ஒன்றாய் அமையும். ஜேவிபி ஆயுத போராட்டத்தின்போது மிக குறுகிய காலத்தில்  வகை தொகையின்றி சிங்கள இளைஞர்கள், அவர்கள் குடும்பங்கள் வகை தொகையின்றி இலங்கை பாதுகாப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர், ஆனால் எந்த சிங்களவனும் புலிகளால் இலங்கை ராணுவம் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழில் வெற்றி வெற்றி என்று முழங்கவில்லை, மாறாய் இலங்கையின் ஆளும்கட்சிகளைவிட ஜேவிபியே தமது ராணுவத்தின் பக்கம் உறுதியாக நின்றது, காரணம் ஒன்றேதான், போராட்டகாலத்தில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் எமது இனம் எமது ராணுவம் என்ற ஒன்றை அவர்கள் எதற்காகவும் விட்டுகொடுக்க  தயாரில்லை, சொல்லபோனால் தன்மானத்தில் சிங்களவன் நம்மைவிட சிறிது உயரம் அதிகம்தான். நிதி அறவீட்டில் அவர்களின் பொறுப்பாளர்கள் சொன்னதை தவறானமுறையில் அணுகிய போராளி செய்தது குற்றமே. அதேநேரம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட என்று போனவன் தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிக சிறந்த பழிவாங்கல் என்றால்  , அவ்வாறான இனமான போராளிகளின் சாவில் மகிழ்கிறவர்கள், புலிகளால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, ராணுவத்தால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, இனவிடுதலைபோராட்டத்தை நேசித்த மக்கள் , மிக சிறந்த பழிவாங்கல் என்றே எடுத்துக்கொள்வார்கள். அதுதான் கடந்தகால வரலாறு, அதை புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்று தாம் செய்த தவறை வெளியே சொல்லாமல் சாயம் பூசி இன்றுவரை மறைப்பவர்கள் பலர்.   புலி போராளிகள் கொல்லப்பட்டது சிறப்பான சம்பவம் என்று  ரோஷமுள்ள மக்கள் சொல்வதில்லை என்பதற்கு முற்றுமுழுதான ராணுவகட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வருஷம் வருஷம் மாவீரர்நாள் அனுஷ்டிக்கும் பல லட்சம் மக்களே அதற்கு சாட்சி. அதுபோதும் நம்மை விட்டு சென்றவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் சரியான ஒரு இலட்சியத்திற்கு போராடியபோதே ஒரு சில தவறுகளும் இழைத்தார்கள் என்று சாட்சி சொல்ல,
    • பாஸ்பண்னினாலும் பெயில் விட்டாலும் பாடசாலைக்கு போறமாதிரி ஒரு பழக்கதோசம்தான்😀 உங்களின் கருத்துக்கு உளமார்ந்தநன்றிகள். அன்போடு நன்றிகள் அக்கா 
    • இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.