Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

410815439.jpg

 
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தி!
 

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்  தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 


இலங்கை தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)

   
489274163.jpg
732015410.jpg
517387522.jpg
1557527214.jpg
1607173636.jpg

https://newuthayan.com/article/இலங்கை_தமிழரசு_கட்சியின்_75வது_ஆண்டு_பூர்த்தி!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.