Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநுரகுமார முன்னிலையில்  13 வது திருத்தம் பற்றி  பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?

அநுரகுமார முன்னிலையில்  13 வது திருத்தம் பற்றி  பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? 

இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும்  இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். 

மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஏற்கெனவே நான்கு இலங்கை ஜனாதிபதிகளுடன் கையாண்டிருந்தார்.  திசாநாயக்க மோடி சந்தித்த ஐந்தாவது இலங்கை ஜனாதிபதியாவார். முன்னைய ஜனாதிபதிகளை விடவும் கூடுதலான அளவுக்கு பாராளுமன்ற தேர்தலில்  மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக திசாநாயக்க விளங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்திய பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய ஜனாதிபதிகளில் ஒருவரை மாத்திரமல்ல, இடதுசாரி ஜனாதிபதி ஒருவரையும் சந்திக்கிறார் என்று கடந்த வாரம் எழுதியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுத்த அதே பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வேறு வழியின்றி  தொடருகின்ற ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரையிலும் கூட விக்கிரமசிங்கவின் அணுகுமுறையே கடைப்பிடிக்கின்றார் போன்று தெரிகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி திசாநாயக்க நடத்திய பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை கடந்த வருடம் விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது  வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டவற்றை விட புதிதாக எதையும் கூறவில்லை என்பதே பரவலான அவதானிப்பாக இருக்கிறது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி திசாநாயக்கவிடம் புதிதாக எதையும் கூறியதாக தெரியவில்லை. அது விடயத்தில் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தவற்றையே புதிய ஜனாதிபதியிடமும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால், இலங்கை  செய்யவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பில் எதையும் நடைமுறையில் செய்யப் போவதாக ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளிக்காமல் அவை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். 

இந்தியாவுடன் சேர்ந்து முன்னெடுப்பதற்கு முன்னைய இலங்கை அரசாங்கங்கள் இணங்கிக்கொண்ட பல செயற்திட்டங்களை இரு தேசிய தேர்தல்களுக்கும் முன்னதாக கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் தற்போது தங்களது அரசாங்கம்  மறுதலையாக எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதில் பெரிய சவாலை எதிர்  நோக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (Economic and Technological Cooperation Agreement — ETCA ) செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எட்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய பேச்சுவார்த்தைகளை  ஜே.வி.பி.யின் தலைவராக  திசாநாயக்க கடுமையாக  எதிர்த்தார். 

எந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அன்று திசாநாயக்க சூளுரைத்தாரோ  அதே உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே முன்னைய அரசாங்கங்களின் கீழ்  ‘எட்கா’  உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் 14 சுற்று பேச்சுவார்த்தைகள்   இடம்பெற்றிருக்கின்றன.

ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்திருக்கும் இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்தவாரம் பாராட்டி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான  ஒத்துழைப்பை ஆழமாக்கி வலுப்படுத்துவதற்கு ‘எட்கா’ தொடர்பிலும் திருகோணமலையை பிராந்திய  சக்திவலு மற்றும் கைத்தொழில்  மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி திசாநாயக்க இணங்கியிருப்பதை ஒரு பெரிய முன்னேற்றம் என்று  மெச்சுகிறேன்.” என்று விக்கிரமசிங்க அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எந்த ஒரு சிறிய பிரச்சினையையும்  தவறவிடக்கூடாது என்பதில் அதீத அக்கறையாக இருக்கும் எதிர்க்கட்சிகள் இந்திய — இலங்கை கூட்டறிக்கையில் தவறு கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இலங்கைக்கு துரோகமிழைக்கும் எந்த உடன்படிக்கையையும் தாங்கள் செய்துவிட்டு டில்லியில் இருந்து திரும்பிவரவில்லை என்று ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்கவை பொறுத்தவரை, 1980 களின் பிற்பகுதியில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி  அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். நிச்சயமாக அவரின் சிந்தனையில் இந்திய விரோத அரசியலுக்கு பிரதான  இடம் இருந்திருக்கும். தற்போது அவர் நாட்டின் ஜனாதிபதியாக இந்தியாவுக்கு விஜயம் செய்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருப்பதன் மூலமாக தனது அரசியல் வாழ்வில் ஒரு முழு வட்டத்தைச் சுற்றி வந்திருக்கிறார். 

அவரின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர உறவு முறைமையில் ஒரு முழுமையான அங்கீகாரத்தையும்  பெற்றுக் கொடுத்திருக்கிறது எனலாம்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பொருளாதார ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும்  மனந்திறந்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் குந்தகமான எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை மண்  பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்திருக்கிறார். இது முன்னைய ஜனாதிபதிகளும்  அளித்த உறுதிமொழிதான். 

இந்தியாவையும் சீனாவையும் சமதூரத்தில் வைத்து அவற்றுடனான உறவுகளை ஒரு சமநிலையில் பேணுவதில் ஜனாதிபதி அக்கறை கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக  சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளை பகைத்துக் கொள்ளாத வகையிலான  உறவுகளை பேணுவது இலங்கைக்கு அவசியமாகிறது. 

இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பான பட்டியலுடன் நாடு திரும்பிய ஜனாதிபதி அடுத்த மாதம்  உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவிருக்கிறார். பெய்ஜிங்கில் இருந்தும் ஒரு பட்டியலுடன் தான் அவர் நாடு திரும்பவேண்டியிருக்கும்.  இலங்கையில் தங்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணுவதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டா போட்டிக்குள் இலங்கையை சிக்க வைக்காமல் வழிநடத்திச் செல்வது ஜனாதிபதிக்கு நிச்சயமாக ஒரு சவாலாகவே இருக்கும்.

இனப்பிரச்சினை:

===========

இது இவ்வாறிருக்க, இந்தத் தடவை ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பிரதமர் மோடி இலங்கை இனப்பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்து முன்னைய ஜனாதிபதிகளின் முன்னிலையில் அவர் கூறியவற்றில் இருந்து ஒரு பிரத்தியேகமான வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது.

முன்னைய ஜனாதிபதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் அவர்களுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் இந்தியப் பிரதமர்  இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால், கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் மோடி 13 வது திருத்தம் பற்றி எதையும் கூறவில்லை. அந்த விலகல் பிரத்தியேகமான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

அது மாத்திரமல்ல, அரசியல், பொருளாதாரம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றை தழுவியதாக 31 அம்சங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியோ,  போரின் முடிவுக்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் தமிழர்களின் அபிலாசைகள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

“இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன்  மாகாணசபை தேர்தல்களையும்  நடத்தி அவர்கள் தங்களது கடப்பாட்டை நிறைவு செய்வார்கள் என்று நம்புகிறோம்” என்று மாத்திரம் மோடி செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார். 13 வது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை அவர் திட்டமிட்டே தவிர்த்தார் என்றே தோன்றுகிறது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி திசாநாயக்க, “வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று சகல மாகாணங்களையும் சேர்ந்த சகல சமூகங்களும் எமக்கு கிடைத்த ஆணைக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றன. மக்களினால் அத்தகைய ஒரு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் சாராம்சம் வெவ்வேறு வகைப்பட்ட அரசியல் சிந்தனைகள் மற்றும் குழுக்களின் சகவாழ்விலேயே தங்கியிருக்கிறது என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறேன்”  என்று குறிப்பிட்டார். 

கடந்தகால கூட்டறிக்கைகளில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய குறிப்புகளில் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் நிச்சயமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு நாடுகளினதும்  முக்கியமான பத்திரிகைகளையும்  அரசியல் அவதானிகளையும் போன்று  இந்த வித்தியாசத்தை அல்லது விலகலை  இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும்  கவனித்து அக்கறை காட்டியதாக் தெரியவில்லை.

‘ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ பத்திரிகை திசாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்து வெள்ளிக்கிழமை  எழுதிய  ஆசிரிய தலையங்கத்தில் 13 வது திருத்தத்தை திசாநாயக்க விரும்பவில்லை என்பதால் மோடி தமிழர் பிரச்சினையில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்து ஆங்கிலப் பத்திரிகையும் 13  வது திருத்தம் பற்றி மோடி  குறிப்பிடத் தவறியதை சுட்டிக்காட்டியிருக்கிறது. 

ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அதை ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.13 வது திருத்தமும் ஒரு அங்கமாக இருக்கும் அரசியலமைப்பையே  முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கூறியிருக்கிறார் என்றும் அதை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தடவை 13 வது திருத்தத்தைப் பற்றி மோடி குறிப்பிடாமல் இருந்ததன் சூட்சுமத்தை சுமந்திரன் ஏன் மெத்தனமாக நோக்குகிறார் என்று விளங்கவில்லை.

ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உள்நாட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக தமிழர் பிரச்சினை தொடர்பில் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பதில் மோடி மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. பெருமளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் இந்தியா காலப்போக்கில்  13 வது திருத்தம் பற்றி பேசுவதை கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலான  தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கற்பனாவாத அரசியல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த திருத்தத்தை பற்றி அக்கறை காட்டுவதில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் விரும்பாத ஒரு விடயத்தைப் பற்றி இந்தியா ஏன் வில்லங்கத்துக்கு அக்கறைப்படப் போகிறது? 

 இத்தகைய ஒரு பின்புலத்தில், இலங்கை ஜனாதிபதியின்  இந்திய விஜயத்துக்கு பிறகு  கடந்த வெள்ளிக்கிழமை இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுதிய ‘ இலங்கை தமிழர் பிரச்சினையில்  யதார்த்த நிலைவரத்தை தெரிந்துகொள்தல்’ (Reality check on Sri Lankan Tamil  question )  என்ற தலைப்பிலான கட்டுரையில் சில பகுதிகளை இங்கு கவனத்துக்கு கொண்டுவருவது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

“இலங்கை தமிழ்  அரசியல் சமுதாயம் பெரியதொரு சவாலை எதிர்நோக்குகிறது. அண்மைய பாராளுமன்ற தேர்தலில்  வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஒரு மாவட்டத்தை தவிர ஏறையவற்றில் பிராந்திய தமிழ் கட்சிகளை தேசிய மக்கள் சக்தி தோற்கடித்திருக்கிறது. தமிழ் வாக்காளர்கள் தெளிவான செய்தி ஒன்றைக் கூறிய பிறகு தமிழ் அரசியல் சமுதாயம் அதன் குரலை மீண்டும் பெறுவதற்கு பெரும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

” தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து பழக்கப்பட்டுவிட்ட பிறகு தமிழ் அரசியல் தலைமைத்துவம் அதன் சொந்த தோல்வியுடன் மல்லுக்கட்ட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. புதுடில்லியை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சினை இந்தியாவிற்குள்  நெருக்குதலை தரக்கூடிய ஒன்றாகவோ அல்லது இராஜதந்திர ரீதியில் செல்வாக்கைச் செலுத்த உதவக்கூடிய ஒன்றாகவோ இனிமேலும் இல்லை.  பிரச்சினை தீர்வுக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த உண்மையை விளங்கிக்கொள்வது நல்லது.

” தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அக்கறையும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டுபோகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நேரம் இது. தவிரவும்,  சிறுபான்மைச் சமூகங்களை நன்றாக நடத்துமாறு இன்னொரு நாட்டைக் கேட்பதற்கான தார்மீகத் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டுப்பார்க்க வேண்டும்.

” மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திலான ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள்,  இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆகியவற்றுடன்  ஊடாட்டங்களைச் செய்யும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் மையத் தந்திரோபாயம் களத்தில் கணிசமான முன்னேற்றத்தை  கொண்டு வரவில்லை என்பது தெளிவானது. தமிழ் அரசியல் சமுதாயம்  நம்பகத்தன்மையை மீளக்கட்டியெழுப்பி பொருத்தமான ஒரு சக்தியாக நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு தெரிவுகள் குறைவாகவே இருக்கின்றன.

” அவர்கள் தங்களை திருத்தியமைத்துக் கொண்டு, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்ற மக்களை மையப்படுத்திய அரசியலைச் செய்யவேண்டும். வேறு எங்காவது இருக்கின்ற சக்திகளுடன் வருடக்கணக்காக பேசுவதில் மூழ்கியிருக்கும் தலைவர்கள் இப்போது தமிழ் மக்கள் கூறுவதை உற்றுக் கேட்கவேண்டும். இதை அவர்களுக்கு அந்த மக்கள் நினைவுபடுத்த வேண்டும்.”

https://arangamnews.com/?p=11562



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மனிதாபிமானமாவது மயி,.....வது.  2009 க்குப் பின்னர் எனது நலன் மட்டுமே.  😡
    • வடக்கு கிழக்கில் வசிப்பவர்கள் இந்தியர்கள் என்று நினைக்கிறது.  உண்மையும் அதுதானே.........🤣
    • ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414044
    • சில படங்கள் பார்த்த பின்னர் பலநாட்கள் தொந்தரவு செய்யும். மகாநதி முன்னர் தொந்தரவு செய்தது. இப்போது விடுதலை.. படத்தின் அரசியல் புரியாது எனக்கு முன்னால் இருந்த சில தமிழக இளைஞர்கள் “தோழர்” என்று தங்களுக்குள் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை அதட்டி அமைதியாக்கவேண்டி வந்துவிட்டது. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் “சும்மா கலாய்க்கத்தான்” என்று  சொல்லி அமைதியாகிவிட்டார்கள். படத்தை நிம்மதியாகப் பார்க்கமுடிந்தது.   முகநூலில் வந்த பதிவு ஒன்று.. ஸ்பொயிலர் இல்லை.. —— நம் பாலுமகேந்திராவிடம் பயின்ற வெற்றிமாறன் இயக்கி வெளியாகியிருக்கும் விடுதலை 2 ஒரு செங்காவியம்! முதல் காட்சியிலேயே சுத்தியல் ஒன்று அரிவாளை அடித்து உருவாக்குகிறது! தெளித்திருக்கிறது அரசியல் - ரத்தமாக!! இருந்தாலும் அதையெல்லாம் நல்லதொரு கலைப்படைப்பாக காட்சிக்குக் காட்சி அனுபவித்து உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். கம்யூனிஸ தத்துவத்தை பெருமைப்படுத்தி தமிழில் இப்படியானதொரு அரசியல் படம் வந்ததே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் செய்த தன்னலமற்ற தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயர்நிலைப்பட்டுப் பதியப்பட்டிக்கின்றன. இது படம் அல்ல பாடம். வெற்றிமாறனின் சினிமா அனுபவம் இந்தப்படத்தின்மூலம் துணிச்சலான அரசியலாக மாறியிருக்கிறது.  அதுமட்டுமல்ல, இந்தியாவின் அதிகார அரசியல் மற்றும் காவல்துறை ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்திருக்கிறது படம். லெனின் படத்தையோ மார்க்ஸ் படத்தையோ காட்டிவிட்டு கம்யூனிஸம் என்று கதைவிடாமல், ஒரு படைப்பாக வசனங்களாலும், கதை மாந்தர்களாலும் ஒரு மாபெரும் புரட்சிகரத் தத்துவத்தை தமிழில் எளிமையாகப் பேச முயன்று தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தியிருக்கிறது படம். அதிகாரம், துரோகம், வர்க்கம், சாதி, ஆண்டான் அடிமை முறை, மனித உரிமை மீறல்கள் ஒன்றுடன் ஒன்றும், வரலாற்றுடனும் கொண்டிருக்கும் தொடர்பு படம் முழுவதும் எதிரொலிக்கிறது. ஆனால் விடுதலை1 கொண்டாடப்பட்டதுபோல விடுதலை 2 அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுமா என்பது சந்தேகமே. படம் சிறப்பாகவே இருந்தாலும் அது பேசும் அரசியல் எல்லாருக்கும் புரியாது. (குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் தனி)  இந்திய அதிகாரம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை இயக்குனர் ராஜிவ்மேனன் ஏற்றிருக்கும் பாத்திரம் பச்சையாகச் சொல்லாமல் சொல்கிறது. ஆசான் கே.கே.யாக வரும்  கிஷோர், 'திருட்டுமுழி' சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் மனதில் நிற்கிறார்கள். மஞ்சுவாரியரின் பாத்திரம் மட்டும் சற்று சினிமாத்தனமாக வந்திருந்தாலும், அதற்கும் பெருமளவு அழுத்தம் வெற்றிமாறனால் தரப்பட்டிருக்கிறது. பெண்கள் தலைமுடியை வெட்டி கிராப் செய்து கொள்வதற்கு சொல்லப்படும் காரணம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது - 'விடுதலை பெண்'களை! மஞ்சுவாரியரின் தோற்றம் தோழர் மணலூர் மணியம்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  மணியம்மை பிராமணக்குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்தவர் என்பது நடந்த வரலாறு. தமிழ்நாட்டில் நடந்த கொடுமையான பிரச்சினைக்குரிய வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றை இந்த அளவு துணிச்சலாக... வசனங்களில்... திரைக்கதையில்... பரபரப்பான காட்சி அமைப்புக்களில்.. இவ்வளவு அழுத்தமாக, ஆழமாக, தத்துவப் பார்வையுடன் வெற்றிமாறனைத் தவிர வேறு தமிழ் இயக்குனரால் தரமுடியுமா? சந்தேகம்தான். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் "We Do The Lie" என்பது வெளிப்படையாகத் தெரிவதுபோல எடுப்பார்... பா.ரஞ்சித் தாழ்ந்த ஜாதியினர் செய்யும் பிரச்சாரம்போல வெளிப்படையாக எடுப்பார். வெற்றிமாறனோ விசாரணை செய்கிறார். இனி ஆளை 'இயக்குனர்ஞானி' வெற்றிமாறன் என்றும் சொல்லலாம். படத்தின் எடிட்டிங் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. இசைஞானியின் பின்னணி இசை ஒலிக்கும்போதும்சரி, ஒலிக்காமல் இருக்கும்போதும்சரி படம் மேலும் விறுவிறுப்பாகிறது. இளையராஜாவே எழுதி பாடிய "தினம்தினமும் ஒன் நினைப்பு"  முந்தைய அவரது பாடலான "வழிநெடுக காட்டு மல்லி" பாட்டின் பார்ட் 2 + கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியத்தை பாடவைத்திருக்கும் "மனசில மனசில.." பாட்டில் ஆகாயத்தில் புள்ளி வைத்திருக்கிறார் இளையராஜா. "ஆயுதப் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டுமா?", "போராளிகள் திருமணம் செய்யலாமா" என்று 1980களில் ஈழத்தமிழர்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட இந்தப்படத்தில் சரியான விளக்கம் வருகிறது. "வன்முறை ஒரு மொழி இல்லை. ஆனால் எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்" என்கிறார் விஜய் சேதுபதி. விடுதலை 1இல் சூரியை மையமாக வைத்து கதை ஓடியது. இதில் விஜய்சேதுபதி படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார்.  விடுதலை 1 தமிழ்நாடு விடுதலைப்படையுடன் தொடர்புற்றிருந்தது. விடுதலை 2ல் தமிழரசன், கலியபெருமாள் போன்ற ஆளுமைகள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்த அரசியலின் தீர்க்கத்தை மக்கள் மத்தியிலும், சினிமா ஆர்வலர் மத்தியிலும் எளிமையாக, வலிமையாகக் கொண்டுபோகிறது விடுதலை 2. படத்தில் வரும் வெற்றிமாறன் வசனங்கள் நம்மிடையே பல புரிதல்களையும் விவாதங்களையும் முன்வைக்கிறது. "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்று ஒரு வசனம் வருகிறது. படத்தை பார்க்கும்போது ஜே.வி.பி & ரோகணவிஜயவீரவின் நினைவும் வராமல் போகாது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக முள்ளிவாய்க்கால்வரை சென்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சம்பவம்கூட நுட்பமாக படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கண்ணத் திறந்தபடியே கிடக்கும் சடலம், அதை தூக்கி எடுக்கும் காட்சி.. படத்தைப் பாருங்கள். புரியும்.   https://www.facebook.com/share/18PC8heMXU/?mibextid=wwXIfr
    • கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்! அசர்பைஜானில் இருந்து தெற்கு ரஷ்யாவிற்கு 67 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புதன்கிழமை (25) கசாக் நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், விபத்தில், இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது. இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர். தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, உயிர் பிழைத்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக கஜகஸ்தானின் போக்குவரத்து அமைச்சின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகளில் 37 பேர் அசர்பைஜானைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கசகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1414018
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.