Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி

December 25, 2024  08:58 pm

கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர். 

விபத்து தொடர்பில் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


https://tamil.adaderana.lk/news.php?nid=197830

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
மது போதையில் விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 m அப்பால் பாதையை விட்டு வெளியே நிற்கும் டிப்பர் வாகனம்.
அம்மா,அப்பா 02 குழந்தைகள் என்று அறியப்படுகிறது
தந்தை ஆசிரியர் ஒருவர் என அறியப்படுகிறது 💔😭
டிப்பர் மக்களால் அடித்து உடைப்பு பரிதாப மரணத்தின் எதிரொலி
இடம் மின்சார சபை- வலயக்கல்வி பணிமனை
கிளிநொச்சி.
May be an image of 3 people, bicycle, motorcycle, road and text
 
All reactions
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உத்தேசிக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்குவைத்துப் பரப்புரையில் பொது சன பெரமுன களத்தில் இறங்கியுள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது என்னவிதமான ஒரு மனநிலை. பைத்தியக்காரத்தனமான தலைப்புகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் மலிந்துவிட்டன. இதனை வெறுமனே அனைத்து அறிவார்ந்தோரும் கடந்து செல்வதும் கவலைக்குரியது. பிழைப்புக்காக எதையும் எழுதவும் செய்யவும் துணிந்த உலகிலே சாமானியர்களது குரல்கள் எடுபடுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • எல்லோருக்கும் நன்றிகள் 
    • தெரிந்து இருக்கும், சந்தேகித்து இருக்கலாம், (அனால் இப்போது ஏதாவது உறுதியான ஆதாரங்கள் சிக்கி இருக்கலாம்.) மற்றது, பிரியப்போகுது என்று வெளியில் சொன்னால் பிரிவதன் சாத்தியக்கூறு  அதிகம். உள்ளுக்குள் வைத்து முடிகலாம் என்று பலரு சிந்தித்து இருக்கலாம். அனால், சுமந்திரன் தன் வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறாரோ? (ஏனெல், சுமந்திரனுக்கு இப்போது   வேறு வேலை இல்லைத்தானே). அல்லது, சுமந்திரன் இப்படி ஆக்கினை கொடுப்பது, தேசியப்பட்டியல், பா.உ அவருக்கு கொடுக்க வைக்கும் அழுத்தமாவும் பாவிக்கலாம்
    • மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்! அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையையும் சாடிப் பேசினார். அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன், அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையிலேய‍ே பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சனில் வட்டகல மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளதுடன், இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். https://athavannews.com/2024/1414187
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.