Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"நெஞ்சம் பாடும்  வீரவணக்கம்"

"நெஞ்சம் பாடும்  வீரவணக்கம் இன்றோ 
வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ
கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது 
கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது
தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?"

"மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல  
குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி 
விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க
மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த 
நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!"       
 

       
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

471319779_10227669964437421_335444722272835523_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=5YczbppWLfEQ7kNvgGLYuGq&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AKkxonIIxvbeQ8EkooepiqL&oh=00_AYCIaE34wRmja_PvwhS5-_bbn5TwoOkFxcJxY09K3OvyWQ&oe=67741F17

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சும்மா படுத்திருந்த சிங்கத்தின் மூக்குக்குள் தும்பு விட்டிட்டீர்கள்................🤣. 'அரசகட்டளை' மட்டும் எத்தனை தடவைகள் பார்த்தேனோ........ ஏழோ எட்டோ வயதிலேயே யோகநாயகி, ரஞ்சனா என்று இரண்டு தியேட்டர்களுக்கும் தனியே போய் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை நம்பித்தான் எம்ஜிஆர் படங்களையே இறக்கினார்கள்............ இப்ப சிவாஜிலிங்கம் ஊரிலிருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுகின்றார்............. ஆனால் அவரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை...... முறைப்படி, உரிமைப்படி நான் தான் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வேண்டிய ஆள்...............🤣. அவர் சிவாஜி ரசிகன் என்று நினைக்கின்றேன், நான் தான் அக்மார்க் எம்ஜிஆர் ரசிகன்............... 'இருந்ததையும் கெடுத்தார் இளையதம்பி மேத்திரியார்...............' என்று என்னூரில் சொல்வார்கள். பின்னர், வளர வளர, எம்ஜிஆரும் ஒரு அந்த இளையதம்பி மேத்திரியார் தான் என்று புரிதல் வந்தது..............    
    • நீடிக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு   அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் நேற்று தெரிவித்துள்ளார்.  அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும் பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.  அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும்.  நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன.  இந்த நிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/நீடிக்கும்_அத்தியாவசிய_பொருட்களுக்கான_தட்டுப்பாடு        
    • 2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில்   2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் தேசிய கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  https://newuthayan.com/article/2025ஆம்_ஆண்டு_தேசிய_தைப்பொங்கல்_விழா_யாழ்ப்பாணத்தில்    
    • ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.