Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை.

 

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 28 Dec, 2024
breaking
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை   காலத்தின் தேவை கருதி  இன்று  மீள் வெளியீடு  செய்கின்றோம் .!
இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.!
 

வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கின்றது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது

தமிழின அழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்களஇனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் அன்று தொட்டு இன்று வரை போராட்டங்கள் நடத்திவருகின்றார்கள். எமக்கு முந்திய பரம்பரையினர் அரைநூற்றாண்டு   காலத்துக்கு மேலாக காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர் அறவழிப்போரின் ஆன்மீகப் பண்பியல்பை சிங்கள அரசு உணர்ந்து கொள்ளவில்லை அதற்கு மதிப்பும் அளிக்கவில்லை அகிம்சைப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் மிருகத்தனமாக நசுக்கியது அறவழியில், சனநாயக வழியில் தொடங்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வன்முறையால் நசுக்கப்பட்ட நிலையில், இன அழிப்பு மேலும தீவிரமடைந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்ற இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழரின் ஆயுதப் போராட்டமும் தோற்றம் கொண்டது .
தன்னாட்சி உரிமைகோரி தமிழீழத்தில் தோற்றம் கொண்ட ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பயங்கரவாதம் என்றும் பிரிவினைவாதம் என்றும் சித்தரித்துவிட சிங்கள அரசு பகீரத முயற்சி செய்கிறது. இத்தகைய தவறான கருத்து இந்திய மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் வருகிறது. இந்தச் சித்தரிப்பில் எவ்வித உண்மையும் இல்லை ஈழத்தமிழரின் போராட்ட வடிவத்தை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்விதம் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது .
நாம் பயங்கரவாதிகளும் அல்லர், பிரிவினைவாதிகளும் அல்லர், ஆயுதக் கலாச்சாரத்தை வழிப்படுத்தும் வன் முறையாளரும் அல்லர். நாம் ஒரு இலட்சியத்திற்காக, ஒரு உயரிய குறிக்கோளுக்காகப் போராடுகின்றோம். இன அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாததுக கொள்வதற்காகவே நாம் போராடுகின்றோம்
 
இனக்கொலை வடிவம் எடுத்துள்ள ஆயுத வன்முறைக்கெதிராகவே நாம் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். உயிர் வாழும் உரிமைக்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டிய ஒரு சிக்கலான, நெருக்கடியான ஒரு வரலாற்றுச்சூழலை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். இலங்கைத்தீவில் சுதந்திரம் பெற்றதிலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகள் தமிழரை அரவணைத்து வாழ விரும்பாது அடிமைகொண்டு ஆளவிரும்பியதால் தமிழ் மக்கள் தமது அரசியல் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ள விரும்பினர். ஒருதேசியக் கட்டமைப்பைக் கொண்ட இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் .அதுவும் அரச ஒடுக்குமுறையானது இனஅழிப்பு வடிவமெடுத்த சூழ்நிலையில்தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காகப் போராடத்துணிந்தார்கள்.
நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதி கொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் நம்பிக்கை எமக்கு உண்டு.
 
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.thaarakam.net/news/77736f89-e973-404a-95c7-832c238b0046

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நொச்சி,

இதில் உள்ள வேதனை என்னவென்றால் அன்று தலைவர் கூறிய வார்த்தைகள் இன்றும் அதேயளவு முக்கியத்துடனும், யதார்த்தனுடனும் இருக்கின்றது என்பதுதான். ஆனால் நாம் மாறிவிட்டோம். எமது இருப்பும், தாயகத்தின் இருப்பும் சிறுகச் சிறுக அரிக்கப்பட,  சிங்கள இனவாதிகளை எமது தாயக மண்ணிலேயே தலையில் சுமந்து கொண்டாடி ஆர்ப்பரிக்கும் இழிவான இனமாக நாம் மாறியிருக்கிறோம். 

எம்மீது நடத்தப்பட்ட, இன்றும் தொடர்கின்ற திட்டமிட்ட இனவழிப்பினை பார்க்கமறுத்து, அதனை இல்லையென்று நிராகரித்து, அதனைச் செய்த, செய்ய உறுதுணையாக இருந்த மார்க்ஸிய வேடம்போட்டு ஆட்சியில் இருக்கின்ற இனவாதிகளை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கவும், தலைமையாக ஏற்கவும் நாம் விரும்புகின்றோம். பாணும், மோட்டார்சைக்கிளுக்கு பெற்றொலும் வாங்க வரிசைகளில் நிற்பதைக் காட்டிலும் இனவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று நாம் எண்ணித் துணிந்துவிட்டோம். ஏனென்றால் எமதினம் இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துப் போராடியது ஒரு இறாத்தல் பாணிற்கும், ஒரு லீட்டர் பெற்றோலிற்கும்தான் என்பது எம்மில் பலரின் கருத்தாக இருக்கிறது.

எமது தாயகத்தில் தமிழுடன் சேர்ந்து தமிழினமும் மெல்லச் செத்துக்கொண்டிருக்கிறது.

அன்புடன்
ரஞ்சித்

On 28/12/2024 at 19:26, nochchi said:

இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டினை விட்டு புலிகள் வன்னிக்குப் பின்வாங்கிய காலத்தில் (1995 ரிவிரெச / சூரியகதிர் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குப் பின்னர்) தலைவரினால் ஆற்றப்பட்ட உரை இது. இதன் முக்கியத்துவத்தினை எவருமே கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இணைத்த இவ்வுரையினை இதுவரையில் பார்த்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே. எமதினம் எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

யாழ்ப்பாணக் குடாநாட்டினை விட்டு புலிகள் வன்னிக்குப் பின்வாங்கிய காலத்தில் (1995 ரிவிரெச / சூரியகதிர் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குப் பின்னர்) தலைவரினால் ஆற்றப்பட்ட உரை இது. இதன் முக்கியத்துவத்தினை எவருமே கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இணைத்த இவ்வுரையினை இதுவரையில் பார்த்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே. எமதினம் எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். 

ஒரு இனத்தின் துயரச்சுவட்டை ஆதாரமாகக்கொண்டு புலம்பெயர்ந்த நாம் நிலைபெயர்ந்து வருகின்றோம் என்ற கசப்பான உண்மையை எதிர்கொண்டு நிற்கின்றோம். உலகில் ஒரு சிறிய மக்கள் கூட்டமானபோதும் நாம் 30ஆண்டுகளில் சாதித்தவை பல. அவற்றை வேற்றவர் அபகரித்துச் செல்லத் தம்மையறியாமலே தமிழினம் துணைபோவது துயரமானது.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.