Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

23 JAN, 2025 | 06:34 PM
image
 

யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு இன்று வியாழக்கிழமை (23) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஊடக விவரிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஷான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு பற்றி விளக்கமளித்தார்.

அதன் விவரம் வருமாறு:      

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டபீடத்தின், இந்தியாவின் புகழ்பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை   தை மாதம் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இம்மாநாடானது யாழ். பல்கலைக்கழகத்தின்  மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.

மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம், நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் ,  தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வில் ஆளுகை நிலைமாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டியான் ஷாவும், இலத்திரனியல் நிலைமாற்றம் தொடர்பாக  சிரேஷ்ட  சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரட்னவும் திறப்புரைகளை  ஆற்றவுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு , அதன் எதிர்காலம் என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அந்தக் கலந்துரையாடலில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன் ,  ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்தா டி அல்மெய்டா குணரட்ண , பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கலன சேனாரட்ண ஆகியோர் உரையாளர்களாகவும்   மாற்றுக்   கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன் சேகா உரையாளர் மற்றும் நெறியாளராகவும் பங்கு கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்  ஜனக் டீ சில்வா பிரதம விருந்தினராகவும் , இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட நிலையியற் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சமந்தா உனம்பூவே சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், கலாசார நிலைமாற்றம் தொடர்பாக சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷாமலா கோமஸ்ம், முறையியல் நிலைமாற்றம் தொடர்பில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் நாகநாதன் செல்வக்குமரனும் திறப்புரைகளை ஆற்றவுள்ளனர்.

அவ்வாறே  நிலைமாற்றம் , சவால்களும் வாய்ப்புக்களும் என்னும் தொனிப்பொருளிலான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன் , கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த  விரிவுரையாளர் கலாநிதி  முத்துக்கிருஷ்ணா  சர்வானந்தன், சட்டத்தரணி சந்துணி  ஆகியோர் வளவாளர்களாகவும்,   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    ஆங்கிலத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் நெறியாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அதேநேரம், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்படட ஆய்வுச் சுருக்கங்கள்  பொருளாதார வளர்ச்சியும் முதலீடும், சுற்றுச்சூழல் சவால்கள் , உரிமைகள், நீதி, குடும்பச் சட்டமும் பாரபட்சமும் , செயற்கை நுண்ணறிவும் தொழிநுட்பமும் , புதிய எண்ணக்கருக்கள்  என்னும் 7 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவ்வருட மாநாட்டின் புதிய முயற்சியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் சிலர் முறையான ஆய்வு மேற்பார்வைக்குட்பட்ட தமது ஆய்வுக் கட்டுரைகளை முதல் நாள் மாலை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

மாநாட்டின் மற்றொரு அங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு  ஒன்றும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது  நாளை வெள்ளிக்கிழமை (24)  பிற்பகல்  4 .30  மணி  முதல் 6.30  மணி  வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் கனதியானதும் காலப் பொருத்தம் வாய்ந்ததுமான சர்வதேச சட்ட மாநாட்டில்  ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். 

https://www.virakesari.lk/article/204704

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

முதல் நாள் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு , அதன் எதிர்காலம் என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

 

10 hours ago, ஏராளன் said:

சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஷான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

10 hours ago, ஏராளன் said:

மேலும், கலாசார நிலைமாற்றம் தொடர்பாக சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷாமலா கோமஸ்ம்

கலாசார நிலைமாற்றம் ....

மக்களின் கலாச்சார நிலையத்துக்கு தாங்கள் நினைத்த படி பெயரை மாற்றிய இந்திய தரப்பு ...இப்ப பல்கலைகழகத்தில் பாடம் எடுக்கினமாம்...அதுவும் தலைப்பு சர்வதேச சட்டத்தைப்பற்றி ஆய்வு செய்ய போயினமாம்...சிறு தீவில் 1987 ஆம் ஆண்டு உருவாக்கிய சட்டம் ஏன் அமுல்படுத்த முடியவில்லை என ஆய்வு செய்யுங்கோ ...சர்வ்தேச சட்டங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பிராந்தியத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதிப்பது ,அமுல் படுத்துவது போன்ற விடய்ங்களை பற்றி ஆய்வு செய்யுங்கோ 
 

10 hours ago, ஏராளன் said:

இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் கனதியானதும் காலப் பொருத்தம் வாய்ந்ததுமான சர்வதேச சட்ட மாநாட்டில்  ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். 

இந்தியாவும் ,சிங்கப்பூரும் மட்டும் சர்வதேசமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

January 25, 2025  05:35 pm

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று (25) யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை நடாத்துகிறது.

இம்மாநாடானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை  9 மணியளவில் ஆரம்பமானது.

மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் ,  தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிபதிகள், நீதவான்கள், சட்டத்துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199290

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

 

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

January 25, 2025  05:35 pm

.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிபதிகள், நீதவான்கள், சட்டத்துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199290

 

 

 

1 hour ago, கிருபன் said:

யாழ்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

சொல்லவே இல்லை யாழில் ஒர் தனி ஜனாதிபதி இருக்கின்றாரா? ...யாழ் ஜனாதிபதி சட்டத்தரனி சுமத்திரன் என செய்தி போட்டிருக்கினம்

 

என்னப்பா சர்வதேசமாநாடு  எண்டு சொல்லுறாங்கள் ...சீனாக்காரன்,வெள்ளைக்காரன்,ஆபிரிக்காரன்,அரபிக்காரன் ஒருத்தரையும் காணவில்லை...யாழ்ப்பாணத்தானுக்கு இந்தியா தான் சர்வதேசம் என பாடம் எடுக்கினம் போல..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.