Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   24 JAN, 2025 | 08:47 PM

image
 

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு அறிக்கை ஒன்றின் மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள் எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். இருப்பினும் அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும், வினைத்திறன் உள்ளவர்களாகவும் மாணவர்களை வலுப்படுத்துவதில் பல்கலைக் கழகங்கள் பின் தங்கிவிட்டதாக எமது சமுதாயத்தில் கருத்து நிலவி வருகின்றது.

எமது பல்கலைக்கழகம் எப்பொழுதும் மாணவர்கள் நலன் சார்ந்தே தனது தீர்மானங்களை எடுத்து வருகின்றது என்பது வரலாறு இனியும் அது தொடர வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 24/01/2025 வெள்ளிக்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தமாகச் செயற்படுவது எமக்கு வேதனையை தருகின்றது.

எனவே மாணவர்களின் சாத்வீக முறையான இப்போராட்டம் வெற்றி பெற அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்டதிட்டங்களுக்கமைய, நீதியாக, காலந்தாழ்த்தாது விரைவில் தீர்த்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக ஊழியர் சங்கமாகிய நாமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது

https://www.virakesari.lk/article/204819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள்!

Published By: DIGITAL DESK 7

24 JAN, 2025 | 03:00 PM
image
 

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.

விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து

போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்

விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்

⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து - மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

IMG-20250124-WA0062.jpg

https://www.virakesari.lk/article/204781

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

January 24, 2025  09:19 pm

யாழ். பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் (24) முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது தொடர்பில் மாணவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார். 

கதவினை பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது.  அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். 

அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.  புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலை கழகத்தில் விரும்பிய பாடத்தை தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வில்லை அவற்றை கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்துள்ளார்கள். 

மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூத்தவை சபையோ, பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூத்தவை சபை மற்றும் பேரவை ஆகையவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199256

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு

Published By: VISHNU

25 JAN, 2025 | 09:57 PM
image
 

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் அனைவரும் இன்று துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/204892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள், கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது - அனைத்துபீட மாணவ ஒன்றியங்களும் கூட்டாக அறிக்கை

Published By: RAJEEBAN    28 JAN, 2025 | 09:01 AM

image
 

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது.

  • விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும் / நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல்,
  • போராடுதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்,
  • விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல்,
  • மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல்.

எமது பல்கலை மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட வகுப்புத்தடைகள் விதிமீறல்களுடனும் உரிய கால நீட்டிப்புக்களுடனும் நடைபெறவில்லை என்று 25.01.2025 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கல்லாசனங்கள் அகற்றப்பட்ட விடயத்தில் கூட எவ்வித நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், ஒப்புதல்கள் பெறப்படாமலும் பொதுச் சொத்தொன்று உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ள குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளமையினையும் பேரவையானது கண்டறிந்துள்ளமை நோக்கத்தக்கது.

மேற்படி விதிமீறல்களுடன் நடைபெற்ற விடயங்கள் குற்றமெனக் கணிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த செயல்கள் யாவும் போதைப் பொருட்களிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளாக சித்தரித்து திரிபுபடுத்தப்படுகின்றமை வேதனையானது. முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுச் சிக்கலில் உள்ள பிறழ்வுகளையும், whats app குழுவில் கலந்துரையாடிய மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமையும் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதிகார பீடங்கள் தங்களின் நலன்களிற்காக போராடும் வர்க்கங்களை பிரித்தாளும் வழமை யாவரும் அறிந்ததே! அவ்வாறு தான் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணை கொண்டு புதிய புனைவுகள் எம்மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 

மாணவர்கள் மீது நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணைகள் எவற்றிலும் கல்லாசனங்களோ, போதைப் பொருட்களோ நேரடியாகத் தொடர்புபடாத நிலையிலும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துகின்றோம். மாணவர் சமூகமாக நாங்கள் ஒருபோதும் போதையை ஆதரித்ததுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை. மாறாக “காலில் புண் என்றால் காலினை வெட்டியெறிவதற்குப் பதில் அதனை ஆற்றுவதே சமூகப் பொறுப்பு”. அதாவது கல்லாசனங்களால் ஏதேனும் சிக்கல் நிலை இருப்பின் அதற்கான முற்காப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ளுவதும், அதனை தடுத்து நிறுத்துவதுமே மாணவர் ஒழுக்கம் சார் தரப்பினரின் கடமையும் பொறுப்புமாகும்.

மாறாக பொதுச் சொத்தினை தகர்ப்பது என்பது பெருந்தவறு. அதனை நியாயப்படுத்தும் விதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் ஒரு நெறிபிறழ்ந்த சமூகம் எனும் காட்டிக் கொடுப்புக்கள் திட்டமிட்டு பல்கலைக்கழக மாண்பிற்கு களங்கமேற்படுத்தும் வகையில் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணையுடன்; அரங்கேற்றப்படுகிறமை வேதனைக்குரியது.

மாணவர்களுடைய கருத்தாக சித்தரித்து ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பென்பது மாணவர்களுடைய கருத்தன்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலை நிர்வாகம் ஆகியவற்றை களங்கப்படுத்தும் வகையில் ஆதாரங்களேதுமற்ற திரிபுபடுத்தப்பட்ட பொய்யான செய்திகள் பொது வெளியில் பகிரப்பட்டு வருகின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களின் அடிப்படை கற்றல், சனநாயக உரிமை சார்ந்தே முன்னெடுக்கப்பட்டது. எனினும் அது திட்டமிட்டு திரிபுபடுத்தப்படுவதோடு, பல்கலைக்கழகத்திற்கு களங்கமேற்படுத்துவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக பேரவையினையும் துணைவேந்தரையும் திட்டமிட்டு குற்றஞ்சாட்டும் நோக்கில் இவை பரப்பப்படுகின்றமையினையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

https://www.virakesari.lk/article/205089

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.