Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 பிப்ரவரி 2025, 03:33 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.

"அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வருமான வரி மசோதா

  • வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.
  • புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2025: உரையின் முக்கிய அம்சங்கள் - வருமான வரியில் புதிய மாற்றம் என்ன?

பட மூலாதாரம்,ANI

விவசாய துறை அறிவிப்புகள்

  • பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது.
  • பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் 10 முக்கியப் பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
  • வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
  • அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும்.
  • எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
  • கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில் துறை தொடர்பான அறிவிப்புகள்

வருமான வரி மசோதா, நிர்மலா சீதாராமன்
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
  • முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும்.
  • இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

கல்வி

நிர்மலா சீதாராமன்
  • பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000இல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும்.

மற்ற அறிவிப்புகள்

  • உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றின் விலைகள் குறையும் எனத் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சக்‌ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன் பெறுவர். இதனுடன், ஒரு கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர்.
  • புத்தரின் காலம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
  • தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.
  • மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

வருமான வரியில் புதிய மாற்றம் என்ன?

மத்திய பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் உரையின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம்,SANSAD TV

முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது.

அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.

8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார்.

மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை

முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட கால தொழில் வளர்ச்சியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் வலுவாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம்

2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம்.

2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார்.

அதன்படி, (இந்திய மதிப்பின் படி)

பாதுகாப்பு – ரூ. 4.91 லட்சம் கோடி

ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி

சுகாதாரம்- ரூ. 98.311 கோடி.

சமூக நலன்- ரூ. 60052 கோடி.

உள்துறை – ரூ.2.3 லட்சம் கோடி.

தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி.

கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி.

வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி.

நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி.

வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி.

அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1419261

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்

1 பிப்ரவரி 2025
2025 - 2026 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களிடையே மிகவும் அதிக கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்றாக வருமான வரி குறித்த அறிவிப்பு இருந்தது.

அதற்கு காரணம் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை.

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு  உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து தற்போது புதிய வருமான வரி முறையில் 12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2019-ல் 5 லட்சமாகவும், 2023-ல் 7 லட்சமாகவும் உயர்ந்தபட்ட நிலையில் தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2025 -2026 நிதியாண்டுக்கு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை இந்த பட்ஜெட்டில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், சேமிப்புகளை ஊக்குவிக்கக்கூடிய, வீட்டுக்கடன் உள்ளிட்டவர்களுக்கு வரி விலக்கு பெறக்கூடிய பழைய வருமான வரி முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது பொருந்தாது. புதிய வருமான வரிமுறைக்கு மட்டுமே பொருந்தும் என்பதாகும்.

இந்தியாவில் தனிநபர் வருமான வரி அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பாஜக அரசு புதிய வருமான வரி தாக்கல் முறை எனும் ஒரு புதிய முறையை கொண்டு வந்தது.

தற்போது இந்தியர்கள் இரு வருமான வரி தாக்கல் முறைகளில் எதை வேண்டுமானாலும் எந்த ஆண்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் வரியை தாக்கல் செய்யலாம்.

பழைய வருமான வரி முறையை பொறுத்தவரையில் வருடந்தோறும் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சத்துக்கு 5 சதவீதம் வரி.

5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி. அதாவது 5 லட்சத்துக்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு லட்சத்துக்கும் அரசுக்கு 20 ஆயிரம் ருபாய் வரி கட்ட வேண்டும்.

10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி. ஒருவர் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் ஒவ்வொரு லட்சத்துக்கும் 30 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டும்.

ஆனால், 2020-ல் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரி முறை வேறு விதமாக இருந்தது. வரி விலக்கு பெறும் பல அம்சங்கள் ஒழிக்கப்ட்டன, அதே சமயம் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பப்ட்டு, பழைய வருமான வரியை ஒப்பிடும் போது ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரி செலுத்தும் வகையில் புதிய வருமான வரி முறை அமைக்கப்பட்டது. மேலும் இது மக்கள் புரிந்து கொள்வதற்கு, வரித் தாக்கல் செய்வதை ஊக்கப்படுவதற்கும் எளிமையாக இருக்கும் என மத்திய அரசு கூறியது.

நிர்மலா சீதரமானின் இன்றைய பட்ஜெட் உரையில் பழைய வருமான வரி தாக்கல் முறையை பயன்படுத்துவர்களுக்கு எந்த வித சலுகை அறிவிப்பும் இல்லை. எனவே பழைய வரி முறையை பயன்படுத்துபவர்கள் புதிதாக மிகப்பெரிய அளவில் வரியை சேமிக்க முடியுமா என நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் உங்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் புதிய வருமான வரி முறையில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி, வரி குறைப்பையும் செய்திருக்கிறது மத்திய அரசு.

முதல் 4 லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது. 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம். 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம். 12 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம். 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம். 20 முதல் 24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம். 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்.

புதிய வருமான வரி முறையில் சேமிக்கத் தூண்டும் அம்சங்கள் இல்லை என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், வரி குறைப்பு காரணமாக மத்திய தர வர்க்கத்தினர் கையில் அதிக பண புழக்கம் வர இந்த வரிமுறை உதவும். இது அவர்கள் சேமிக்கவும், முதலீடு செய்யவும் உதவும் என்கிறார் நிர்மலா சீதாராமன்.

கடந்த ஆண்டுகளை போல அல்லாமல், இனி இந்த புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தால், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றவர்கள் சுமார் 80 ஆயிரம் ரூபாயும், 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றவர்கள் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் வரியை சேமிக்க முடியும் என்கிறார் அவர்.

புதிய வருமான வரி முறை காரணமாக ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அரசு நேரடி வருமான வரி இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தரவுகள் அடிப்படையில் பார்த்தால், 2020-21 நிதியாண்டில் 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர் வருமான வரி தாக்கல் மூலம் நேரடி வரியாக மத்திய அரசுக்கு கிடைத்தது. அது 2023-24-ல் 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் தகவல்களின் படி, 2019-20 நிதியாண்டில் 6 கோடியே 48 லட்சம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். 2023 - 24 நிதியாண்டில் இதில் 8 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஆகவே நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசு கூறும் இழப்பு வரும் ஆண்டுகளில் ஈடுகட்டப்படக்கூடும் என்றே தெரிகிறது.

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvg8pn3rrqqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Anand Srinivasan on Budget 2025: "ஏழை ஏழையாவே இருப்பான்; Railway-ஐ பத்தியே பேசலயே?"

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.