Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுய சிந்தனையும் அடையாளமும் சித்தாந்தங்களும் செயற்பாடுகளும்.

Featured Replies

இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏனெனில் தமது அரசியல் நிலைப் பாடுகளை விவாதிக்கத் தயங்கும் எவருமே தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறார்கள். விவாதத்தின் மூலம் தமது தெளிவற்ற குழப்பமான நடைமுறைக்கு ஒவ்வாதா வரட்டுத் தனங்கள் அம்பலமாகும் என்னும் பயமே இந்த மறுப்பிற்கான அடிப்படை.இதை மறைக்க பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.எனக்குத

அற்புதன்,

மிக நுணுக்கமான ஒர் விடயத்தை சொல்ல எடுத்திருக்கிறீர்கள் !!. மிகவும் நல்லது. உங்களின் எழுத்தினூடே எனது எண்ணங்களின் பதிவுகளையும் இணைத்து விடுகிறேன்.

நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.

அறிவு என்பது காலம் சார்ந்தது. என்றும் வளர்ந்து கொண்டிருப்பது. அதேநேரம் மனிதனின் தேவைகளும், அவனுக்கு வாழ்க்கை முன்வைக்கும் பிரச்சனைகளும் புதிதாகவே இருக்கின்றன. சரியான வழி எது என கண்டறிவது என்பது ஆக்கபூர்வமான கேள்விகளின் மூலமே தெரிந்தெடுக்கபடுகின்றன. இந்த சித்தாந்தங்கள் எல்லாம் கேள்விகளின் மூலம் புடம்போட படுகின்றன. வாழ்க்கையின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலிறுக்க முடியாத சித்தாந்தங்கள் காலாவதியாகின்றன. அப்படித்தானே?

இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏனெனில் தமது அரசியல் நிலைப் பாடுகளை விவாதிக்கத் தயங்கும் எவருமே தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகிறார்கள். விவாதத்தின் மூலம் தமது தெளிவற்ற குழப்பமான நடைமுறைக்கு ஒவ்வாதா வரட்டுத் தனங்கள் அம்பலமாகும் என்னும் பயமே இந்த மறுப்பிற்கான அடிப்படை.இதை மறைக்க பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.எனக்குத? தமிழ் தெரியாது என்பது ஒன்று,விவாதமே அவசியம் அற்றது எனும் பாசிசக் கருத்தியல் இன்னொன்று.

அத்தோடு, கேள்விக்கு ஆளாகாமல் தப்பும் விதமாக "இதை நம்பு" என ஒரு வாய்ப் பூட்டை போட்டும் விடுவார்கள்.

நான் யார், நான் வாழும் சூழலில் எனது அடையாளம் என்ன,எனக்கும் எனைச் சூழ இருக்கும் சமூகத்திற்குமான உறவு எத்தகையது எனும் கேள்விகளில் இருந்தே ஒருவரின் அரசியல் பிரஞ்ஞை என்பது பிறக்கிறது.இவ்வாறு பிறக்கும் சுய அரசியல் விழிப்பின் பாற்பட்டே அரசியல் சிதாந்தங்களும் அந்தச் சித்தாந்தங்களை முன் மொழியும் இயக்கங்களும் பிறக்கின்றன. இவ்வாறு பிறக்கும் அரசியல் இயக்கங்களுக்கான தேவை என்பது அவை பிறக்கும் காலத்தில் நிலவும் சமூக உறவு முறைகளில் இருந்தே பிறக்கிறது.இன்றைய அரசியல் என்பது இன்றைய முரண்பாடுகாளின் அரசியல்.அது கற்பனையான அல்லது நேற்று இருந்த அல்லது நாளை நிகழக்கூடிய முரண்பாடுகளின் அரசியல் அல்ல.

அதாவது தொடர்புகள் (relationship). இயற்கை விதிகளானாலும் சரி, சமூக விதிகளானாலும் சரி அந்தந்த காரணிகளுடனான சரியான தொடர்புகளில் இருந்தே உருவாகின்றன. சமூக ஓட்டம் கூட இந்த தொடர்புகளிலேயே தங்கி இருக்கிறது. உண்மையில் "தொடர்புகள்" இல்லை என்றால் பிரச்சனைகளை கண்டறிய முடியாது. ஒரு சிறு உதாரணத்தை எழுதி விடுகிறேன். "கோபம்" என்பதை எடுத்துக் கொள்வோம். எம்மில் பலர் கோபத்தை அடக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறோம். அதற்காக தொடர்புகளை அறுத்தெறிய முனைகிறோம். எவ்வளவு முட்டாள் தனமானது. உண்மையில் முரண்கள் பிறப்பது இன்னொருவருடனான தொடர்பிலேயே.

முரண்பாடுகளைத் தீர்க்கும் வழி முறையே அரசியல் என்னும் போது, அரசியல் இயக்கங்கள் என்பனவையும் முரண்பாடுகளின் அடிப்படையிலையே கட்டப்படுகின்றன.ஒரு மக்கட் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் பிரதானமான முரண்பாட்டை தீர்க்கும் வண்ணம் அந்த மக்கட் சமூகத்தில் இருந்து எழும் அரசியற் சக்தி என்பது அந்த பிரதான முரண்பாட்டிற்கான தீர்வின் அடிப்படையிலயே எழுகிறது.

மிக அடிப்படையில் இதை என்னால் ஏற்க முடியவில்லை. அரசியல் என்பது முரண்களை வளர்த்தே வந்துள்ளது. முரண்களை இது தீர்க்கும் என நான் நம்பவில்லை. மக்கட் சமூகத்தினுள்ளும், அதன் வெளியேயும் தோன்றும் முரண்கள் எல்லாமே அடிப்படையில் தனி மனிதனில் இருந்து கிளம்புவனவையே. இவற்றிற்கான காரணம், பிரச்சனைகளை தத்தம் சுய விருப்பு வெறுப்புக்களை கொண்டு மதிப்பிடுவதும், கையாள முற்படுவதும் தான். எனவே பிரச்சனைகளும் அதன் ஆணிவேரான முரண்களும் தீரவேண்டுமானால் முதலில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அந்த பிரச்சனையை "அதுவாகவே" (as it is) பார்க்க பழக வேண்டும். தீர்வும் அங்குதான் இருக்கிறது. இன்று தமிழர் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவால்களில் ஒன்று சிங்களர் "பிரச்சனையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்க மறுப்பதுதான். எனவே அறிவுக் கண்கள் திறக்காத வரை அவர்கள் முரணிலேயே வாழப் போகிறார்கள்.

எந்த அரசியல் இயக்கமும் அந்தத் தருணத்தில் அதற்கான தேவையில் இருந்தே எழுகிறது.எனக்குப் பெரியாரைப் பிடிக்கும் எனக்கு புக்கோவைப் பிடிக்கும் எனக்கு மாக்சைப் பிடிக்கும் என்பதால் அவர்கள் போன நூற்றாண்டுகளில் இப்படிச் சொன்னார்கள் ஆகவே நான் இணையத்தில் அவர்கள் சொன்ன வேதவாக்கின் படி புரட்சி செய்யப் போகிறேன், மானாடு நடத்தப் போகிறேன் என்பதால் எதுவுமே நடை பெறப் போவதில்லை.வரலாற்று இயங்கியலே அரசியல் இயக்கங்களை உருவாக்குகிறது.பிரபாகரனை உருவாக்கியதும்,புலிகளை உருவாக்கியதும் வரலாற்று இயங்கியல் தான்.

:lol::lol:

நாளும் நாளும் செத்து மடியும் எனது உறவுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியை எந்த அரசியல் இயக்கம் சொல்கிறதோ அதிலும் மிக முக்கியமாக அதன் பொருட்டு வினைத்திறனுடன் செயற்படுகிறதோ அதற்கே நான் எனது ஆதரவை வழங்கப் போகிறேன்.அவ்வாறே தம்மை தமிழர்கள் என்று உணரும் பலரும் சிந்திக்கும் போதும் அதன் பொருட்டு செயற்படும் போதும் அந்த அரசியல் இயக்கம் பரந்த அளவில் மக்கள் ஆதரவைப் பெற்று மேலும் மேலும் வளர்ந்து முரண்பாட்டிற்கான தீர்வை நோக்கிச் செல்கிறது.

மிகவும் சரியானது. இதை இன்னொரு வகையில் கூறுவதானால், "இயற்கை எமக்கு ஒவ்வொரு கணமும் புத்தம் புதிய சவால்களை முன்வைக்கிறது. நாம் எமது அறிவுக்கெட்டிய வகையில் பழைய தீர்வுகளை (solutions) புதிய பிரச்சனைகளுக்கு பொருத்திப் பார்க்க விரும்புகிறோம். ஆனால் யாரொருவர் இயற்கையின் இந்த சவால்களுக்கு மிகச் சரியாக பதிலிறுக்கிறார்களோ அவர்கள் இயற்கைக்கு ஒரு சவாலாக இருக்கிறார்கள்" (once they answer the challenges appropriately, then they are not challenged. They are the challenge). புலிகளை நான் நம்புவதற்கு மிக ஆணித்தரமான காரணம் இதுதான்.

தமிழ்த் தேசிய விடுதலை என்பதே இன்றைய நிலையில் எமது பிரதான முரணிற்கான மிக முக்கியமான தீர்வாக எம் முன் இருக்கிறது.இந்த விடுதலை என்பது தமிழர் என்னும் அடையாளத்தை உடைய எவருக்கும் இப்போது இன்று அவசியமாக இருக்கிறது. நான் ஒரு தலித்தாக இருக்கலாம், நான் ஒரு பெண் ஆக இருக்கலாம் ஆனால் நான் ஒரு தமிழனாக இருப்பதாலையே இப்போது கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு தலித்தாக ஒரு பெண்ணாகப் போராடுவதற்கு முதலில் நான் உயிர் வாழ வேண்டும்.

இதில் எனது தனிப்பட்ட கருத்து இதுதான். மக்களில் பிரிவினைகளை உருவாக்குபவர்கள் (அது சாதியாகவோ அல்லது சமயமாகவோ இருக்கலாம்) அதில் முரண்களையும் உருவாக்குகின்றனர். எங்கெல்லாம் பிரிவினை இருக்கிறதோ அங்கெல்லாம் முரண்களும் இருக்கின்றன (whereever there is a division, there must be conflict and it leads to vilonce). எனவே முரண்களுக்கும் அதை தொடர்ந்து ஏற்படும் வன்முறைகளுக்கும் காரணகர்த்தாவாக இவர்களே இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பட்டும் படாமலும் என்று தலைப்பு வரைந்தால் மிக நன்றாக இருக்கும்.

தமிழச்சி விடுதலைப்புலிகளைப் பார்த்துக் குரைப்பதையிட்டோ, அல்லது ஈழத்தமிழர்களைத் தட்டுக் கழுவி என்று கேவலமாகத் திட்டியதற்காகவோ, பகுத்தறிவாளர்கள் எனத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் எல்லோரும் தமிழீழத்துக்கு எதிரானவர்கள் என்ற விவாதத்தை நாங்கள் யாரும் செய்யமாட்டோம்.

சொல்லப் போனால் காங்கிரஸ்காரனாகிய இந்து ராமையும், சோவையும் வைத்து இந்துக்கள் ஈழப்போராட்டத்துக்கு எதிரானவர்கள் என காட்டமுனையும் செய்கை அமையாது. எனவே துணிந்து நீங்கள் எழுதலாம். பட்டும், படாமலும் அவசியம் தானா?

  • தொடங்கியவர்

முரண்பாடுகளைத் தீர்க்கும் வழி முறையே அரசியல் என்னும் போது, அரசியல் இயக்கங்கள் என்பனவையும் முரண்பாடுகளின் அடிப்படையிலையே கட்டப்படுகின்றன.ஒரு மக்கட் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் பிரதானமான முரண்பாட்டை தீர்க்கும் வண்ணம் அந்த மக்கட் சமூகத்தில் இருந்து எழும் அரசியற் சக்தி என்பது அந்த பிரதான முரண்பாட்டிற்கான தீர்வின் அடிப்படையிலயே எழுகிறது.

மிக அடிப்படையில் இதை என்னால் ஏற்க முடியவில்லை. அரசியல் என்பது முரண்களை வளர்த்தே வந்துள்ளது. முரண்களை இது தீர்க்கும் என நான் நம்பவில்லை. மக்கட் சமூகத்தினுள்ளும், அதன் வெளியேயும் தோன்றும் முரண்கள் எல்லாமே அடிப்படையில் தனி மனிதனில் இருந்து கிளம்புவனவையே. இவற்றிற்கான காரணம், பிரச்சனைகளை தத்தம் சுய விருப்பு வெறுப்புக்களை கொண்டு மதிப்பிடுவதும், கையாள முற்படுவதும் தான். எனவே பிரச்சனைகளும் அதன் ஆணிவேரான முரண்களும் தீரவேண்டுமானால் முதலில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அந்த பிரச்சனையை "அதுவாகவே" (as it is) பார்க்க பழக வேண்டும். தீர்வும் அங்குதான் இருக்கிறது. இன்று தமிழர் எதிர்நோக்கும் மிகப் பெரும் சவால்களில் ஒன்று சிங்களர் "பிரச்சனையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்க மறுப்பதுதான். எனவே அறிவுக் கண்கள் திறக்காத வரை அவர்கள் முரணிலேயே வாழப் போகிறார்கள்.

இதில் அரசியல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.இப்போது எமது போராட்டம் ஏன் ஒரு அரசியற் போராட்டம் எனப் படுகிறது? எமக்கும் சிங்களவருக்குமான உறவு சார்ந்த முரணில் இருந்து தானே இது வருகிறது.இங்கு நாம் ஏன் அதற்குத் தீர்வாகத் தமிழ்ஈழம் வேண்டும் எங்கிறோம்.இது ஒரு அரசியற் தீர்வு தான்.ஆகவே போராட்டம் என்பது ஒரு தீர்வை நோக்கியதாகவே இருக்கிறது.தீர்வில்லாதா போராட்டம் நடைபெற முடியாது.ஆகவே இங்கே அரசியலென்று நான் சொன்னது தேர்தல் பாராளுமன்றம் என்பவை பற்றியது அல்ல என்பதை உணர்ந்தீர்கள் என்றால் நான் சொல்வதன் முழு அர்த்தமும் விளங்கும்.

'அந்தப் பிரச்சினையை அதுவாகவே பார்க்க வேண்டும்' என்பது எவ்வாறு சாத்தியமாகும்.ஒரே விடயத்தை அவர் அவர் அவரது நிலைப்பாடுகள் நலங்களில் இருந்தே பார்க்கிறார்கள்.இக்கே பார்வை என்பதே ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. நீங்கள் 'அதுவாகவே' என்று சொல்வதே உங்கள் பார்வை.எனக்கு இந்த 'அதுவாகவே ' என்பது வேறொன்றாகத் தெரிகிறது. நான் சொல்கிறேன் நீங்கள் அதை அதுவாகப் பார்க்கவில்லை என்று.ஏனெனில் உங்கள் அது என்பதுவும் எனது அது என்பதுவும் வேறு வேறானது..ஆகவே எல்லோரும் ஒரு விடயத்தை ஒரே மாதிரிப் பார்ப்பார்கள் என்பது எவ்வகையில் சாத்தியம் ஆகும்? நிதர்சனமும் அது அல்லவே?

ஆகவே இங்கே முரண் என்பது தீர்க்கப்படுவது இரண்டு பார்வைகளின் அரசியல் மோதலில்.இங்கே முரண்கள் முட்டி மோதும் மொழி ஆயுதப்போராட்டமாக இருக்கிறது.ஆயுதப்போராட்டம் என்பதே அரசியற் போராட்டத்தின் ஒரு வன்முறை வடிவம் தான்.

இதில் எனது தனிப்பட்ட கருத்து இதுதான். மக்களில் பிரிவினைகளை உருவாக்குபவர்கள் (அது சாதியாகவோ அல்லது சமயமாகவோ இருக்கலாம்) அதில் முரண்களையும் உருவாக்குகின்றனர். எங்கெல்லாம் பிரிவினை இருக்கிறதோ அங்கெல்லாம் முரண்களும் இருக்கின்றன (whereever there is a division, there must be conflict and it leads to vilonce). எனவே முரண்களுக்கும் அதை தொடர்ந்து ஏற்படும் வன்முறைகளுக்கும் காரணகர்த்தாவாக இவர்களே இருக்கின்றனர்.

மக்களில் ஏன் பிரிவினைகள் உருவாகின்றன என்று பார்த்தால் இது வரலாற்று ரீதியாக உருவான குழும அடையாளங்களில் இருந்து தான் உருவாகிறது.சாதி என்பதுவும் இனக் குழுமம் என்பதுவும் ஏன் சமயம் கூட பொதுவான வரலாற்று அனுபவத்தாலும் அதன் தொடர்ச்சியாலும் தான் உருவாகின்றன.இவை சமூக கட்டமைப்பு உறவு முறை சார்ந்தே உருவாகின்றன. ஆனால் இந்த சமூக அடையாளம் என்பது அவ்வளவு எழுதில் துறக்ககூடியது அல்ல.உதாரணமாக நாங்கள் ஏன் சிங்களவரோடு சண்டை பிடிக்க வேணும். நானும் மனிசன் அவனும் மனிசன் சரி நான் எனது தமிழன் என்னும் அடையாளததைத் துறந்து சிங்களவனாகவே மாறிவிடுகிறேன் என்று எம்மால் சொல்ல முடியுமா? செய்யமுடியுமா? எல்லாக் குழும அடையாளங்களும் போலியானவை சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் என்னும் உறவு முறையே அடிப்படையானது என்று மாக்ஸ் சொன்னார்.ஆனால் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று அறைகூவல் விடுத்தாலும் தேசியங்களைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் ஒன்று பட்டுப் போரடவில்லை.ஆகவே தேசிய இனக்குழு அடையளங்களைக் கடத்தல் என்பது இலகுவான காரியம் அல்ல.இனக்குழும அரசியல் என்பது வரலாற்று உறவு முறை சர்ந்ததாகவும் பொது அடையாளம் சர்ந்ததாகவும் உணர்வு நிலைப்படதாகவுமே இருக்கிறது.

இங்கே முரண்களை உருவாக்குபவர்கள் மனிதர்கள் தான்.அதனை ஏற்றுக் கொண்டு ஒரு பொது அடையாளத்திற்காகப் போராடுபவர்களும் மனிதர்கள் தான்.ஆகவே சமூக விலங்கான மனிதனில் இருந்து அடையாளம் சம்பந்தமான முரண்பாடுகளை பிரித்து விடமுடியாது.ஆனால் இந்த சுய அடையாளம் என்பதே மாறிக் கொண்டு தான் வந்திருக்கிறது.ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்த எனது அடையாளம் ஆபிரிக்கனா,திராவிடனா,தமிழனா? அதே கண்டத்தில் இருந்து வந்த சிங்களவனின் அடையாளம் என்ன? நாளை அவனதும் எனதும் அடையாளம் என்னவாக இருக்கும்?

நாளை புலத்தில் ,இங்கிலாத்தில் பிறக்கும் இன்றைய தமிழ்க் குழந்தைகளின் அடையாளம் என்ன? ஏசியனா? தமிழனா? இல்லை பாக்கியா? :D

அற்புதன் !! மிகவும் நல்லது.

இதில் அரசியல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.இப்போது எமது போராட்டம் ஏன் ஒரு அரசியற் போராட்டம் எனப் படுகிறது? எமக்கும் சிங்களவருக்குமான உறவு சார்ந்த முரணில் இருந்து தானே இது வருகிறது.இங்கு நாம் ஏன் அதற்குத் தீர்வாகத் தமிழ்ஈழம் வேண்டும் எங்கிறோம்.இது ஒரு அரசியற் தீர்வு தான்.ஆகவே போராட்டம் என்பது ஒரு தீர்வை நோக்கியதாகவே இருக்கிறது.தீர்வில்லாதா போராட்டம் நடைபெற முடியாது.ஆகவே இங்கே அரசியலென்று நான் சொன்னது தேர்தல் பாராளுமன்றம் என்பவை பற்றியது அல்ல என்பதை உணர்ந்தீர்கள் என்றால் நான் சொல்வதன் முழு அர்த்தமும் விளங்கும்.

ஆமாம். பாராளுமன்ற அரசியலை நான் கணக்கில் எடுக்கவில்லை. இதில் அரசியல் என்பது "ஒரு மக்கட் கூட்டம் தன் சக்தி, ஆளுமை என்பனவற்றை நிலைநிறுத்தும் வண்ணம் எடுக்கும் தீர்மானங்கள்" என்பதையும் இந்த திரியை வாசிக்கும் நண்பர்களுக்காக இணைத்து விடுகிறேன்.

சரி. இலங்கைத் தீவில் நடைபெறுவது வெறுமனே அரசியல் பிரச்சனை என்பதிலும், அது தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதே சாலப் பொருந்தும் என நினைக்கிறேன் (It is a problem of survival but politics).

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் போன்றவற்றிற்கு இடையில் நிகழ்வது அரசியற் பிரச்சனை. இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் விஞ்சும் விதமாக manipulate செய்ய முனைகின்றனர். அவ்வாறான அரசியல் முரண்களின்போது வெளிநாடுகளின் தடைகளும், புறந்தள்ளுகைகளும் இரு பகுதியினரையும் இறங்கி வர செய்ய உதவலாம்.

ஆனால் இலங்கை தீவில், தமிழர்களின் உயிர் வாழ்க்கைக்காக போராடும் புலிகள் மீது "அரசியல் அழுத்தங்கள்" என்ற போர்வையில் தடைகளை விதிப்பதும் "இறங்கி வா" என்று விடாமல் அழைப்பதும் "இது ஒரு அரசியல் பிரச்சனை" என்பதன் தவறான புரிதலா? இந்தப் பிரச்சனையை உண்மையில் தமிழரின் வாழ்வாதார பிரச்சனை என்ற கண்ணோட்டத்துடன் வெளிநாடுகள் அணுகி இருக்குமானால் தடைகள் விதிக்கப் பட்டிருக்க வேண்டியது சிங்கள அரசிற்கே. எனவே தமிழ் மண்ணில் நடைபெறுவது மேலோட்டமாக அரசியல் என்ற வகைக்குள் அடக்க முடியவில்லை. இந்த பிரச்சனை தொடங்கும்போது "இரூ வெவ்வேறான கொள்கை முரண்களுக்கிடையேயான" பிரச்சனையாக இது உருப்பெறவில்லை. அடக்குமுறைக்கு எதிராக எழுந்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புத்தான் எமது போராட்டம். அது அந்த சமூகத்தின் "வாழ்வாதார போராட்டம்". அதன்மேல் தடைகளை விதிப்பது முட்டாள் தனமானதும், அதை வெறுமனே அரசியல் என்ற இன்னொரு அடயாளத்தினுள் பிடித்து தள்ளி விடுவதுமாகும்.

மற்றது, இந்த பிரச்சனையானது "எமக்கும் சிங்களருக்கும்" இடையிலான உறவின்பால் பட்டதல்ல. உண்மையில் "சிங்களவருக்கும் எமக்குமான" உறவின்பால் பட்டது. பிரச்சனையின் மொத்த வடிவமாக இருப்பது சிங்களவர். நாமல்ல. அவர்கள் எம்மை துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள்.... பிரச்சனை இருப்பது அவர்களிடம்.

அரசியற் பிரச்சனைகளில் விட்டுக் கொடுப்புக்க்களின் மூலம் தீர்வுகள் எட்டப்படுகின்றன, உண்மைதான். சட்டம் அவற்றை அமுல் படுத்துகிறது. இவ்வாறான அரசியல் தீர்வு இலங்கையில் சாத்தியப்படுமா என்றால் நான் நம்பவில்லை. ஏன்?

எமது பிரச்சனையின் தீர்வு வெட்ட வெளிச்சமானது. "அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழரின் வெற்றி" என்பதுதான் அது. உண்மையில் இவ்வாறான தீர்வு இல்லாவிட்டால் எதிர்காலத்தில், இந்த தீவில் தமிழர்கள் அடிமையாக கூட வாழமுடியாதென்பதே உண்மை. தமிழரின் போராடும் குணம் என்பதை அறிந்துள்ள சிங்களரும், மற்றையோரும் சிறுகச் சிறுக அவர்களை அழித்தொழிப்பதையே தொழிலாக கொள்வர். எனவே எமக்கு இருவழித் தெரிவென்பது இல்லை. முடிவும் தெரிவும் ஒன்றேதான். இந்த முடிவு எப்பொழுது வரும்?

என்று சிங்களம் தன் இயலாமையை அல்லது தன் சொந்த முரண்பாடுகளை புரிந்து கொள்கிறதோ அன்றே இது தீர்க்கப் பட்டுவிடும். எனவே வெறும் அரசியல் ரீதியான தீர்வுகளோ, அன்றில் ஒப்பந்தங்களோ இதை தீர்க்கப் போவதில்லை. நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். எனவே இந்த பிரச்சனைய தீர்ப்பதென்பது, "பிரச்சனையை முற்று முழுதாக புரிந்துகொள்வது" என்பதுடன் முடிந்து விடுகிறது (இதில் வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்வதென்பதல்ல. மனதளவில், உடலளவில் புரிந்துகொள்ள வேண்டும்). எந்தக் கணத்தில் "முற்றாகவே இந்த பிரச்சனையை சிங்களம் புரிந்து கொள்கிறதோ அன்றே, அக்கணமே இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும்".

சிங்களம் தன் இயலாமையால், பொருத முடியாமல், ஒதுங்கிக் கொள்கிறது என வைத்துக் கொள்வோம். பிரச்சனை தீர்ந்ததா என்றால் இல்லை. அது என்றும் மீளக் கிளம்பலாம். எனவே அரசியல் தீர்வென்பது மிகவும் மேலோட்டமாக இந்த பிரச்சனையை தணிக்க உதவுமே அன்றி தீர்க்க உதவாது. பிரச்சனைக்கு காரணமானவர்களை உணரவைப்பதுதான் தீர்வாக அமையும். எமக்கான மிகப் பெரும் சவாலும் அதுதான்.

குறிப்பு: இப்பொழுது எனது வகுப்புக்களுக்கு செல்லவேண்டி இருப்பதால், இன்றிரவு மிகுதிக்கு எனது எண்ணங்களை பதிகின்றேன். மன்னிக்கவும்.

அந்தப் பிரச்சினையை அதுவாகவே பார்க்க வேண்டும்' என்பது எவ்வாறு சாத்தியமாகும்.ஒரே விடயத்தை அவர் அவர் அவரது நிலைப்பாடுகள் நலங்களில் இருந்தே பார்க்கிறார்கள்.இக்கே பார்வை என்பதே ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. நீங்கள் 'அதுவாகவே' என்று சொல்வதே உங்கள் பார்வை.எனக்கு இந்த 'அதுவாகவே ' என்பது வேறொன்றாகத் தெரிகிறது. நான் சொல்கிறேன் நீங்கள் அதை அதுவாகப் பார்க்கவில்லை என்று.ஏனெனில் உங்கள் அது என்பதுவும் எனது அது என்பதுவும் வேறு வேறானது..ஆகவே எல்லோரும் ஒரு விடயத்தை ஒரே மாதிரிப் பார்ப்பார்கள் என்பது எவ்வகையில் சாத்தியம் ஆகும்? நிதர்சனமும் அது அல்லவே?

இந்த விடயத்தை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் பொதுமைப் படுத்த முடியும். முதலில் "பிரச்சனை" என்பது என் தனிப்பட்ட பார்வையில் தங்கியுள்ளதா? இதை இன்னமும் சிறிது ஆழமாக பார்க்க விரும்புகிறேன். மனித வாழ்க்கையில், நாம் அடிப்படையில் இருவேறு முரண்களில்தான் என்றும் வாழ்கிறோம். ஒன்று - எம்மால் கட்டுப்படுத்தவோ அல்லது தாக்கம் செலுத்த முடியும் என்று நம்பும் விடயங்கள். மற்றது அவ்வாறாக இல்லாமல், எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இருக்கின்றது என்னும் விடயங்கள். இவ்விரு விடயங்கள் மீதான ஒவ்வொரு மனிதனின் அணுகுமுறையும் ஒரேமாதிரியே இருக்கின்றன. சுருக்கமாக சொல்லப் போனால் ஆதிமனிதனில் இருந்து "தொழில்நுட்ப ரீதியில்" நாம் மிகப்பெரும் முன்னேற்றம் அடைந்துவிட்டோம். ஆனால் உளவியல்ரீதியில் பெரியதாக மாற்றங்கள் ஏற்படவில்லை.

உதாரணத்திற்கு, நான் ஒரு மலையையோ அல்லது விருட்சம் ஒன்றையோ பார்த்து இரசிக்கிறேன் என வைத்துக் கொள்வோம். அடிமனதில், இந்த இயற்கையின் அம்சங்கள் மீது எனது ஆளுமையோ அல்லது தாக்கமோ இல்லை என எனக்கு தெரிகிறது. அதனால் என் சொந்த நியாயப்பாடுகள், கணிப்புகளுக்கு அப்பால் அதன் அழகை இரசிக்க முடிகிறது. அந்த விருட்சம், அதற்கே உரித்தான தொழிற்பாடுகள் என்பன என்னுடைய எண்ணங்களில் தங்கியிருக்கவில்லை என்ற உண்மை தெரிவதனால் "அதை அப்படியே" பார்க்க முடிகிறது. இதுகூட எனக்கும் இயற்கைக்குமான ஒரு தொடர்பாடல்தான்.

சரி. தொடர்பாடல்களை மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும்போது சிக்கல்கள் உருவாக்கபடுகின்றன. ஏலவே கூறியபடி, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயுரிய தொழிற்பாடு, பண்பு இருக்கின்றது. அதை எனது சொந்த கணிப்பீடு, நியாயப்பாடு இல்லாமல் "அது எப்படி இருக்கிறதோ அப்படியே" பார்க்க முடிகிறதா? இல்லை என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும். நான் ஒரு நண்பரை சந்திக்கிறேன் என்றால் உண்மையில் "நானும், அந்த நண்பர்மீது நானே என் சொந்த நியாயப்பாடுகள் மூலம் ஏற்படுத்தி வைத்திருக்கும் இமேஜும்" சந்திப்பதுதான். எனது தீர்மானங்கள், நடவடிக்கைகள் கூட அதை அடியொற்றியே இடம்பெறுகின்றன. இந்த இமேஜுக்கள் நல்லவையா கெட்டவையா என்பது வேறுவிடயம். பல பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கு எம்மையே அறியாமல் நாம் ஏற்படூத்டும் இந்த இடைநிலைதான் காரணம்.

நாம் சிந்திக்கிறோம். எமது சிந்தனையை எம்மால் எப்பொழுதும் அவதானிக்க முடிந்தால் மனம் செய்யும் இந்த புதிர் விளையாட்டை கண்டுகொள்ளலாம்.

எனவே "பிரச்சனை" என்பது எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் தங்கியிருக்கவில்லை. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவற்றை "முற்றாக புரிந்துகோண்டாலே" போதுமானது. அவ்வாறு புரிந்துகொள்ள "எமது சொந்த நியாயப்பாடுகள் அல்லாத" மிகத் தெளிந்த பார்வை வேண்டும். இவ்வாறான நிலையில் இருந்து எத்தனைபேர் அந்த பிரச்சனையை அணுகினாலும் அது எல்லோருக்க்கும் ஒரே விதமாகவே தெரியும். தனிமனித விருப்பு வெறுப்புக்களில் அது தங்கியிருப்பதில்லை.

ஆகவே இங்கே முரண் என்பது தீர்க்கப்படுவது இரண்டு பார்வைகளின் அரசியல் மோதலில்.இங்கே முரண்கள் முட்டி மோதும் மொழி ஆயுதப்போராட்டமாக இருக்கிறது.ஆயுதப்போராட்டம் என்பதே அரசியற் போராட்டத்தின் ஒரு வன்முறை வடிவம் தான்.

போராட்டம் என்பது எப்பொழுதுமே வன்முறைதான். இல்லையா? அது எண்ணாக்களால் வதைக்கப்படும் அகிம்சை என்றாலும் சரி, ஆயுதங்களால் வதைக்கப்படும் இம்சை என்றாலும் சரி. முரண்களிருக்கும் இடத்தில் எப்பொழுதுமே வன்முறை இருக்கும்.

மக்களில் ஏன் பிரிவினைகள் உருவாகின்றன என்று பார்த்தால் இது வரலாற்று ரீதியாக உருவான குழும அடையாளங்களில் இருந்து தான் உருவாகிறது.சாதி என்பதுவும் இனக் குழுமம் என்பதுவும் ஏன் சமயம் கூட பொதுவான வரலாற்று அனுபவத்தாலும் அதன் தொடர்ச்சியாலும் தான் உருவாகின்றன.இவை சமூக கட்டமைப்பு உறவு முறை சார்ந்தே உருவாகின்றன. ஆனால் இந்த சமூக அடையாளம் என்பது அவ்வளவு எழுதில் துறக்ககூடியது அல்ல.உதாரணமாக நாங்கள் ஏன் சிங்களவரோடு சண்டை பிடிக்க வேணும். நானும் மனிசன் அவனும் மனிசன் சரி நான் எனது தமிழன் என்னும் அடையாளததைத் துறந்து சிங்களவனாகவே மாறிவிடுகிறேன் என்று எம்மால் சொல்ல முடியுமா? செய்யமுடியுமா? எல்லாக் குழும அடையாளங்களும் போலியானவை சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் என்னும் உறவு முறையே அடிப்படையானது என்று மாக்ஸ் சொன்னார்.ஆனால் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று அறைகூவல் விடுத்தாலும் தேசியங்களைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் ஒன்று பட்டுப் போரடவில்லை.ஆகவே தேசிய இனக்குழு அடையளங்களைக் கடத்தல் என்பது இலகுவான காரியம் அல்ல.இனக்குழும அரசியல் என்பது வரலாற்று உறவு முறை சர்ந்ததாகவும் பொது அடையாளம் சர்ந்ததாகவும் உணர்வு நிலைப்படதாகவுமே இருக்கிறது.

ஆமாம். உண்மைதான். மனித குழுமங்களுக்கு அவற்றின் அடிப்படையான இயங்கு சக்தி "பாதுகாப்பு" என்ற ஒரு எண்ணத்தில் தங்கியுள்ளது. இதனால்தான் சாதியாக, சமயமாக பிரிவுகள் ஏற்படுகின்றன. நீங்கள் கூறியதுபோல் இனக்குழுமம் என்பதை விட்டு நீங்க மிகப் பெரும் உளவுரண் வேண்டும். இது எளிதானதல்ல. என்னை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் எமது சமூக உயிர் வாழ்வின் அடிப்படைக்கு இவ்வாறான ஒரு கட்டமைப்பு மிகமிக அவசியமானது. அதனால் இதுபற்றி மேலும் எழுத விரும்பவில்லை.

இங்கே முரண்களை உருவாக்குபவர்கள் மனிதர்கள் தான்.அதனை ஏற்றுக் கொண்டு ஒரு பொது அடையாளத்திற்காகப் போராடுபவர்களும் மனிதர்கள் தான்.ஆகவே சமூக விலங்கான மனிதனில் இருந்து அடையாளம் சம்பந்தமான முரண்பாடுகளை பிரித்து விடமுடியாது.ஆனால் இந்த சுய அடையாளம் என்பதே மாறிக் கொண்டு தான் வந்திருக்கிறது.ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்த எனது அடையாளம் ஆபிரிக்கனா,திராவிடனா,தமிழனா? அதே கண்டத்தில் இருந்து வந்த சிங்களவனின் அடையாளம் என்ன? நாளை அவனதும் எனதும் அடையாளம் என்னவாக இருக்கும்?

அற்புதன். :unsure::lol:

இந்த குறிப்பிட்ட விடயத்தைப் பற்றிய விரிவான கருத்தாடலை இப்போதைக்கு ஒத்திவைப்போம். சுதந்திர தமிழீழத்தில் இருந்துகொண்டு விவாதிக்கவேண்டிய விடயங்கள் இவை. தற்போது எழுதினால் பலருக்கும் குழப்பம் ஏற்படலாம்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

"யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்

அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்"

மாவோ சொன்னது :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.