Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

“மக்களாகிய நீங்கள் உள்ளூராட்சி தேர்தலில் எங்களுக்கு இதெண்டு விட்டீங்க எண்டா, நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம். நாங்கள் இதெண்டோணும் எண்டா, நீங்களும் எங்களுக்கு இதெண்டோணும். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டை இதெண்டுவம்” என்று அண்மையில் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பேசியதாக ஒரு தகவலினை வடமராட்சி நியூஸ் என்னும் முகநூற் பக்கத்தில் வாசித்தேன். அதனையொட்டி மேலும் சிலர் முகநூலில் இதெண்டு என்ற சொல்லை வைத்துச் சொற் சிலம்பம் ஆடி வருவதைக் காண முடிகின்றது.

நான் இளங்குமரனின் உரையினைக் கேட்கவில்லை. மேலுள்ளதில் உள்ளது போன்றா அவர் உரையாற்றியிருந்தார்? அறிந்தவர்கள் அறியத்தரவும்.

பொதுவாக பேச்சு வழக்கில் நாம் அதெண்டு இதெண்டு என்று பாவிப்பதுண்டு. அது , இது என்பதற்காக அவ்விதம் பாவிப்போம். உதாரணத்துக்கு எழுத்தாளர் க.நவம். செ.குணரத்தினம் அவர்களின் சிறுகதைகளில் வரும் கூற்றுக்களைப் பார்ப்போம்.

"இந்த நாடாவுக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃபீசிலை கனகாலம் வேலை. ஓவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது" ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.)

"ஆது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை எப்பிடிச் சமாளிக்கிறது? " ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.)

“இதென்னப்பா நீங்க மீன வாங்கித்து வரச் சொன்னா நீங்க சுனாமி அது இதெண்டு பூச்சாண்டி காட்டுறயள்?” (செ.குணரத்தினத்தின் 'மீன்' சிறுகதையில்)

இங்கு இதெண்டு என்பது இது என்பதைக் குறிக்கப் பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடமராட்சி நியூஸ் தகவலின்படி 'எங்களுக்கு இதெண்டு விட்டீங்க என்றால் நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம்.' என்னும் கூற்றின்படி இதெண்டு என்பது இது என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை.எங்களுக்கு உதவினால், அல்லது ஆதரவளித்தால் என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இளங்குமரன் இப்படித்தான் கூறினாரா? அல்லது வடமராட்சி நியூ௶

மேற்படி கூற்றை உள்ளடக்கிய உரையினை நான் கேட்கவில்லை. இவ்விதம் இதெண்டு என்னும் சொல்லைத் தாராளமாக இளங்குமரன் பாவித்திருந்தால் , இச்சொல் அவர் பிறந்த பிரதேசத்தில் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு சொல்லாகத் தெரிகின்றது. இது பற்றிக் கருத்தினை முகநூலில் தெரிவித்த எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் "வடமராட்சி தென்மராட்சியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த முதியவர்களிடம் இச்சொல் அறுபது முதல் எழுபவது வரையான காலத்தில் பேச்சுவழக்கில் பாவனையில் இருந்ததா என்று கேட்டுப்பாருங்கள். கிண்டல் அடிக்கும் எத்தனை பேருக்கு, இயத்து, ஏதனம், கோர்க்காலி,சும்மாடு போன்ற இன்று வழக்கிலில்லாத சொற்கள் தெரியும்? " என்று கூறியிருந்தார்.

எஸ்.கே.விக்கினேஸ்வரன் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கருத்தின் மூலம் இச்சொல் அப்பகுதியில் பாவிக்கப்படும் சொல்லாக இருப்பதை உணர முடிகின்றது. இச்சொல் தெரியாததால் அதனை வைத்து நையாண்டி செய்வது நாகரிகமான செயல் அல்ல. அது ஒரு பிரதேசத்து மக்கள் பாவிக்கும் பிரதேச மொழியினை அவமானப்படுத்துவ்தாகும். ஒருவர் இவ்விதமொரு சொல்லினைப் பாவித்தால் ,இவ்விதமானதொரு சொல் ஒரு பிரதேசத்து மக்களால் பாவிக்கப்படுகின்றது என்பதை உனர்ந்து அதனை மேலும் அறிய ஆவல் கொள்வேன். இதெண்டு என்பதை இளங்குமரன் பாவிக்கும் தன்மையிலிருந்து அதன் அர்த்தம் உதவினால் அல்லது ஆதரவளித்தால் என்னும் பொருள் படும்போல் தெரிகின்றது.

இச்சொல்லின் பாவனையை அறிந்தவர்கள் இது பற்றி எனக்கும் இதெண்டு விட்டீங்கள் என்றால், நானும் இது பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்வேன். அதற்கு நன்றியுடையவனாகவும் இருப்பேன். இச்சொல்லை எமக்கு அறியத்தந்ததறகாகப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனுக்கு நன்றி.

இது பற்றிச் சாட்ஜிபிடியிடன் கேட்டேன்.அதன் பதில் இப்படியிருந்தது: "மன்னிக்கவும், முன்னதாக 'இதெண்டு' என்ற சொல்லுக்கு தமிழ் மொழியில் ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லை என்று தெரிவித்தேன். ஆனால், உங்கள் கேள்வியை மேலும் ஆராய்ந்தபோது, 'இதண்டு' என்ற சொல் இலங்கைத் தமிழிலும், குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இச்சொல் பற்றிய கூடுதல் விளக்கங்கள் அல்லது பயன்பாட்டு உதாரணங்கள் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்."

இது எப்படி இருக்கு? சாட் ஜிபிடிக்கும் யாராவது இது பற்றி விளக்கம் கொடுத்தால் ,அதன் அறிவாற்றலும் மேலும் அதிகரிக்கும். இதைச் செய்வீர்களா?

May be an image of 1 person, beard, smiling and musical instrument

Navaratnam Giritharan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

“இதெண்டு”…. என்ற ஆராய்ச்சி சுவராசியமாக உள்ளது.

பேச்சுவழக்கில் நானும் இந்தச் சொல்லை பாவிப்பேன்.

உதாரணம்: இது ஒரு இதெண்டு சொல்லிக் கொண்டு திரியிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் இதன் காரணம் மொழிவரட்சி. மொழி ஆளுமை குறைபாடு.

ஆங்கிலம் பேசும்போது பலர் யூ நோ யூ நோ என்று கூறுவார்கள். வசனத்தை முடிக்கும்போது யூ நோ என்று முடிப்பார்கள். இதுவும் ஒருவித மொழி ஆளுமை குறைபாடே.

குறிப்பிட்ட மொழிகளில் நிறைய தரமான புத்தகங்கள் வாசித்தால் மொழி ஆளுமையை விருத்தி செய்யலாம் என்று கூறுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

“இதெண்டு”…. என்ற ஆராய்ச்சி சுவராசியமாக உள்ளது.

பேச்சுவழக்கில் நானும் இந்தச் சொல்லை பாவிப்பேன்.

உதாரணம்: இது ஒரு இதெண்டு சொல்லிக் கொண்டு திரியிறார். 😂

அதெண்டால் உண்மை தான்.😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

நான் நினைக்கின்றேன் இதன் காரணம் மொழிவரட்சி. மொழி ஆளுமை குறைபாடு.

ஆங்கிலம் பேசும்போது பலர் யூ நோ யூ நோ என்று கூறுவார்கள். வசனத்தை முடிக்கும்போது யூ நோ என்று முடிப்பார்கள். இதுவும் ஒருவித மொழி ஆளுமை குறைபாடே.

குறிப்பிட்ட மொழிகளில் நிறைய தரமான புத்தகங்கள் வாசித்தால் மொழி ஆளுமையை விருத்தி செய்யலாம் என்று கூறுவார்கள்.

நியாயம்… நீங்கள் கூறிய காரணம் சிந்திக்கக் கூடியதாகவும், சரியானதாகவுமே உள்ளது. 👍🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.