Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-398.jpg?resize=750%2C375&ssl

காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!

தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்த எட்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கோபமடைந்துள்ளதாக கூறியுள்ளது.

மார்ச் 23 அன்று அல்-ஹஷாஷினில் ஒன்பது பேர் கொண்ட அம்பியூலன்ஸ் குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக IFRC தெரிவித்துள்ளது.

ஒரு வாரமாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஒரு மருத்துவர் இன்னும் காணவில்லை.

பாலஸ்தீன ரெட் க்ரெசண்ட் சொசைட்டி (PRCS), தங்கள் ஊழியர்களின் உடல்களும், காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களின் உடல்களும், ஒரு ஐ.நா. ஊழியரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியது.

அந்த வாகனத் தொடரணி மீது யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பதை அவர்கள் கூறவில்லை – ஆனால் ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைக் குற்றம் சாட்டியது.

மூத்த ஹமாஸ் அதிகாரி பாசெம் நைம் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களை குறிவைத்து கொல்வது ஜெனீவா உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும், போர்க்குற்றமாகவும் அமைகிறது” என்று அவர் கூறினார்.

ஜனவரியில் தொடங்கிய முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்து, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கிய பின்னர், மார்ச் 18 அன்று காசாவில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 900 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியபோது போர் தொடங்கியது, சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேரை காசாவிற்கு சிறைபிடித்தனர்.

இஸ்ரேல் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலுடன் பதிலளித்தது, இது 50,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றது என்று காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1426876

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் மீட்பு - செஞ்சிலுவை சங்கம் கடும் சீற்றம் - இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி

Published By: RAJEEBAN 31 MAR, 2025 | 12:46 PM

image

இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வாரத்தின் பின்னர் 8 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் உட்பட 14 உடல்கள் காசாவின் தென்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் தெரிவித்துள்ளன.

சர்வதேச செம்பிறை மற்றும் செஞ்சிலுவை குழுக்களை சேர்ந்த மருத்துவ பணியாளர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டு ஏழு நாட்கள் மௌனத்திற்கு பின்னர் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள செம்பிறை குழுவும், செஞ்சிலுவை குழுவும் கடந்த ஒரு வாரகாலமாக தாக்குதல் இடம்பெற்ற ரபாவிற்கு தாங்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

GnTpdpCXAAAVCzx.jpg

8 மருத்துவபணியாளர்களின் உடல்களுடன்  காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆறு பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட உடல்களில்  ஐக்கிய நாடுகளின் ஊழியர் ஒருவரின் உடலும் உள்ளதாகவும் பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவபணியாளரை காணவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

NKme-SDN.jpg

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் மருத்துவ சகாக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன் இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளது.

GnUBNbNW0AEwRXI.jpg

நான் மனமுடைந்துபோயுள்ளேன், என தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜகன் சப்பகெய்ன் இந்த அர்ப்பணிப்புள்ள  அம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்த மக்களை காப்பாற்ற சென்று கொண்டிருந்தார்கள், அவர்களின் வாகனங்கள் மீது இலச்சினை காணப்பட்டது. அது அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும், அம்புலன்ஸ்களில் தெளிவாக செஞ்சிலுவை என குறிப்பிடப்பட்டிருந்தது, அவர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் பாதுகாப்பாக போய் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/210719

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவபணியாளர்களையும் மீட்பு பணியாளரையும் ஒவ்;வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் - ஐநா

Published By: Rajeeban

01 Apr, 2025 | 11:49 AM

image

இஸ்ரேலிய படையினர் 15 மருத்துவஉதவியாளர்களையும் மீட்பு பணியாளர் ஒருவரையும் ஒவ்வொருவராக சுட்டுக்கொன்ற பின்னர் பாரிய மனித புதைகுழியில் புதைத்தனர்  என ஐநா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் பணியாளர்களும், சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் இஸ்ரேலிய படையினரால் சுடப்பட்ட தங்கள் சகாவை மீட்பதற்காக சென்றுகொண்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்காக அலுவலகம் ,அவர்களின் வாகனத்தில் செஞ்சிலுவை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

gaza_red_cross_killed_3.jpg

ரபா நகரின் டெல் அல் சுல்தான் நகரில்  இஸ்ரேலிய படையினர் அவர்களின் வாகனத்தின்  மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஐநா உயிரிழந்த ஒருவரின் கரங்கள் பின்னால் கட்டப்பட்டுள்ளன இதன் காரணமாக இவர் கைதுசெய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளார்  என கருதலாம் என தெரிவித்துள்ளது.

எகிப்தின் எல்லையில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்த மார்ச்23ம்திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு செம்பிறை பணியாளர் காணாமல்போயுள்ளார்.

ஏழு நாட்களிற்கு முன்னர் சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் பாலஸ்தீன செம்பிறை சமூக பணியாளர்களும் அம்புலன்ஸ் மூலம் இந்த பகுதிக்கு வந்தனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் தலைவர் ஜொனதன் விட்டல்,அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து இலக்குவைக்கப்பட்டனர், பின்னர் அவர்களது உடல்களை எடுத்து பாரிய மனித புதைகுழிக்குள் புதைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவர்களின் உடல்களை அவர்களின் சீருடைகள் கையுறைகள் போன்றவற்றுடன் மீட்டோம், அவர்கள் உயிர்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்தனர்,ஆனால் அவர்களின் வாழ்க்கையே மனித புதைகுழிக்குள் முடிந்துபோய்விட்டது என  விட்டல் தெரிவித்துள்ளார்.

gaza_redcross_killed.jpg

இந்த அம்புலன்ஸ்கள மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்டன,ஐநாவின் வாகனமும் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்டவர்களில் ஐநாவின்பணியாளர் ஒருவரும் உள்ளார் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான அமைப்பின் தலைவர்  பிலிப்பே லசரானி தெரிவித்துள்ளார்.

ரபாவில் கொல்லப்பட்ட எங்கள் சகாக்களின் உடல் நேற்று மீட்கப்பட்டது,மனிதாபிமான பணியாளர்களின் உடல்களுடன் சேர்த்து அவருடைய உடலை மீட்டோம்,அவர்கள் அனைவரும் ஆழமற்ற புதைகுழிகளில் கைவிடப்பட்டிருந்தனர்,இது மனித கௌரவத்தை மோசமாக மீறும் செயல்,என லசரானி சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹெட்லைட்கள் அல்லது அவசரகால சமிக்ஞைகள் இல்லாமல் தங்கள் படையினரை நோக்கி சந்தேகத்திற்கு இடமான முறையில் முன்னேறிய பல வாகனங்கள் மீது தங்கள் படையினர்துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டமை  ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

gaza_red_cross_killed4.jpg

இந்த வாகனங்கள் அந்த பகுதிக்கு தாங்கள் வரவுள்ளமை குறித்து இஸ்ரேலிய படையினருக்கு தகவல் வழங்கவில்லை ,அந்த பகுதி மோதல் இடம்பெறும் பகுதியாக காணப்பட்டது,என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் டெல் அல் சுல்தான் பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகின்றது,அந்த பகுதிக்கு செல்வதற்கு நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்புகொள்ளவேண்டியதில்லை என செம்பிறைசமூகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/210816

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன துணைமருத்துவர்கள் படுகொலை - இஸ்ரேல் தெரிவிப்பதை நிராகரித்தார் உயிர் பிழைத்தவர்

Published By: RAJEEBAN 03 APR, 2025 | 12:30 PM

image

பாலஸ்தீன துணைமருத்துவர்களை  இஸ்ரேல் கொலை செய்தவேளை அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் இது தொடர்பில் இஸ்ரேல் தெரிவித்துள்ளவற்றை நிராகரித்துள்ளார்.

எனது சகாக்களிற்கு என்ன நடந்ததுஎன்பதை பார்த்த  உயிர்தப்பிய ஒரேயொரு நபர் நான்தான் என  முன்தெர் அபெட் கையடக்க தொலைபேசியில் தனது சகாக்களின் படங்களை பார்த்தவாறு தெரிவித்தார்.

மார்ச் 23ம் திகதி அம்புலன்ஸின் முன்பக்கத்திலிருந்த தனது இரண்டு சகாக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்புலன்ஸின் பின்பக்கத்தின் ஊடாக நிலத்தில் குதித்து இவர் உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

gaza_abulance_killing_sur.jpg

நாங்கள் அதிகாலையில் எங்களின் தலைமையகத்திலிருந்து வெளியேறினோம் என அவர் காசாவில் பணிபுரியும் பிபிசியின் நம்பகதன்மை மிக்க சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு காயமடைந்தவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும்பாலஸ்தீன செம்பிறை சங்கத்தினர்சிவில் பாதுகாப்பு அமைப்பினர்இபாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரவாவில் கூடி அதிகாலையில் புறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"4.40 மணியளவில் முதல் இரண்டு வாகனங்கள் புறப்பட்டு சென்றனஇ4.50 அளவில் இறுதி வாகனம் வந்தது ஐந்து மணியளவில் ஐநா அமைப்பின் கார் மீது வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது" என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 9 ஹமாஸ் உறுப்பினர்களும் பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் ஒரு உறுப்பினரும் கொல்லப்பட்டதாக  இஸ்ரேல்  தெரிவித்துள்ளது.

எனினும் முன்தெர் இதனை நிராகரித்துள்ளார்.

'பகலும் இரவும் ஒரே மாதிரியே செயற்படுவோம் வெளி உள் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இது பாலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் என தெரிவிப்பதற்கான அனைத்து விடயமும் காணப்பட்டது. வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வரை அதன் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்."

'என்னை இஸ்ரேலிய படையினர் வாகனத்தின் சிதைவுகளிற்குள் இருந்து வெளியே இழுத்தனர். கண்களை கட்டினர் கைதுசெய்தனர். 15 மணித்தியலாங்கள் விசாரணை செய்தனர்" என அவர் தெரிவித்துள்ளார்.

அம்புலன்சினை ஹமாஸ் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அனைவரும் பொது மக்கள் நாங்கள்  எந்த குழுவையும் சேர்ந்தவர்கள் இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக அம்புலன்ஸ் சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம் வேறு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/211013

  • கருத்துக்கள உறவுகள்

கொன்று புதைக்கப்பட்ட அவசரகால ஊழியர்கள் - தவறிழைத்ததாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தெற்கு காஸாவில் மார்ச் 23 அன்று 15 அவசர கால ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த விஷயத்தில் தங்களது ராணுவ வீரர்கள் தவறு செய்ததாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

ரஃபாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, பாலத்தீன செம்பிறை சங்கத்துக்குச் சொந்தமான ஒரு வாகனம், ஐநாவின் கார் மற்றும் காஸாவின் சிவில் பாதுகாப்புக்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வண்டி தாக்குதலுக்கு உள்ளானது.

ஹெட்லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது.

ஆனால், கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் படம்பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரியவிட்டிருப்பதை காண முடிகிறது.

இதில் குறைந்தது 6 பேர் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் வழங்கவில்லை. அதே நேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது.

சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஐடிஎஃப் அதிகாரி, ராணுவம் முன்னதாக மூன்று ஹமாஸ் உறுப்பினர்கள் இருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.

ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதியை நெருங்கியபோது, வான்வழி கண்காணிப்பாளர்கள், வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்ததாகவும், ஹமாஸ் காரின் அருகே ஆம்புலன்ஸ்கள் நின்றபோது வீரர்கள் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cly1nw70xx6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.