Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"புதிய ஆரம்பம்"

யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர். அப்படியான சூழல் காலம் செல்லச் செல்ல மாற்றம் அடைந்து கொண்டு வந்தது. என்றாலும் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளைச் செய்வதும் தொடர்கிறது.

இந்த யாழ்ப்பாண சூழலில் தான், நெல் வயல்களின் அமைதிக்கும் பனை மரங்களின் ஓசைகளுக்கும் மத்தியில் காவியா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த காவியாவின் நாட்கள், வாழ்வதற்கான போராட்டத்தால் நிரம்பி நிறைந்தது. அவளது பெற்றோர் முழு நேரம் வயல்களில் உழைத்தும் சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டினார்கள், அதே சமயம் காவியா தங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னேற்ற வாழ்க்கையைக் கனவு கண்டாள். அது தனக்கும் தன் சமூகத்துக்கும் ஒரு 'புதிய ஆரம்பம்' தரும் என்று திடமாக நம்பினாள்.

பாகுபாடு மற்றும் கஷ்டங்களை தன் சமூகமும், தன் குடும்பமும் எதிர்கொண்ட போதிலும், காவியா அந்த தலைவிதியை மாற்றுவதற்கான கடுமையான உறுதியுடன் இருந்தாள். அதற்கு கல்வியே அவளுடைய நம்பிக்கையின் விளக்காக இருந்தது.

"வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"

கல்வியின் முன்னுரிமை பற்றி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 'நான்கு பிரிவுகளில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்' என்ற பொன்னான வாசகம் அவள் மனதில் ஒரு தெம்பைக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல,

"மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு"

என்ற திருவள்ளுவரின் 'உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்கா விட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்ற வரை விட ஒருபடி தாழ்வே' என்ற அறிவுரை அவளை மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும், அவள் தனது கிராம பள்ளியை அடைய தூசி நிறைந்த மண் பாதைகளில் வெறுங்காலுடன் நடந்தாள். அவளுடைய அறிவுப் பசி மற்றும் அவளுடைய அர்ப்பணிப்பு இவைகளைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தனக்கு கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தாள். அவள் மனதில் பதிந்த, எப்படியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற அவா, அவளுக்குள் ஏற்படுத்திய தைரியம், வெற்றியின் கதைகளை திறந்து அவளது அபிலாஷைகளைத் தூண்டத் துணையாகத் நின்றது.

"காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறிய 'சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம்' பொதுவுடமைக் கருத்தை அவள் முணுமுணுக்காத நாள் ஒன்றும் இல்லை.

ஒரு நாள், காவியாவின் திறனை உணர்ந்த, ஒரு நல்ல உள்ளம் கொண்ட அவளின் வகுப்பு ஆசிரியை, அவள் மேல் விசேட கவனம் செலுத்த தொடங்கினார். இந்த ஆசிரியையின் வழிகாட்டலாலும் அவர் கொடுத்த ஊக்கத்தாலும், காவியா தனது படிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மிகவும் சிறந்து விளங்கினாள். அதனால் அவளது கல்வித் திறமை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பயணச் சீட்டாக அமைந்தது.

தளராத உறுதியுடன் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, காவியா கொழும்பில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவுக்கு, முழு உதவித்தொகையைப் பெற்று படிக்கச் சென்றாள். தன் கிராமத்தையும், தன் வீட்டின் பரிச்சயத்தையும் விட்டுவிட்டு, இந்தப் புதிய அத்தியாயத்தை கொஞ்சம் நடுக்கத்துடனும், ஆனால் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொண்டாள்.

பல்கலைக்கழக வாழ்க்கையில் பல சவால்கள் அங்கும் சந்திக்க நேரிட்டாலும் காவியா, அவ்வற்றை எல்லாம் தாண்டி, அவள் இதயத்தில், நெடுஞ்செழியன், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் விதைத்த விதைகளின் வேர்களில் இருந்து வலிமையைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் விரைவில் அவளது பேராசிரியர்கள் மற்றும் சகாக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

"புதிய ஆரம்பம்" ஒன்று அவளைக் மறைத்துக் கொண்டு இருந்த சாதி என்ற முகில்களைக் கிழித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தது. என்றாலும் பொன்னம்பலம் இராமநாதன், செல்லப்பா சுந்தரலிங்கம் போன்ற படித்த தலைவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களை அவள் மறக்கவில்லை. எனவே தனது புதிய ஆரம்பத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக தந்திரமாக எடுத்து வைத்தாள்.

ஆகவே தன்னைத் திடப்படுத்தவும், தன்னை சூழ்ந்து இருப்பவர்களை தயார் படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், காவியா சமூக செயல்பாட்டின் மீதான தனது ஆர்வத்தை தனக்குள் பெருக்கினாள். எனவே ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். இது இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு வரை சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளின் தடைகளைத் தாண்டிப் பரவி, பலரைத் அது தூண்டியது.

உயர்தரத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, காவியா ஒரு புதிய நோக்கத்துடன் தனது யாழ்ப்பாணத்துக்கு திரும்பினாள். அவள் தனது கடமை நேரம் தவிர, நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு பயிற்சி கல்லூரி நிறுவி, அந்த குழந்தைகளுக்கு மேல் அதிகமான கற்றலுக்கான உதவி வழங்கி, அவர்களின் அறியாமையின் சங்கிலிகளை உடைத்து அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோலை வழங்கும் 'புதிய ஆரம்பத்தை' ஏற்படுத்தினாள். இது, இந்த அவளுடைய கதை யாழ்ப்பாணத்தின் குடாநாட்டில் மட்டும் இன்றி, இலங்கை முழுவதும் எதிரொலித்து, எண்ணற்ற இளம் உள்ளங்களின் இதயங்களில் நம்பிக்கையின் தீப்பொறிகளைப் பற்றவைத்தது.

காவியாவின் விடாமுயற்சி மற்றும் வெற்றியின் கதை சமூக மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாறி, "புதிய ஆரம்பம்" இலங்கையில், குறிப்பாக தமிழர் சமூகத்தில் தோன்றியது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது "புதிய ஆரம்பம்" மட்டுமே!.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

420886158_10224578648476454_445970015288

420496269_10224578643076319_841644296769


  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.