Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-04-02-at-09.41.00.jp

ஜப்பான் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான BUNGO மற்றும் ETAJIMA என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக (2025 ஏப்ரல் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

WhatsApp-Image-2025-04-02-at-09.40.59.jp

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Uraga-Class Minesweeper Tender வகைக்கு சொந்தமான ‘BUNGO’ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் TANAKA Koji பணியாற்றுகிறார்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Minesweeper வகைக்கு சொந்தமான ETAJIMA என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ODA Takayuki பணியாற்றுகிறார்.

WhatsApp-Image-2025-04-02-at-09.40.59-1.

மேலும், இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அன்று கப்பல்களானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427130

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஜப்பானிய கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன

Published By: DIGITAL DESK 3 02 APR, 2025 | 12:49 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான புங்கோ (எம்.எஸ்.டி. - 464) மற்றும் இடாஜிமா (எம்.எஸ்.ஓ - 306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றுக்காக செவ்வாய்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. 

குறித்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உராகா-கிளாஸ் மைன்ஸ்வீபர் டென்டர் வகைக்கு சொந்தமான புங்கோ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர்டனாகா கோஜி பணியாற்றுகிறார்.

இதேபோன்று மைன்ஸ்வீபர் வகைக்கு சொந்தமான இடாஜிமா என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஒடா டாகாயுகி பணியாற்றுகிறார்.

மேலும், இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை (04) நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.

image_d06a19add1.jpg

image_abad26d2cb.jpg

https://www.virakesari.lk/article/210892

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.