Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15 APR, 2025 | 10:30 AM

image

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

489351439_710462247993509_29132193303230

https://www.virakesari.lk/article/212018

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலை எச்சரிக்கை!

Published By: DIGITAL DESK 3 16 APR, 2025 | 10:54 AM

image

நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட  மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தவிர்க்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

  • நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும். அதிளவு நீர் பருகவும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்கவும்.

  • வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம்  முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெப்பநிலை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

491524154_984964127157402_39967610885886

490918252_984964123824069_53095156171142

https://www.virakesari.lk/article/212096

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் வெப்பநிலை; விழிப்புடன் இருக்கவும்!

18 APR, 2025 | 11:13 AM

image

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை (18) எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும்  இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல்  மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில்  ஈடுபடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு  பொதுமக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வெப்பம் தொடர்பான நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு  நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

491256466_986483420338806_24809306714427

491943247_986483417005473_71488768619366

https://www.virakesari.lk/article/212267

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

Published By: DIGITAL DESK 3 20 APR, 2025 | 11:24 AM

image

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, வெளிப்புறங்களில் வேலையின் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் முக்கியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

492091938_987216893598792_14610211063021

491336638_987216900265458_31434778452525

https://www.virakesari.lk/article/212426

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.