Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 12:43 PM

image

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 2 ஆம் திகதி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

இதற்கு ஏனைய நாடுகள் பணிந்த நிலையில், சீனா தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக வரியையும் அதிகரித்தது.

சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் விதிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தி உள்ளது.

இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. 

ஏற்கனவே கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்க டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. 

சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. 

எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/211989

  • கருத்துக்கள உறவுகள்

The-US-China-Trade-War-V2-copy.jpg?resiz

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து ஒட்டுமொத்த உலக நாடுகளின் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தார்.

சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் தவிர்த்துள்ளார்.

மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்தான் அமெரிக்காவுக்கு கனிமங்கள், முக்கிய உலோகங்கள், காந்தம் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக்கூறுகள் முற்றிலும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனாவின் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும்போது, அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம், யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற கனரக அரிய மண் தாதுக்கள் அடங்கிய ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது.

எனவே ,சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் ராணுவத் தளவாட உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து வரும் அரிய மண் தாதுக்களை அமெரிக்காவிலுள்ள லாக்ஹீட் மார்ட்டின், டெஸ்லா, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த வகை சீன அரிய மண் தாதுக்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளில் ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதால் அங்கு உற்பத்தி பாதிக்கப்படும் பேரபாயம் நேரிட உள்ளது.

சீனாவால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிய பூமி உலோகங்கள் காந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார கார்கள், ட்ரோன்கள், ரோபோக்கள், ஏவுகணைகள், விண்கலம், பெட்ரோலில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல வகையான மின்சார மோட்டார்களுக்கு இந்த வகையான அரசிய உலோகங்கள் மிகவும் அவசியமாகும்.

தற்போது திடீரென இந்த வகை உலோகங்கள், அரிய மண் தாதுக்களை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்திருப்பதால் அமெரிக்க அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஏற்றுமதி தடையால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1428484

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பலவீனத்தில் குறி வைக்கும் சீனா - என்ன நடக்கிறது?

சீனா, அமெரிக்கா, அரிய தாதுக்கள், ஏற்றுமதி, தொழில்துறை

பட மூலாதாரம், Reuters

கட்டுரை தகவல்

  • ஆஸ்மண்ட் சியா

  • பிபிசி செய்தியாளர்

  • 18 அக்டோபர் 2025, 01:49 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரம், சீனாவின் வர்த்தக அமைச்சகம் '2025-ஆம் ஆண்டின் அறிவிப்பு எண். 62' என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது.

ஆனால் இது வெறும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமல்ல. அமெரிக்காவுடன் சீனா செய்து கொண்டுள்ள வரி ஒப்பந்தத்தையே இது உலுக்கியுள்ளது.

இந்த அறிவிப்பு, சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது. இது அரிய தாதுக்களின் உலகளாவிய விநியோகத்தில், சீனாவின் பிடியை இறுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் இந்தச் செய்தி டொனால்ட் டிரம்பிற்கு நினைவூட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தின் உற்பத்திக்கும் இன்றியமையாததாக இருக்கும் அரிய தாதுக்களை எடுப்பதில் சீனா கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

புதிய விதிகளின் கீழ், இனி வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிய அளவிலான அரிய தாதுக்களைக் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூட சீன அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் மற்றும் அவை எதற்காகப் பயன்பட போகின்றன என்பதையும் அறிவிக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்குப் பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிப்பதாகவும், முக்கிய மென்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தினார்.

"இது சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை. அவர்கள் முழு சுதந்திர உலகின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை நோக்கி ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர், நாங்கள் அதை ஏற்கப் போவதில்லை" என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.

அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்

அரிய தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்கா 'வேண்டுமென்றே தேவையற்ற தவறான புரிதலையும் பீதியையும் தூண்டிவிட்டதாக' வியாழக்கிழமையன்று (அக்டோபர் 16) சீனா கூறியது.

"ஏற்றுமதி உரிம விண்ணப்பங்கள் இணக்கமானவையாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்தால், அவை அங்கீகரிக்கப்படும்" என்றும் சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த வாரம், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் ஒன்றுக்கொன்று கப்பல்களுக்கு புதிய துறைமுக வரிகளை விதித்தன.

மே மாதத்தில் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகள் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம் மூலம் 'வரிகள் நடைமுறைக்கு வருவது நிறுத்தப்பட்டிருந்தது'. அதன் பிறகு நிலவி வந்த பல மாத அமைதி சமீபத்திய பதற்றங்களால் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மாத இறுதியில், டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 'அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்' சீனாவிற்கு மேலாதிக்கத்தை அளிக்கும் என நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க விநியோகச் சங்கிலிகளில் உள்ள பலவீனங்களைக் குறிவைப்பதால், அவை 'வர்த்தக அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும்' என்று ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக விரிவுரையாளர் நவோயிஸ் மெக்டோனாக் கூறினார்.

"அமெரிக்கா விரும்பிய பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை, இந்த நிகழ்வு உண்மையில் பாதித்துள்ளது," என்று அவர் கூறினார்.

சீனா, அமெரிக்கா, அரிய தாதுக்கள், ஏற்றுமதி, தொழில்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எப்-35 போன்ற போர் விமானங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் மிக முக்கியமானவை.

அரிய தாதுக்களின் தேவை

சோலார் பேனல்கள், மின்சார கார்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் அவசியம்.

உதாரணமாக, ஒரு எப்-35 போர் விமானத்திற்கு அதன் ஸ்டெல்த் பூச்சுகள், மோட்டார்கள், ரேடார்கள் மற்றும் பிற கூறுகளுக்கு 400 கிலோவிற்கும் அதிகமான அரிய தாதுக்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார கார் மோட்டார்களில் காந்தங்களுக்குத் தேவையான உலோகங்களின் உலகளாவிய விநியோகத்தில் தோராயமாக 70% சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியிலிருந்து வருகிறது என்று 'நியூலேண்ட் குளோபல் குழுமத்தின்' ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நடாஷா ஜா பாஸ்கர் கூறினார்.

உலகளாவிய அரிய தாதுக்களை எடுக்கும் திறனில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடுமையாக உழைத்துள்ளது என்று சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கனிம ஆராய்ச்சியாளர் மெரினா ஜாங் கூறினார்.

"சீனா இந்தத் துறையில் கணிசமான திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அதன் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் குழு, அதன் போட்டியாளர்களை விட பல மடங்கு முன்னேறியுள்ளது." என்கிறார்.

அரிய தாதுக்களைப் பெறுவதில் சீனாவைச் சார்ந்திருப்பதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்க, அமெரிக்காவும் பிற நாடுகளும் பெருமளவில் முதலீடு செய்து வரும் நிலையில், அந்த இலக்கை அடைவதில் இருந்து அந்நாடுகள் இன்னும் வெகு தொலைவில் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் அரிய தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், சீனாவுக்கு சவால் விடும் நாடாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது. ஆனால் அதன் உற்பத்தி உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சியடையாததால், தாதுக்கள் செயலாக்கம் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்ததாக உள்ளது என்று ஜாங் கூறுகிறார்.

"அமெரிக்காவும் அதன் அனைத்து நட்பு நாடுகளும் அரிய தாதுக்கள் செயலாக்கத்தை தேசிய திட்டமாக மாற்றினாலும், சீனாவின் இடத்தை எட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று நான் கூறுவேன்." என்கிறார்.

"சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை"

புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் சீனா எடுத்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன. அப்போதைய நடவடிக்கைகள் உலகளாவிய விநியோக நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான தொடர் ஒப்பந்தங்கள் அந்த நெருக்கடியை சற்று தளர்த்தின.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் சீன அரிய தாதுக்களின் ஏற்றுமதி 30%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக சீனாவின் சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால் ஏற்றுமதி வீழ்ச்சியால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் வருடாந்திர 18.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் அரிய தாதுக்கள் மிகச் சிறிய அளவே பங்களிக்கின்றன என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோபியா கலன்ட்சாகோஸ் கூறினார்.

சில மதிப்பீடுகள், அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளின் மதிப்பை சீனாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1% க்கும் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன.

சீனாவிற்கு அரிய மண் தாதுக்களின் பொருளாதார மதிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், அவற்றின் மூலோபாய மதிப்பு 'மிகப்பெரியது' என்றும், அவை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவிற்கு அதிக செல்வாக்கை அளிக்கின்றன என்றும் கலன்ட்சாகோஸ் கூறுகிறார்.

சீனாவை 'துரோகி' என்று குற்றம்சாட்டிய போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளார் அமெரிக்காவின் ஸ்காட் பெசென்ட்.

"சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன், இதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைத் தணிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று பெசென்ட் கூறினார்.

வியாழக்கிழமை அமெரிக்க தனியார் குழுமமான பிளாக்ஸ்டோனின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேனுடனான சந்திப்பின் போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-உம் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

"இரு தரப்பும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும், வேறுபாடுகளை முறையாகத் தீர்க்க வேண்டும் மற்றும் சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்" என்று வாங் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் கலன்ட்சாகோஸின் கூற்றுப்படி, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்குத் ஏற்ற நடவடிக்கைகளை சீனா சமீபத்தில் எடுத்துள்ளது.

அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளைக் குறைப்பதன் மூலம், ஒரு சாதகமான தீர்வைப் பெறும் வகையில் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க, சீனா ஒரு வலுவான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய உத்தியைக் கண்டறிந்துள்ளது என்று பாஸ்கர் கூறினார்.

சீனா, அமெரிக்கா, அரிய தாதுக்கள், ஏற்றுமதி, தொழில்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவைன் 'நம்ப முடியாது' என்று அமெரிக்க உயர் அதிகாரிகள் ஸ்காட் பெசென்ட் மற்றும் ஜேமிசன் கிரீர் கடுமையாக சாடியுள்ளனர்.

சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாவோ யாங், 'குறுகிய காலத்திற்கு சீனாவின் கை ஓங்கி உள்ள நிலையில், அமெரிக்காவிடமும் சில மூலோபாய உத்திகள் இருக்கலாம்' என்று நம்புகிறார்.

அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் சீனாவின் உற்பத்தியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளதால், அமெரிக்கா வரிகளைக் குறைக்க முன்வந்தால், இது சீனாவிற்கு சாதகமாக இருக்கும் என்று பேராசிரியர் ஜியாவோ கூறினார்.

சீனாவின் பொருளாதாரம் அது தயாரிக்கும் பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தையே சார்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 27% குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன.

சீனாவின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுக்க, அமெரிக்கா கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் சீனாவை அச்சுறுத்தக்கூடும் என்று பேராசிரியர் மெக்டோனாக் கூறினார்.

உதாரணமாக, அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் உயர்நிலை குறைக்கடத்திகள் (semiconductor) தேவையை குறிவைத்து, என்விடியாவின் (Nvidia) மிகவும் மேம்பட்ட சிப்களை சீனா வாங்குவதைத் தடுத்துள்ளது.

ஆனால் அது குறைந்த அளவிலான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் தொழில்நுட்பத் துறையை குறிவைக்கும் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும், ஆனால் 'அதை முழுமையாக நிறுத்திவிடாது' என்று பேராசிரியர் மெக்டோனா கூறினார்.

சீனா தனது நீண்டகால இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்கவும் தயாராக உள்ளது என்பதை அதன் சமீபத்திய பொருளாதார உத்தி மூலம் காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் கீழ் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் சீனாவால் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் சீனா இந்த அரிய தாதுக்கள் விநியோகங்களைத் துண்டித்தால், அது உண்மையில் அனைத்து நாடுகளின் தொழில்துறைகளையும் பாதிக்கும். அதுதான் பெரிய வித்தியாசம்." என்கிறார் பேராசிரியர் மெக்டோனா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgkvdn5y7mo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.