Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21 APR, 2025 | 09:02 AM

image

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அனைத்து இலங்கை மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். 

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

அத்துடன் குறித்த பகுதியில் இன்று நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், காலை 8.45 அளவில் நாடளாவிய ரீதியாக உள்ள சகல வழிபாட்டு ஸ்தலங்களிலும் மணி ஓசை எழுப்பப்படவுள்ளதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/212491

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு 

21 APR, 2025 | 09:57 AM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் அவர்கள் நம்பிக்கை மீது வைத்த தளம்பாத சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத்தாக்குதலின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பு கொச்சிக்கை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.

இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறையின் தலைவர் மார்சல்லோ கர்தினால் செமேராறோ ஆண்டகையினால் 2024 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் கொழும்பு கொச்சிக்டை புனித அந்ததோனியார் திருத்தலத்திலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலும் தங்களது உயிரை இழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்களும் ஏனையோரின் பெயர்களும் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் அவர்கள் நம்பிக்கை மீது வைத்த தளம்பாத சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ஆண்டகைக்கு அறிவித்துள்ளார். 

இவர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாற்று சூழலும் சமூக சூழலும் மதத்தின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் தங்கள் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைகளையும் பொதுவாக எடுத்துக்கொண்டு அவர்கள் காட்டிய மனப்பாங்கான வீரத்தையும் திருத்துறை மதிப்பிட்டுக்கொண்டு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

மேலும் அதே தினத்தில் உயிரிழந்த வேறு மதங்களைச் சார்ந்த 7 பேரும் மிக்க மரியாதையுடன் நினைவு கூரப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்டுள்ள இந்த அகராதியில் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக தூண்டப்பட்ட வன்முறையால் நம்பிக்கை மீதுள்ள பொறுப்பு தங்கள் இரக்கத்தை சிந்தியவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இவர்கள் எமது அன்புக்குரிய சகோதர சகோதரிகளும் பிள்ளைகளும் ஆவார்கள். இவர்கள் காட்டிய நம்பிக்கையின் சாட்சியத்தை இறுதி வரை பாதுகாக்கவும் பரப்பவும் நினைவுகளை நிலைத்திருக்கச் செய்யவும் இந்த அறிவிப்பு வழங்கப்படுகின்றது என்று இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/212494

  • கருத்துக்கள உறவுகள்

IMG_3798-new-scaled.jpg?resize=750%2C375

மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தியிருந்தனர்

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் ஏற்பாட்டினையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு காலை 9.05 தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின்
திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி நிமிட அஞ்சலி மௌன செலுத்தினர்.

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுக்கப்பு கடமையில் பொலிசார் விமானப்படையினர் ஈடுபட்டதுடன் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது .

https://athavannews.com/2025/1428989

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20250421-WA0024.jpg?resize=750%2C375

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது

யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குததந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, சுடரேற்றல், மெழுகுவர்த்திகளைப் பற்ற வைத்து அஞ்சலிக்கப்பட்டிருந்ததுடன் இதன்போது விசேட அதிரடிப்படைமற்றும் பொலிசார் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1428976

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.